இந்தோனேசியாவில் காட்டுத் தீயை உண்டுபண்ணி தமது காற்றுமண்டலத்தை மாசுபடுத்திய நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சிங்கபூர், மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்தக் காடுகளை எரித்து அங்கு செம்பணை தோட்டங்களை உருவாக்கிவருவதாக கிரீன்பீஸ் என்ற சுற்றுச்சூழல் அமைப்பு கூறுகிறது.
தேவைப்பட்டால், இதில் ஈடுபட்டுள்ள சிங்கப்பூர் நிறுவனங்களை இலக்குவைத்து சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று சிங்கப்பூர் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
எல்லா நிறுவனங்களுக்கு எதிராகவும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டிய தலையாய பொறுப்பு இந்தோனேசியாவிடமே இருப்பதாகவும் அவர் கூறினார்.
எனினும் சிங்கப்பூரில் மாசுமண்டலம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கி வானத்தில் நீலம் தென்படத் தொடங்கியுள்ளது.
கடந்த வெள்ளியன்று 401 பிஎஸ்ஐ வரை சென்ற மாசு மண்டலத்தின் அளவு, இன்று காலை 73 பிஎஸ்ஐ வரை குறைந்திருந்தது.
காற்று மாசடைந்துள்ளதால் இந்தப் பிராந்தியத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -BBC
மிதி பட்டாலும் மதி பிரகாசமாக இருக்கிறதே உங்களுக்கு சார் !