‘பள்ளிக்கூடங்கள் நாட்டை ஒன்றுபடுத்துவதற்குப் பதில் பிளவுபடுத்துகின்றன’

schoolsபள்ளிக்கூட முறையின் வழி ஒற்றுமையை ஏற்படுத்த நமது அரசியல்வாதிகள்  மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்மறையான விளைவுகளைத் தந்து மலேசிய  சமுதாயத்தை மென்மேலும் பிளவுபடுத்தியுள்ளதாக ஜனநாயக பொருளாதார  விவகார ஆய்வுக் கழகத்தின் (Ideas) தலைமை நிர்வாக அதிகாரி வான் சைபுல்  வான் ஜேன் கூறுகிறார்.

அவர் கல்வி சமநிலைப்படுத்துகிறதா அல்லது பிளவுபடுத்துகிறதா என்ற  தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் நேற்று பேசினார்.ideas1

தாய் மொழிப் பள்ளிகள் வளர்ச்சி அடைவதைக் காணத் தாம் விரும்புவதாகவும்  வான் சைபுல் சொன்னார். பயிற்று மொழி உட்பட கல்வி விஷயத்தை  பெற்றோரிடமே விட்டு விடுவது நல்லது; ‘புத்ரா ஜெயாவில் தொலை தூரத்தில்  உள்ள கொள்கை வகுப்பாளர்களிடம் அல்ல” என்றார் அவர்.

பள்ளிக்கூட நிர்வாகங்கள் அரசியல்வாதிகளிடமிருந்து அகற்றப்பட்டு
பரவலாக்கப்படும் வரையில் பள்ளிக்கூடங்கள் வழியாக ஒற்றுமையை ஏற்படுத்தும்  எந்தப் பேச்சும் பிளவுபடுத்துவதாகவே இருக்கும் என்றும் வான் சைபுல்  சொன்னார்.

“கல்வி நம்மைப் பிரிக்கவில்லை. கல்வி முறைக்கு பின்னணியில் உள்ள அரசியல்  ஆட்டமே நம்மைப் பிளவுபடுத்துகின்றது.”

“மக்கள் தங்களை ஆதரிக்கும்படி செய்ய வேண்டிய கட்டாயம் அரசியல்வாதிகளுக்கு உள்ளது. நமது பிள்ளைகளுடைய எதிர்காலத்தை முடிவு  செய்வதற்கான விரிவான அதிகாரம் அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதே  பெரிய பிரச்னை ஆகும்.”