இலங்கைக்கு வருகைதந்துள்ள நான்காயிரம் உக்ரைன் பிரஜைகள்

இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சுற்றுலா பயணிகள் 30 நாட்களுக்கான விஸாவை பெற்றே நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அமைச்சு கூறுகின்றது. எனினும், உக்ரைனில் தற்போது ஏற்பட்டு யுத்த சூழ்நிலைக்கு மத்தியில், நாடு திரும்ப முடியாத உக்ரைன் பிரஜைகளுக்கு விஸா…

யாழில் ரயிலில் மோதி பலியான 24 வயது யுவதி –…

யாழில் ரயில் கடவையை சைக்கிளில் கடக்க முற்பட்ட யுவதி ஒருவர் ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து யாழ்ப்பாணம், கொக்குவில் ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த யுவதியை காப்பாற்ற முயன்ற அவரது தந்தை ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

லங்கா ஐஓசி நிறுவனம் தமது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் குறித்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, அனைத்து வகையான டீசல் லீட்டர் ஒன்றுக்கு 15 ரூபாவும், பெற்றோல் லீட்டர் ஒன்றுக்கு 20 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பெற்றோல்…

அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களே பொருளாதார சரிவுக்கு காரணம் – துஷார…

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில், உணவு, எரிபொருள், எரிவாயு மற்றும் பல அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையால் பொதுமக்கள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக கொழும்பில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அதிகரித்து வரும் போக்குவரத்து செலவுகள் காரணமாக விலையில் கணிசமான…

மின்சாரத் தடையினால் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பாதிப்பு

மின்சாரத் தடை காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்படுவதனால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிபொருள் பிரச்சினையால் இவ்வாறு நாடு முழுவதிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாக ஒன்றியத்தின் செயலாளர் ஜோசப்…

இலங்கையில் சிக்கியுள்ள உக்ரேன் நாட்டவர்களுக்கு நெருக்கடி நிலை

உக்ரைனை இலக்கு வைத்து ரஷ்யாவின் பாரிய தாக்குதலை அடுத்து அந்நாட்டுக்கான அனைத்து சர்வதேச விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள உக்ரைன் நாட்டவர்கள் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளனர். தங்கள் நாட்டுக்கு திரும்பி செல்ல முடியாத நிலைமை காரணமாக தொடர்ந்து இலங்கையில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த…

கொரோனா மரணங்கள், தொற்று அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றைய முன் தினம் தினம் மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 08 ஆண்களும் 17 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை  15,924 ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 13 பேரும்…

இலங்கை: யுத்த சாட்சியங்கள் அடிப்படையில், இரண்டாவது இடைக்கால அறிக்கை தயார்

பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்ற போதிலும், யுத்தத்தின் போது உயிரிழந்த உறவினரை தனிப்பட்ட முறையில் நினைவுகூர அனுமதி வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. 2021 ஜனவரி 21ஆம் தேதி, உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸின் தலைமையில் இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை, 2021ம்…

”உங்களின் பிள்ளைகள் உயிருடன் இல்லை” – இலங்கை அமைச்சர் அலி…

''உங்களின் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை என்பதை அவர்களின் முகத்தை பார்த்து எவ்வாறு கூறுவது?" என இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். யுத்த காலப் பகுதியில் வலிந்து காணாமல் போனோர் தொடர்பில் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இராணுவ முகாம்களில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு…

ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

மீனவர்கள் போராட்டம் இலங்கை மற்றும் மத்திய அரசை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும், தொடர்ந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது…

“இலங்கையில் 4 அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு” – ஒப்புக்கொண்ட நிதியமைச்சர்…

இலங்கையில் நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, கோதுமை மாவு, பால் மாவு, சமையல் எரிவாயு மற்றும் சிமெண்ட் ஆகிய நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு காணப்படுகின்றது. கோவிட் தொற்றுக்கு மத்தியில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக,…

ஒரு கோடி மதிப்பிலான கொக்கைனை இலங்கைக்கு கடத்த முயன்ற காவலர்…

இலங்கைக்கு கொக்கைன் போதைப் பொருள் கடத்த முயன்ற வழக்கில் முக்கியக் குற்றவாளியான காடல்குடி காவல் நிலையத்தில் காவலராகப் பணி புரியும் பாலமுருகன் உட்பட 8 பேரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரு கோடி மதிப்பிலான கொக்கைனை இலங்கைக்கு கடத்த முயன்ற போலீஸ் உட்பட…

சடலங்களாக கரை ஒதுங்குவதுதானா வடக்கு மீனவர்களின் விதி?

