505 கறுப்பு தினப் பேரணி நடப்புகள்

1 rally disperseபாடாங் மெர்போக் பேரணி இரவு மணி 7 வாக்கில் முடிவுக்கு வரும் என்று கூறப்பட்டிருந்தாலும் ஐந்து மணிக்கே சிலர் கலைந்து செல்ல முற்பட்டனர். புகைமூட்டம், வெப்பம், களைப்பு போன்ற காரணங்களை அவர்கள் கூறினர்.

Anything But Umno அமைப்பின் பேச்சாளர் ஹரிஸ் இப்ராகிம்,  இசி தலைவர்கள் பதவி விலகும்வரை யாரும் அந்த இடத்தைவிட்டு அகல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

மாலை மணி 4.40-க்கு, கோலாலும்பூர் மாநராட்சி (டிபிகேஎல்) அமலாக்க அதிகாரிகள் இருவர் பாடாங் மெர்போக்கில் போடப்பட்டிருந்த கூடாரங்களை அகற்றும்படி கேட்டுக்கொண்டார்கள். கூட்டத்தினருக்கு அது பிடிக்கவில்லை. அவர்களைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒரு சிறு ‘தள்ளுமுள்ளு’ நிகழ்ந்தது.

1 rally vanஅந்த அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற வேண்டுமென்று கூட்டத்தினர் கூறினர்.  அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தபோது அவர்களில் ஒருவர் பிடித்துத் தள்ளப்பட்டார். அதனால் ஆத்திரமடைந்த அவர் கூட்டத்தில் இருந்த ஒருவரைப் பிடித்து கீழே தள்ளினார்.

நிலைமை மேலும் மோசமாகாமல், மற்ற டிபிகேஎல் அதிகாரிகளும் பாஸ் அமலாக்க பிரிவினரும் அவரை டிபிகேஎல் வாகனம் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

ஆத்திரமுற்ற கூட்டத்தினர் சிலர் அந்த வாகனத்தைச் சூழ்ந்துகொண்டார்கள்.  ஆனால், போலீஸ் உதவியுடன் அது அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

1 rally 1பேரணியில் உரையாற்றிய  மூத்த சமூக ஆர்வலர் ஹிஷாமுடின் ரயிஸ், அரசாங்கத்தைத் தேர்தல்வழி மாற்றுவது முடியாத செயல் என்றார்.

“அது சாத்தியமற்றது என்றுதான் எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன்.

“ஜாலான்ராயா, ஜாலான் ராயா (தெருவில் இறங்குவதுதான் ஒரே வழி)”, என்றவர் திரும்பத் திரும்பக் கூவினார்.

இசி திங்கள்கிழமை பதவி விலக வேண்டும். இல்லையேல், இளைஞர்கள் இசி பதவி விலகும்வரை இளைஞர்கள் அங்கு கூடாரமிட்டுத்  தங்குவர் என்றவர் எச்சரித்தார்.

1 rally hattaபாஸ் கோலா கிராய் எம்பி ஹட்டா ரம்லி-யும், அழியா மை விவகாரம் தொடர்பில் இசி தலைவர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எடுத்தொலித்தார்.

இசி தலைவர் அப்துல் அசீஸ் யூசுப், அவ்விவகாரம் தம் வாழ்க்கையில் மிகவும் வருத்தம் தரும் விவகாரம் என்று கூறியிருந்தாலும் அதற்காக அவரை மன்னிக்க முடியாது , அவர் பதவி விலகத்தான் வேண்டும் என்று ஹட்டா (இடம்)  வலியுறுத்தினார்.

 

1 rally nijarபேரணியில் பேசிய பேராக்கின் முன்னாள் மந்திரி புசார் நிஜார் ஜமாலுடின் பேராக்கில் பக்காத்தான் ரக்யாட் 55 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றது, பிஎன்னுக்குக் கிடைத்தது 44 விழுக்காடுதான் என்றார்.

அதுவே மக்கள் பிஎன்னை நிராகரித்தார்கள் என்பதைக் காண்பிக்கிறது.

பாஸ் வழக்குரைஞர்கள் எட்டு தேர்தல் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாக அவர் தெரிவித்தார். பிஎன் இரண்டு இடங்கள் கூடுதலாக வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகிறது.

“எட்டில் இரண்டில் நாம் வெற்றிபெற்றால்கூட (மந்திரி புசார்) ஜம்ரி (அப்துல் காடிர்) விழுவார்”, என்று  நிஜார் கூறினார்.

 

 

 

 

TAGS: