நான்கு லட்சம் டாலர்களுக்கு ஏலம் போன ‘ போல்ட்’ புறா

china_birdமின்னல் வேகத்தில் பறக்கும் போல்ட் எனும் பெயருடைய ஒரு புறா உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அந்த ஆண் புறா ஒரு சீன தொழிலதிபருக்கு நான்கு லட்சம் டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.

ஒரு வயதாகும் அந்தப் புறா பெல்ஜியம் நாட்டில் வளர்க்கப்பட்டது.

பெல்ஜியத்தில் போட்டிகளில் பறக்கும் வேகமான பறவைகள் ஏலம் விடப்பட்ட போதே இந்தப் புறாவை அந்த சீன தொழிலதிபர் வாங்கியுள்ளார்.

இந்த ஏலத்தில் பெரும்பாலான பறவைகளை சீனா மற்றும் தாய்வான் நாட்டிலிருந்தவர்களே வாங்கியுள்ளனர்.

இந்தப் புறாவை வளர்த்த லியோ ஹெரிமன்ஸ் பெல்ஜியப் புறாக்களை வளர்ப்பதில் பிரபலமானவர்.

தற்போது நடைபெற்ற ஏலத்தில் அவர் தன்னிடம் இருந்த மொத்த பறவைகளையும் ஐம்பது லட்சம் டாலர்களுக்கும் அதிகமான தொகைக்கு விற்றுள்ளார்.

இந்த அளவுக்கு பணம் கொடுத்து ஒரு புறாவை வாங்குவது விலை மதிப்பிலாத ஒரு கலைப் பொருளை வாங்குவது போல என்று போட்டிகளில் பங்குபெறும் புறாக்களை வளர்க்கும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெயர் தெரியாத ஒருவரின் ஓவியத்தைவிட பிக்காஸோவின் ஒரு ஓவியம் பல மடங்கு மதிப்பு வாய்ந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.