சிலாங்கூரில் பிஎன் கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்களை அதிகரிக்கும் பொருட்டு சிலாங்கூரில் உள்ள 22,000 இளைஞர்களுக்கு பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் மோட்டார் கைக்கிள் தலைக்கவசங்களை வழங்கியுள்ளார்.
அந்தத் தலைக்கவசத்தின் முன்புறத்தில் ‘IM4U’ என எழுதப்பட்டுள்ளது. பின்புறத்தில் பிஎன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்தத் தலைக்கவசங்களை விநியோகம் செய்வதற்கு Kelab Putera 1Malaysia ஆதரவு அளித்துள்ளது.
பிஎன் கூட்டணிக்கு சிலாங்கூர் முழுவதும் பிரச்சாரம் செய்யும் இளைஞர்களுக்கு அந்தத் தலைக்கவசம் கொடுக்கப்படும்.
ஷா அலாம் Politeknik-ல் இன்று நிகழ்ந்த நாட்டுப் பற்றுடைய சிலாங்கூர் இளைஞர் கூட்டத்தில் கலந்து
கொண்ட பின்னர் நஜிப் அந்தத் தலைக்கவசங்களை வழங்கினார்.
பக்காத்தான் நிறைவேற்றாத வாக்குறுதிகளினால் தனித்து வாழும் தாய்மார்களும் முதிய குடிமக்களும் ‘சிரமப்படுவதாக’ கூறிக் கொண்ட அவர், அவர்களுக்கு உதவிகளை வழங்குவதாகவும் உறுதி அளித்தார்.
சிலாங்கூரில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாக கூறிய அவர் அதன் காரணமாக அந்த மாநிலத்தில் உள்ள குடிமக்கள் தண்ணீரைச் சுமந்து கொண்டு படிக்கட்டுக்களில் ஏற வேண்டியுள்ளதாகச் சொன்னர்.
“நாங்கள் அந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டதும் எல்லா தண்ணீர் பிரச்னைகளையும் தீர்த்து விடுவோம்,”என சிலாங்கூர் மாநில தேர்தல் எந்திரத்தின் தலைவருமான நஜிப் சொன்னார்.