‘பக்காத்தான் நாடாளுமன்ற பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் சடங்கைப் புறக்கணிக்காது’

parlimen   பக்காத்தான் ராக்யாட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) 13வது நாடாளுமன்றக்  கூட்டத் தொடரைப் புறக்கணிக்க மாட்டார்கள்.

ஜுன் 24 நாடாளுமன்றத்தில் டிஏபி, பிகேஆர், பாஸ் ஆகியவற்றைச் சேர்ந்த  எதிரணி எம்பி-க்கள் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வர் என
எதிர்பார்க்கப்படுவதாக கர்பால் சொன்னார்.

“எனக்குத் தெரிந்த வரையில் பிகேஆர் ஆலோசகர் அன்வார் இப்ராஹிம் உட்பட  அவர்கள் அனைவரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கு கொள்வர்,” என புக்கிட்  குளுகோர் எம்பி-யுமான கர்பால் பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.

ஜுன் 24ல் தொடங்கும் புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பதவி
உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் சடங்கைப் புறக்கணிப்பது பற்றி பிகேஆர்  எம்பி-க்கள் பரிசீலிக்கக் கூடும் என்ற தகவல்கள் மீது அவர் கருத்துரைத்தார்.

எதிர்த்தரப்புத் தலைவர் என்ற முறையில் அன்வார் விரைவில் அந்த விவகாரம்  மீது அறிக்கை விடுப்பார் என்றும் கர்பால் தெரிவித்தார்

-பெர்னாமா