அசைவத்துக்கு நோ சொல்லும் நிர்வாணப் போராட்டம்

vegan_day_001பிரித்தானியாவின் ஆர்வலர்கள் சிலர் அசைவம் சாப்பிடுவதை கண்டித்து நிர்வாண போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிற உலக சைவ உணவாளர் தினம் கடந்த 1ம் திகதி பிரித்தானியாவிலும் கொண்டாடப்பட்டது.

பிரித்தானியாவின் பீட்டா(Beta) ஆர்வலர்கள் டிரபால்கர் ஸ்கொயரில்(Trafalgar Square) ஒன்று கூடி அசைவம் சாப்பிடுவதை கண்டிக்கும் வகையில் நிர்வாணமாக நின்று கொண்டு அசைவத்திற்கு எதிராக கோஷமிட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்ட ஆண்களும், பெண்களும் தங்கள் உடலில் ரத்தத்தை குறிக்கும் வகையில் சிகப்பு நிறச் சாயத்தை ஆங்காங்கே பூசியிருந்தனர்.

மேலும் தங்கள் கையில் அசைவத்திற்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை பிடித்திருந்த அவர்கள், சாலையில் வரிசையாக படுத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=0t0Z8P3Rmz0

TAGS: