இலங்கை நெருக்கடி: ‘பிழைத்தால் இந்தியாவில், இல்லையேல் கடலில்’ – தமிழகம்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடி மற்றும் கடும் விலை உயர்வு காரணமாக இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பித்து வரத் தொடங்கியுள்ளனர். ஆனால், அவர்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களாக கருதுவதா அல்லது அகதியாக பதிவு செய்வதா என்ற குழப்பத்தில் இந்திய அரசும் தமிழக அரசும் உள்ளன. இந்த விவகாரத்தில்…

நாடு முழுவதிலும், நோய் அறிகுறியற்ற பெரும் எண்ணிக்கையிலான தொற்று உறுதியாளர்கள்

நாடு முழுவதிலும் நோய் அறிகுறியற்ற பெரும் எண்ணிக்கையிலான தொற்று உறுதியாளர்கள் உள்ளனர் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நாளாந்த தொற்று உறுதியாளர் எண்ணிக்கை குறைந்த எண்ணிக்கையில் பதிவான போதிலும், நோய் அறிகுறியற்ற பெரும் எண்ணிக்கையிலான தொற்று உறுதியாளர்கள் நாடு முழுவதிலும் உள்ளனர்…

இலங்கையில் ட்ரெண்டிங் ஆகியுள்ள GoHomeRajapaksas ஹேஷ்டேக்!

இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் கடும் மோசமடைந்துள்ள நிலையில், மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். இதனால் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கத் துவங்கியுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, டொலர் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இந்நிலையில், #GoHomeRajapaksas…

கடும் வறட்சி – மின் உற்பத்தி நிலையங்களில் வேகமாக குறைந்து…

இலங்கை மின்சார சபையின் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் நீர் மின் உற்பத்தி மேலும் தடைப்படும் அபாயம் காணப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது, ​​நாடு முழுவதையும் பாதித்துள்ள கடும் வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரம் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.…

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை அணுக வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் மத்திய வங்கி ஏற்கனவே அரசாங்கத்திடம் விசேட யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் விருப்பத்துடனோ விருப்பமின்றியோ…

முட்டை,கோழி இறைச்சி விலைகளும் உயர்ந்தன

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தற்போது முட்டையின் விலை 32 முதல் 33 ரூபாய் வரையிலும், கோழிஇறைச்சி 850 முதல் 900 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. முட்டை, கோழி இறைச்சி விலை உயர்வால் இவற்றை சாப்பிட…

இலங்கைக்கு 2.5 பில்லியன் டாலர் கடன் வழங்குகிறது சீனா

இலங்கை இதுவரை இல்லாத வகையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அத்யாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதால் சாமானியர்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் உற்பத்திக்கு தேவையான எண்ணையை இறக்குமதி செய்ய முடியாததால், மின் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விட்டது. எனவே,…

பெருந்தொகை பணத்தை அச்சிட்டுள்ள இலங்கை அரசாங்கம்! மத்திய வங்கியின் முன்னாள்…

இந்த அரசாங்கம் மூன்று ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ.விஜேவர்தன தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அசராங்கம் 3043 ட்ரில்லியன் ரூபா பணத்தை…

கடும் நெருக்கடியில் நாடு – வெளிநாடுகளிலுள்ள தூதரங்களை மூடும் இலங்கை

டொலர் நெருக்கடி காரணமாக இரண்டு தூதரகங்களையும் ஒரு துணை தூதரகத்தையும் மூட இலங்கை வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, ஈராக்கின் பக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், நோர்வேயின் ஒஸ்லோவில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணை தூதரகம் ஆகியவற்றை எதிர்வரும் 31ஆம் திகதி முதல்…

இழந்த உயிரைத்தவிர அனைத்தையும் வடக்கு மக்களுக்கு அளித்தோம் – யாழில்…

2019 இல் யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் வடக்கு மக்களுக்கு இழந்த உயிர்களை தவிர அனைத்தையும் பெற்றுக்கொடுத்தோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையத்தை இன்று (20) திறந்து வைத்தபின்னர் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் ஆற்றிய…

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத்திடலில் நடத்த…

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் மே தினக் கூட்டத்தை காலிமுகத்திடலில் நடாத்துவதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தீர்மானித்துள்ளார். அதன்படி காலிமுகத்திடல் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்குத் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பதைக் காட்டும் விதமாக மாபெரும் கூட்டத்தைத்…

