மட்டக்களப்பில் புத்தர் சிலை வைக்க நீதிமன்றம் தடை

srilanka_protes_batticaloaமட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயிலில் பிள்ளையாரடி சந்தியில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு நீதிமன்றத்தினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் சிலை வைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் வேண்டுகோளின் பேரில் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உள்ளுர் மக்கள் எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, இதற்கான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும் கோரினார்கள்.

குறித்த ஆர்பாட்டம் தொடர்பாக காவல்துறை மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில் குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பது பொதுத் தொல்லை ஏற்படுத்தும் என குறிப்பிட்டு அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரினர்.

காவல் துறையின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி என். எம். எம். அப்துல்லாஹ், சிலை வைப்பதற்து தடை உத்தரவை பிறப்பித்ததோடு அதற்கான வேலைகளையும் நிறுத்துமாறு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

-BBC

TAGS: