‘சர்வதேச அழுத்தத்துக்கு அரசாங்கமே பொறுப்பு’ – ஐதேக

yogarajanஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் கடந்து ஆண்டு தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பதே இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரான ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவை கடந்த ஆண்டில் இலங்கை குறித்த தனது தீர்மானத்தில், இலங்கை தனது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளதாக கூறும் யோகராஜன் அவர்கள் ஐதேகவும் அதனையே வலியுறுத்துவதாகவும் கூறினார்.

அத்துடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு இலங்கை அரசங்கம் கடந்த காலத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஐநா மனித உரிமைகள் பேரவையால் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை போன்ற அழுத்தங்கள் தீர்மானமாக முன்வைக்கப்பட்டால், அதனை ஏற்பதைத்தவிர இலங்கைக்கு வேறு வழி எதுவும் கிடையாது என்றும் அவர் கூறினார். ஏனெனில், மனித உரிமைகள் பேரவை குறித்த ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே ஏற்று இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்படியான ஒரு சர்வதேச விசணை எதுவும் வந்தால், அதற்கு முழுமையான பொறுப்பை தற்போதை அரசாங்கமே ஏற்கவேண்டும் என்றும் யோகராஜன் தெரிவித்தார்.

TAGS: