இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
மருத்துவப் படிப்பில் 13 தங்கப் பதக்கம் : தர்ஷிகா சாதனை
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை பெற்று தமிழ் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே…
இலங்கை திருக்கோவில் போலீஸ் நிலைய துப்பாக்கிச்சூட்டில் 4 போலீசார் பலி:…
தாக்குதலில் இறந்த போலீஸ்காரர் காதர் அணிந்திருந்த சீருடை. இலங்கையின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் டிசம்பர் (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு போலீசார் உயிரிழந்தனர். குறித்த நிலையத்தில் பணியாற்றி வந்த - போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.…
இலங்கை முழுவதும் பலத்த பாதுகாப்பு
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். இந்த வேலைத்திட்டத்தை தேவைக்கேற்ப நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை…
தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம்Image caption: மீனவர்களை விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களை உடனே விடுதலை செய்யக்கோரி இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில்…
பாராளுமன்ற சிறப்புரிமைகள் எனும் பெயரில்: பொய்களையும் அவமானங்களையும் சமூக மயமாக்குதல்
நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கத்துறை, நீதித்துறை ஆகியவை ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்கள். இலங்கையின் சட்டவாக்க அமைப்பான பாராளுமன்றம் ஓர் உன்னத அமைப்பாகக் கருதப்பட்டாலும், மேற்கூறிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலாதிக்கத்தைப் பாதுகாக்க எந்த அளவுக்குச் செல்கிறார்கள் என்பது சர்ச்சைக்குரிய விடயமாகும். முழு நாட்டையும் ஆட்சி செய்வதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு பாராளுமன்றமே பொறுப்பு…
‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’
‘மாவீரன் கர்ணன்’ என்ற வாசகத்தைத் தனது ஓட்டோவின் பின்புறத்தில் ஒட்டிய முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர்கள் இரண்டுபேர், முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. ‘மாவீரன்’ என்ற சொல்லை, ஓட்டோவில் பதிந்திருந்தமை தொடர்பில், வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு ஓட்டோவுடன் வருகைதருமாறு சகோதரர்களான 21, 19…
இலங்கையில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது கவலையளிக்கிறது – வெளியுறவுத்துறை
கடந்த 18-20 தேதிகளில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற இந்திய மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் 68 பேர் தற்போது இலங்கை சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 10 படகுகளும் இலங்கை வசம் உள்ளன.…
இலங்கைக்குள் சீனாவிற்கு ராஜிய ரீதியில் பின்னடைவா?
இந்திய பிரதமர் நரேந்திர மோதி - சீன அதிபர் ஷி ஜின்பிங்: இலங்கையின் வடக்குப் பகுதியில் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தயார் நிலை காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கிலுள்ள மூன்று…
இலங்கை கடலில் 250 கிலோ போதைப் பொருள் பிடிபட்டது –…
இலங்கை கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பில், பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கையின் தெற்கு கடல் பிராந்தியத்தில் 900 கடல் மைல் தொலைவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 250 கிலோ கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கடற்படையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து,…
பார்லிமென்ட் ஒத்திவைப்பு; இலங்கையில் குழப்பம்
கொழும்பு : பார்லிமென்டை ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவித்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, திடீரென ஆசிய நாடான சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். இது இலங்கை அரசியலில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.நம் அண்டை நாடான இலங்கையின் பார்லிமென்ட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த 10ம் தேதியுடன் முடிந்தது. அடுத்த…
‘இஸ்லாமுக்கு எதிராக மத நிந்தனை செய்ததாக’ பாகிஸ்தான் கும்பலால் எரித்துக்…
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் சியால்கோட் நகரில் பணிபுரிந்து வந்த இலங்கையர் ஒருவர், வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானில் நூற்றுக்கும் மேலானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த 40 வயதான பிரியந்த குமார தியவடன என்ற…
செயற்கை உரம்: இலங்கை கடற்பரப்பில் 70 நாட்களாக இருந்த சீன…
ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் சீனாவிலிருந்து உரம் ஏற்றிக்கொண்டு இலங்கை கடற்பரப்பிற்கு வருகைத் தந்த கப்பல் தொடர்பில், கடந்த காலங்களில் அதிகளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது அந்த கப்பலுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த கப்பலில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் உள்ளதாக தெரிவித்து,…
இலங்கையில் முன்னாள் கடற்படை தளபதி கவர்னராக நியமனம் – ஈழத்தமிழர்களை…
வசந்த கரன்னகொடா இலங்கையில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடாவுக்கு எதிராக கொலை, சதி திட்டம் உள்பட 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இலங்கையில் முன்னாள் கடற்படை தளபதி கவர்னராக நியமனம் - ஈழத்தமிழர்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் கொழும்பு: இலங்கையில் உள்ள ஒரு மாகாணத்திற்கு இலங்கை முன்னாள் கடற்படை…
‘இலங்கையில் மனித உரிமை மீறல்கள்’ – பயிற்சியை நிறுத்த ஸ்காட்லாந்து…
இலங்கை காவல் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இலங்கையில் நடப்பதாகக் குற்றம் சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதால், இலங்கை காவல்துறைக்கு அளித்து வரும் பயிற்சிகளை நிறுத்திக்கொள்ள இருப்பதாக ஸ்காட்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டு முதல் இந்தப்…
இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களால் உயிர்களுக்கு ஏற்படும் பேராபத்து
ஹட்டன் - கேஸ் சிலிண்டர் வெடித்த இடங்களில் ஒன்று இலங்கையில் கடந்த சில வாரங்களாகவே, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. வீடுகள், உணவகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புக்கள் வெடிக்கும்…
‘மாவீரர் தினம்’ – ஊடகவியலாளரை தாக்கியதாக 3 இலங்கை ராணுவத்தினர்…
தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறும் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன். முல்லைத்தீவு பகுதியில் சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் மூன்று ராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இன்று (28) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு போலீஸார் தெரிவித்தனர். வடக்கு…
இந்தியா – இலங்கை உடன்படிக்கை ஏற்பட்டால் தாயகம் திரும்ப விரும்பும்…
சந்திரகாசன் இலங்கை உள்நாட்டு போர் காரணமாக அகதிகளாக இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்களை மீள நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றார். இந்த நிலையில், சென்னையிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திற்கான பிரதி உயர்ஸ்தானிகர் டி.வெங்கடேஸ்வரனுக்கும்,…
இலங்கையில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 6 பேர் உயிரிழப்பு
இலங்கையில் படகு கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்பு பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் கொழும்பு: இலங்கையின் கிழக்கு மாகாணமான திரிகோணமலையில் உள்ள குறிஞ்சங்கேணி என்ற கிராமத்தில் இருந்து, கின்னியா நகருக்கு நேற்று காலை…
இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை தாயகம் அழைத்து வர ராஜீய…
டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்றொழில் இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள், தாய் நாட்டிற்கு மீள வருகைத் தர விரும்பினால், அதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.இலங்கை நாடாளுமன்றத்தில் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு…
இலங்கையில் சஜித் பிரேமதாஸ தலைமையில் போராட்டம்: ”சாபக்கேடான அரசுக்கு எதிரான…
நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று கொழும்பில் இன்று (16) நடத்தப்பட்டது. பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த எதிர்ப்பு போராட்டம் இன்று பிற்பகல் நடத்தப்பட்டது. ''சாபக்கேடான அரசாங்கத்திற்கு எதிரான பேரணி'' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. உரத் தட்டுப்பாடு,…
இலங்கைச் சிறையில் இருந்து 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நீதிமன்றம்…
மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்த 23 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் 11ஆம் தேதி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையிலிருந்து பீன்பிடி அனுமதி சீட்டு…
இலங்கை போரில் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு அரசு அறிவித்த நிதியுதவி…
இலங்கை உள்நாட்டு போரின் காரணமாக காணாமல் போனோர் தொடர்பிலான பிரச்னை, யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்றும் முடிவின்றி தொடர்கிறது. யுத்தம் நிறைவடைந்த பின்னர், காணாமல் போனோர் தொடர்பில் பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டிருந்தாலும், அதற்கான தீர்வு இன்று வரை கிடைக்கவில்லை. இவ்வாறான பின்னணியில், வலிந்து காணாமல்…
இலங்கைக்கு சீனா அனுப்பிய ‘நச்சு இயற்கை உரம்’: நட்பு நாடுகள்…
இயற்கை உர விவகாரத்தில் சீனாவுக்கும் இலங்கைக்கும் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டால், நெல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிலிருந்து சரக்குகளை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல், இலங்கையின் கடல் எல்லைக்குள் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்ட பிறகும், வெளியேற மறுக்கிறது. சீனக் கப்பல் இப்படி அடம்பிடிப்பதால், ராஜீய உறவிலேயே சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது ஏன்?…