இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் – வடக்கு கிழக்கு மக்களுக்கு…
அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டமானது ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது. இப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களும் பங்கேற்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க …
பயங்கரவாதத் தடைச் சட்ட ‘திருத்தத்தை’ இரண்டாம் வாசிப்பிற்கு முன்வைக்க அனுமதி
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின், திருத்தச் சட்டமூலத்தை இரண்டாவது வாசிப்பிற்காக நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் கடந்த 11ஆம் திகதி கூடிய குழு தமது தீர்மானத்தை அறிவித்துள்ளதாக, நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று செய்தி…
மக்களின் ஆணையை மீறிவிட்டீர்கள் – பதவியை தூக்கி எறிந்த எம்.பி
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பதவியை தொடர்வது மனசாட்சிக்கு பொருந்தாத காரணத்தினால் அதிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிச் செயலாளர் நிமல் பியதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 69 இலட்சம் மக்களின் ஆணையை தற்போதைய அரசாங்கம் மீறியுள்ளதாக கொழும்பை அண்மித்த, தேசிய சுதந்திர…
பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள மக்கள்! அரசாங்கத்தை கடுமையாக சாடும் முன்னாள் ஜனாதிபதி
"நல்லாட்சியில் மக்கள் மூன்று நேரமும் உணவு அருந்தினார்கள். ஆனால், இந்த ஆட்சியில் பட்டினிச்சாவை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும்,முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். "தேசிய அரசமைக்கும் முயற்சிக்கு எமது கட்சி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்பதைத் திட்டவட்டமாக கூறிவைக்க விரும்புகின்றோம்" என்றும் அவர்…
அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்ச இந்த நாட்டைச் சீரழித்துவிட்டார்- உதய…
இந்த நாட்டை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வங்குரோத்து அடையச் செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (udaya gammanpila) குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அவலட்சணமான அமெரிக்கப் பிரஜையான பசில் ராஜபக்ச இந்த நாட்டை…
விலை அதிகரிக்கும் வரை பதுக்கலில் ஈடுபட்டது அரசு: எரிபொருளுக்கு தட்டுப்பாடு…
இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்துவதற்காகக் கடந்த சில வாரங்களாக எரிபொருட்களை மறைத்து வைத்திருந்தது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 20 ஆயிரம் மெற்றிக் டன் பெட்ரோல் , 7 ஆயிரம் மெற்றிக் டன் சுப்பர் டீசல், 6 ஆயிரம் மெற்றிக் டன் சுப்பர்…
நாளை முதல் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது- கெமுனு விஜேரத்ன
இலங்கையில் நாளை தொடக்கம் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார். டீசல் விலை அதிகரிப்புக்கு நிகராக பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிடின் அல்லது டீசலுக்கு மானியம் வழங்கப்படாவிட்டால் நாளை தொடக்கம் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது.…
முடிவின்றி முடிவடைந்த இந்திய-இலங்கை மீனவர்களின் கச்சத்தீவு சந்திப்பு!
கச்சத்தீவில் புனித அந்தோனியார் பெருவிழாவின்போது வட இலங்கை மற்றும் தென்னிந்திய மீனவ சமூகங்களுக்கிடையில் இடம்பெற்ற உத்தியோகபூர்வமற்ற பேச்சுவார்த்தை தீர்மானம் இன்றி முடிவடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த சந்திப்பு இடம்பெற்றது இதன்போது, இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவை படகுகள் மீன்பிடியில் ஈடுபட மேலும் கால அவகாசம் வழங்கவேண்டும் என்ற தென்னிந்திய…
விரைவில் மாகாண சபை தேர்தல் – மஹிந்த தெரிவிப்பு
கூடிய விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடக்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களைப் பிரதமர் நேற்று அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது ''மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடக்குமா?' என்ற கேள்விக்குப் மேற்குறிப்பிட்டவாறு பதிலளித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது. ''மாகாணச்சபை…
கடும் நிபந்தனைகளுடன் இலங்கைக்கு கைகொடுக்கும் இந்தியா
இலங்கையில் தற்போது எழுந்துள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கடனுதவியை வழங்க முன்வந்துள்ள இந்தியா, பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரியவருகிறது. இந்தியாவின் எக்ஸிம் வங்கி இலங்கைக்கு 500 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க முன் வந்துள்ளது. இதற்கமைய இந்த கடன் தொகையை மீள செலுத்துவதற்கு 12 மாதங்களை…
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி! நாட்டு மக்களின் தங்க நகைகள் பறி…
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் தங்கள் தங்க நகைகளை இழக்க வேண்டிய நிலை வரலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கொரிய நாட்டு மக்களை போன்று இலங்கை மக்களும் நாட்டிற்காக உதவ வேண்டும் என அமைச்சர் சீ.பி. ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஒன்று ஆட்சிக்கு வரும்…
படுமோசமாக வீழ்ந்தது இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு!
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு 2019 முதல் 2021 வரை 79 வீதம் குறைந்துள்ளதாக PublicFinance.lk தெரிவித்துள்ளது. பிராந்திய நாடுகள் வளர்ச்சியை கண்டுவரும் நிலையில், இலங்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக PublicFinance தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இலங்கையில் இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தமைக்கு கோவிட் தொற்று நோய் பரவலை காரணமாக…
இலங்கையில் விமான பயணச் சீட்டு கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு
இலங்கையில் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த அதிகாரசபை மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் 27% இனால் அதிகரிக்கப்படவுள்ளன. இன்று…
அரசாங்கம் செலவுகளை குறைக்க வேண்டும்! – மைத்திரி கோரிக்கை
அரசாங்கம் செலவுகளை குறைக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அரசாங்க செலவுகள் குறைக்கப்பட வேண்டும். அண்மையில் இரண்டு அரசாங்க அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டனர். உடனடியாக அவர்களுக்கு பதிலாக வேறும் நபர்கள் நியமிக்கப்பட்டனர்.…
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கட்டுப்பாடு பிழையான தீர்மானம்
இறக்குமதி செய்பய்படும் பொருட்களுக்கான கட்டுப்பாடு ஓர் பிழையான தீர்மானம் என முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. எனினும், இந்த தீர்மானத்தின் மூலம் டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட முடியாது என கட்சியின்…
தெரு விளக்குகளை அணைத்ததால் பெண்களுக்கு ஆபத்து! – நிபுணர்கள் எச்சரிக்கை
இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும், வீதி விளக்குகளை அணைப்பது நிலைமையை மோசமாக்கும் எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பகலில் மற்றும் மின்சாரம் தடைப்படும் போது பெண்கள் பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் நாட்டில், இரவில் தெரு விளக்குகளை அணைப்பது பெரும் பிரச்சினையாக இருக்கும்…
உணவு தட்டுப்பாடு! நாடாளுமன்றில் அமைதியின்மை
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் திரவப்பால் உள்ளிட்ட சில உணவுப்பொருட்களுக்கு தட்டுபாடு காணப்படுவதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அதிகாரிகள் மீது குற்றம்சுமத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிற்றுண்டிச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கடந்த ஒரு மாத காலமாக போதுமானளவு திரவப்பால் விநியோகம் முன்னெடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உணவு விநியோகப் பிரிவின் அதிகாரி…
அரசே உடன் பதவி விலகுக! – சந்திரிகா அவசர வேண்டுகோள்
இலங்கையின் தற்போதைய நிலைமை படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. எனவே, அரசு உடன் பதவி விலகுவதே சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது, "நாட்டின் பொருளாதாரம் அதளபாலத்துக்குள் சென்ற…
‘‘கனடாவின் வரலாற்றில் வீதியை முடக்கிய ஈழத்தமிழர்கள்! ஐ.நாவும் வரவில்லை’’
இறுதிக்கட்ட போரில் தனித்துவிடப்பட்ட தமிழர்களுக்காக கனடாவின் பிரதான சாலையை, கனடாவின் வரலாற்றில் முதன்முறையாக ஈழத்தமிழர்கள் சில மணி நேரம் முடக்கி போராடிய போதும் அவை தீர்மானங்களை நிறைவேற்ற போதுமானதாக அமையவில்லை என்று அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே…
எதிர்வரும் இரு வாரங்களில் நாட்டில் ஏற்படவுள்ள தட்டுப்பாடு
எதிர்வரும் 2 வாரங்களில் நாடளாவிய ரீதியில் அத்தியாவசிய ஔடதங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச துறையில் மாத்திரமின்றி தனியார் துறையிலும் இந்த நிலை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய்க்கான மருந்துகள் குறைவடைந்துள்ளது என அரச ஒளடதவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித்…
இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை மாற்றுவதற்கு தடை! மத்திய வங்கி அதிரடி
வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வது அல்லது மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அனுமதியின்றி வெளிநாட்டு நாணயங்களை விற்பனை செய்வது அல்லது மாற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அங்கீகரிக்கப்படாத பணம் மாற்றுபவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், மத்திய வங்கியின் பரிவர்த்தனை…
அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்குபற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் என்ன காரணத்திற்காக ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது பற்றிய…
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது – மருத்துவர்கள்
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது என அகில இலங்கை வைத்திய உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்பது குறித்து இந்த சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. மருத்துவர்கள் அவசர அழைப்பு மற்றும் சாதாரண பணிகளுக்காக தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருவதாக…