இலங்கை போன்று ஏனைய நாடுகளிலும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட வேண்டுமென்று இந்தியப் தலைமையமைச்சர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இதன்பொருட்டு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இந்திய தலைமையமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான நாடு என குறிப்பிட்டுள்ள அவர் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் அனைத்து நாடுகளும் ஒரே விதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு அனைத்து நாடுகளும் ஒரேவிதத்தில் செயற்படுவது கடினமாக இருக்குமாயினும்- இந்தியா ஏனைய நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள திட சங்கட்பம் பூண்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

























