‘சுங்கை மூடா ஆறு பினாங்கு நோக்கி ஓடுவதைத் தடுக்க வேண்டும் என்பதில் கெடா கெராக்கான் இளைஞர் பகுதிக்கு உடன்பாடில்லை.
திங்கள்கிழமை அம்னோவின் பக்கார் பாத்தா சட்டமன்ற உறுப்பினர் அஹ்மட் பாஷா முகம்மட் ஹனிபாவால் முன்வைக்கப்பட்ட அந்த ஆலோசனையைத் தாம் ஏற்கவில்லை என மாநில கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங் கூறினார்.
“கெடா, பினாங்கு மக்களுக்கிடையே மனக் கசப்பைத் தவிர்க்க அவ்விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதே நல்லது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கேராகனுக்கு சொஞ்சமாவது சூடு சொரனை இருக்கு . மக்களுக்கு பாதகமானதை தைரியமாக சொல்கிறார்கள். ஆனா நம்ம ஆளுங்க அதான் MIC டப்பாக்கள் எங்கே போனார்கள் ? எல்லா விவாதமும் முடிந்து வீட்டுக்கு புறப்படும் போது வருவார்கள் , ஆமாம் என்று தலையை ஆட்டிவிட்டு போய்விடுவார்கள். அதுவும் எதற்கு தலையை ஆட்டினோம்மென்று வழியில் PA வை கேட்பார் !! இதுதான் சமுதாய கட்சி !!