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் இருந்து ஜனவரி 27ஆம் திகதி வியாழக்கிழமை,  சிறிய படகொன்றில் தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர், நான்கு நாள்களின் பின்னர், சடலங்களாக மீட்கப்பட்டனர். கடலுக்குச் சென்றவர்கள் அடுத்த நாள் நீண்ட நேரமாகியும் கரைக்குத் திரும்பாததை அடுத்து, அவர்களைத் தேடும் பணிகளை, அந்தப்…

கொரோனா மரணங்கள் அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 17 ஆண்களும் 09 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை  15,621 ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 18 பேரும் 30 வயதுக்கும் 59…

தமிழ்நாட்டு மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளை ஏலம் விட தொடங்கிய…

தமிழக மீனவர்களின் கடும் எதிர்ப்பை மீறி இலங்கை கடற்படை முகாம்களில் கைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்பிலான தமிழக மீன்பிடி விசைப்படகுகளை இலங்கை அரசு இன்று காலை முதல் ஏலம் விடும் பணியை தொடங்கியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல், இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக…

ஜெனீவாவை எவ்வளவு காலம் நம்பியிருப்பது?

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மற்றோர் அமர்வு வருகிறது. இம்மாதம் இறுதிப் பகுதியிலிருந்து, சுமார் ஒரு மாத காலமாக அது நடைபெறும். இந்த நிலையில், அரசாங்கமும் தமிழ் அரசியல் கட்சிகளும் அதற்குத் தயாராகி வருகின்றன. இது, அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர்…

தமிழக மீனவர்கள் 21 பேரை பிப்ரவரி 7வரை காவலில் வைக்க…

இலங்கை கடல் எல்லைக்குள் நேற்று நள்ளிரவில் எல்லை தாண்டி நுழைந்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள நாகை மாவட்ட மீனவர்கள் 21 பேரை வரும் 7ஆம் தேதிவரை காவலில் வைக்க இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் நீதிபதி கிஷாந்தன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.…

யுத்தகாலத்தில் காணாமல் போனவர்களுக்கான இழப்பீடு; இலங்கை அரசின் புதிய திட்டம்…

இலங்கையில் மூன்று தசாப்த காலம் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக காணாமல் போனோரின் உறவுகளுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி, தலையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காணாமல் போனோரின் உறவினர்களுக்கு கடந்த ஒரு வார காலத்திற்குள் 100…

பிரியந்த குமார கொலை − முதல் குற்றவாளிக்கு ஓராண்டு சிறைத்…

பாகிஸ்தான் சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனையை வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனமாக த நேசன் செய்தி வெளியிட்டுள்ளது. பிரியந்த குமார தியவடனவின்…

தமிழக மீனவர்கள் 55 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்கள் 55 பேரை விடுவித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல லட்சம் மதிப்பிலான ஒரு மீன்பிடி விசைப்படகு அரசுடமை ஆக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டணத்திலிருந்து கடந்த டிசம்பர் மாதம் 18 மற்றும் 20ம் தேதிகளில் மீன்பிடிக்கச் சென்ற 56 தமிழக…

இலங்கையில் 43 ஆண்டுகளுக்குப் பின் திருத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டம்…

இலங்கை வெளியுறவு அமைச்சக கூட்டம் இலங்கையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம், 43 ஆண்டுகளின் பின்னர் திருத்தப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பு, கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் ஜனவரி 26ஆம் தேதி இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச…

திருகோணமலை எரிபொருள் தாங்கிகள்: இந்தியா, இலங்கை உடன்படிக்கை

திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கையில் இந்தியவும், இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கை நேற்று (06) மாலை கைச்சாத்திடப்பட்டதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இலங்கை திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம்…

பஷில் ராஜபக்ஷ அறிவித்த திடீர் சலுகைள்: நிபுணர்கள் கருத்து என்ன?

பஷில் ராஜபக்ஷ, இலங்கை நிதியமைச்சர் இலங்கை பாரிய பொருளாதார பின்னடைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அரசாங்கம் மக்களுக்கு திடீர் நிவாரண உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால், இது மக்களை நிலையற்றதாக்கலாம் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஜனவரி 3ஆம் தேதி…