முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்களை ஷரியா நீதிமன்றத்தில வாதாட அனுமதிக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்கிறார் கா. ஆறுமுகம்.
கூட்டரசுப் பிரதேசத்தில் ஷாரியா நீதிமன்றங்களில் முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்கள் வாதாட அனுமதிக்கும் முறையீட்டு நீதிமன்ற முடிவு இஸ்லாமிய அமைப்புக்களில் உள்ள பதவிகள் தொடர்பாக பல பிரச்னைகளை ஏற்படுத்தும் என மலேசிய முஸ்லிம் வழக்குரைஞர் மன்றம் கூறுயுள்ளது.
இது சார்பாக கருத்துரைத்த சுவராம் தலைவர் கா. ஆறுமுகம், “நாட்டின் அரசமைபு சட்ட்த்திற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள இந்த முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை முஸ்லிம் வழக்குரைஞர் மன்றம் ஏற்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
விக்டோரியா ஜெயசிலி மார்ட்டின் (வயது 51) ஷரியா சட்டம் பயின்றவர். 2011-இல் ஷரியா நீதிமன்றத்தில் தான் ஆஜராகுவதை, 1993 ஷரியா வழக்கறிஞர் விதிமுறைகள், தடை செய்வது சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பதிவு செய்தார்.
அதில் அந்த விதிமுறைகள் கூட்டரசு அரசமைப்பு சட்டவிதிகள் 5, 8 மற்றும் 10 ஆகியவற்றுக்கு முரண்பாடானவை என்ற வாதத்தை வைத்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அவரின் வழக்கை தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து அவர் செய்த மேல்முறையீட்டில் தற்போது வெற்றி கண்டுள்ளார்.
இந்த வழக்கின் தீர்ப்பு மிகவும் முக்கியமானது என்கிறார் வழக்கறிஞருமான ஆறுமுகம். மதமாற்றத்தினால் பல வகையான பிரச்சனைகளை இஸ்லாம் அல்லாத குடும்பத்தினர்கள் ஆளாகிறார்கள். உதாரணமாக கணவன் அல்லது மனைவி என்று ஒருவர் மதம் மாறினால் இன்னொருவரும் அவர்களது குழந்தைகளும் பாதிப்படைகிறார்கள்.
இது சார்பான வழக்கை ஷரியா நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய முடியும். இதில் சிக்கல் என்னவென்றால் முஸ்லிமாக உள்ளவர் மட்டுமே ஷரியா நீதி மன்றத்தில் ஆஜராக முடியும். இந்துவாக உள்ள ஒருவருக்கு உரிமை கேட்டு போரட முஸ்லீம் ஷரியா வழக்கறிஞர்கள் எளிதாக் முன்வருவதில்லை என்கிறார் ஆறுமுகம்.
“பெயர் மாற்றம் சார்பாக ஈப்போவில் ஒரு ஷரியா வழக்கறிஞரை தேட ஆறுமாதம் ஆனது” என்கிறார் சல்பியா என்ற சுமதி (உண்மை பெயர் அல்ல). “கேஸ் கொடுத்து மூன்று வருடம் ஆகிவிட்டது. ஆனால் சாதகமான தீர்ப்பு இன்னமும் கிடைக்கவில்லை” என்கிறார்.
[செய்தி : பிரசன்னா, செம்பருத்தி.காம்]
முஸ்லிம் அல்லாத வழக்குரைஞர்களை வாதாட எப்படி அனுமதி கொடுப்பானுங்க இந்த நாட்டிலே ,இவனுங்க தான் இன வெறியுடன் அலையுரானுங்க்கள், எப்படி இவனுங்களுக்கு புத்தி வரும்!
நல்ல தீர்ப்பு, படித்த மேல் தட்டு வர்கத்தினர் குறிப்பாக இஸ்லாம் அல்லாத மாற்றுமத சகோதர வழக்குரைஞர்கள் இஸ்லாத்தை பற்றி நன்றாக புரிந்துகொள்வார்கள். எல்ல புகழும் இறைவனுக்கே.
இஸ்லாமிய மதத்தில் இது போன்ற குளறுபடிகள் கிடையாது. முக்கியமாக மத மாற்று விதிகள் தெழிவாக உள்ளன. ஆனால் இதனை நடைமுறைப் படுத்தும் ஆசாமிகளின் அடாவடுத்தனமே இது.
புரிந்துக்கொண்டு???? இஸ்லாமியர்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கிறார்கள் என்றால் இஸ்லாம் அல்லாத நாடுள்; மற்றும் மற்ற மதத்தவர்களும் சேர்ந்துவாழும் நாடுகளில்தான்.. உதாரணம் இங்கு தமிழர்களும் சீனர்களும் இல்லாவிட்டால் இஸ்லாமுக்குள்ளேயே அடிச்சிட்டு சாவார்கள்.. இதற்கு பல இஸ்லாம் நாடுகள் உதாரணம்.. இஸ்லாம் மிகவும் அற்புதமான மார்க்கம்.. மக்கள் உண்மையான மார்க்கவாதிகள், மற்றும் முழுமையாக அல்லாவின் விசுவாசமுள்ளவர்களிடம் சொல்லுங்கள். அனைத்து உயிர்களும் அல்லாவின் படைப்பு. இஸ்லாம் அல்லாதார் உட்பட ..அனைத்து உயிர்களும் இன்புற்றிருக்கவேண்டும்.
மெட்ரிகுலேஷன் இடம் மாதிரி இதற்கும் தெரு ஆர்ப்பாட்டம் பண்ணத்தான் வேண்டுமா? அப்போதான் ஒரு நல்ல தீர்வு பிறக்குமென்றால் அதற்கும் நாம் தயாராக வேண்டும்.
இதற்கெல்லாம் ஒரு தீர்வு உண்டு. இஸ்லாம் மதம் போல. எவன் ஒருவன் ஹிந்து மதத்தில் இருந்து வெளியாகிரானோ அவனுக்கு மரண தண்டனை என்று அறிவிக்க வேண்டும்.
ஒரு உண்மையான இந்து மார்கத்தை கடைபிடிக்கும் இந்து மற்ற மதத்தை உயர்த்தியோ தாழ்த்தியோ பேசமாட்டார். ஒரு மனிதன் தன் தொப்புள் கொடி உறவுகளின் (முனோர்கள் ) சந்ததியில் வரும் தெய்வ நம்பிகையை கடைபிடித்தாலே மற்ற மதத்தின் நினைப்பு வராது. நம் மதத்தை பற்றி தெரிந்துகொள்ளவே நிறைய உள்ளது . அதை தெரிதுகொள்ள முயற்சி செய்வது கிடையாது, சில சபலபுதிக்கரார்கள் செய்யும் தவறால் (மத மாற்றத்தால்) ஒரு தலைமுறையே காணாமல் போகிறது. இதை இந்துக்கள் உணர வேண்டும். இதை இந்து மார்கத்தில் இருப்பவர்கள் உணரும் வரை இது போன்ற அறைவேக்காடுகள் இருக்கவே செய்யும். மத மாற்றமே திருட்டுத்தனமகவே செயல்படும்போது எப்படி ஷரியா நீதி மன்றத்தில் நம்மை அனுமதிப்பார்கள்???