இந்தியா கைகொடுக்காவிட்டால் ராஜபக்ச அரசுக்கு கடைசிவருடம்-மனோகணேசன்

இந்தியாவிடம் நூறுகோடி அமெரிக்க டொலர் புதிய கடன் பெற்று அதன் மூலம் அங்கிருந்து உணவு, மருந்து, எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்களையும் இலங்கை பெறுகிறது. கடந்த காலங்களில் இந்தியாவை திட்டி தீர்த்து, கரித்து கொட்டிய, இவர்கள், இன்று, புதுடெல்லிக்கு போய் கைகட்டி நிற்கிறார்கள். இந்த இந்திய கடனுதவி கிடைத்திராவிட்டால்,…

அரசுக்கு எதிராக மீண்டும் மாபெரும் எதிர்ப்பு போராட்டம்!

அரசுக்கு எதிராக மாபெரும் எதிர்ப்புப் கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி, எதிர்வரும் 23ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவுள்ளது. 'மக்கள் சக்தியின் எதிர்ப்பு' எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் ஜே.வி.பி. உட்பட தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும், அமைப்புகளும் பங்கேற்கவுள்ளன. இதன்போது அரசு பதவி…

புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றமே நியமிக்கும்! அமைச்சர் தகவல்

எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கூட இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன், அவர் பதவி விலகினால் புதிய ஜனாதிபதியை நாடாளுமன்றமே நியமிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளைய…

கோட்டாபய பதவி விலகினால் அடுத்து என்ன நடக்கும்?

அரச தலைவர் நாளை பதவி விலகினால் அரச தலைவர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய அரச தலைவரை தெரிவு செய்வதே அதற்கான ஒரே வழி எனவும் அவர் மேலும் தெரிவித்தார். பிரேமதாசவின் திடீர் மறைவுக்குப் பின்னர்…

இந்தியாவிடம் ஒரு பில்லின் டொலர் கடனை பெற்றநிலையில் மீண்டும் சீனாவிடம்…

அந்நியச் செலாவணி நெருக்கடியை அடுத்து,இந்திய உதவியை பெற்றுக்கொண்ட இலங்கை தற்போது சீனாவிடம் மீண்டும் உதவியை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடன் கொடுப்பனவுகளை தாமதப்படுத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் ஏற்பாடுகளுக்காக மேலதிக நிதி என்ற உதவிகளையே இலங்கை சீனாவிடம் கோரியுள்ளது. இலங்கை இந்த ஆண்டு…

நாட்டின் தற்போதைய நிலையை அன்றே கணித்த ரணில்!

தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் உடனடியாக செல்ல வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கடந்த வருடம் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் எனவும்  2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே  எச்சரிக்கை விடுத்திருந்தார். கடந்த வருடம் ஊடக நிகழ்வொன்றில்…

வீழ்ந்த பொருளாதாரத்தை நாங்கள் மீட்போம்! ஹர்ஷ டீ சில்வா சபதம்

விழுந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தானும் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசிமும் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தது கருத்து வெளியிட்ட அவர், இந்த வார தொடக்கத்தில்,…

சீனாவிற்கு கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இலங்கை!

சீன அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களின் தவணைகளை இம்முறை செலுத்த முடியாத நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாதம் 21ம் திகதி செலுத்த வேண்டிய கடன் தவணைகளை செலுத்த முடியாத நிலையில் இலங்கை உள்ளதாக தெரிவித்து, ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை சீனா அபிவிருத்தி வங்கிக்கு 53.596…

மேற்குலக நாடுகளின் தடையை மீறி ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யவுள்ள…

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் பெற்றுக் கொள்வது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்…

இலங்கை தொடர்பில் பிரதமர் மோடி அளித்துள்ள உறுதிமொழி

இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார். இந்திய பிரதமருக்கும் இலங்கை நிதியமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு குறித்து புதுடில்லிக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள…

ராக்கெட் வேக விலைவாசி: இலங்கையில் ஒரு முட்டை விலை ரூ.28-…

ரஷிய ஏவுகணைகளால் உக்ரைன் மக்கள் உருக்குலைந்துள்ளனர் என்றால், குட்டித்தீவு நாடான இலங்கையின் மக்கள் பொருளாதார நெருக்கடியின் பலமுனைத் தாக்குதலில் திகைத்து திண்டாடிப் போயிருக்கின்றனர். எரிபொருள், உணவுப்பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் அந்நாட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. சுற்றுலாத் துறையை…

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும்…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரால் ஜயனாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச ரீதியில் இலங்கை எதிர்நோக்கக்கூடிய மிகப் பெரிய சவால் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள்…