சேவியர்: இழைத்த தவறுக்கு பரிகாரம் எங்கே, நோ ஒமார்?

கடந்த பொதுத்தேர்தலுக்கு முன் பாரிசான் ஆட்சியில் சிலாங்கூர் மக்களுக்குத் தவறு செய்துவிட்டதாக ஒப்பு கொண்டுள்ள சிலாங்கூர் அம்னோவின் துணைத்தலைவர் டத்தோ நோ ஒமார், பாரிசானின் தவறுகளுக்கு எந்தப் பரிகாரமும் வழங்காமல், முழு பலியையும் முன்னால் மந்திரி புசார் கிர் தோயோவின்  மீது போட்டு இம்மாநில மக்களை ஏமாற்றுவதில் குறியாகவுள்ளார் …

பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு அள்ளித்தரப் போகிறார் நஜிப்

குளோபல் வென்சர்ஸ் ஹோல்டிங்ஸ் (FGVH) பங்குச் சந்தையில் இடம்பெறப் போவதால், பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு மே மாதத்தில் ஒரு குருட்டுயோகம் காத்திருக்கிறது என்று நஜிப் ரசாக் இன்று கூறினார். அவர் செய்யப்போகும் அறிவிப்பு குடியேற்றக்காரர்களை திகைக்க வைக்கும் என்று அவர் கூறினார். "எவ்வளவு? இன்று அதை அறிவிக்க மாட்டேன். பொறுத்திருங்கள்,…

ரெலா கலைக்கப்பட வேண்டும், வழக்குரைஞர் மன்றம் கோருகிறது

ரெலா என்றழைக்கப்படும் மக்களின் தன்னார்வலர் படைப்பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான நிதியைக் கொண்டு போலீஸ் படையை வலுப்படுத்தலாம் என்று மலேசிய வழக்குரைஞர் மன்றம் பரிந்துரைத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் அவசரக்கால சட்டம் ரத்து செய்யப்பட்டதால், ரெலாவின் தேவை குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அம்மன்றத்தின் தலலைவர்…

சம நிலைக் குழுவுக்கு துணை அமைச்சர் ஆதரவு தருகிறார் ஆனால்…

அரசாங்கம் இன உறவுச் சட்டங்களை இயற்றுவதற்குப் பதில் சுஹாக்காமைப் போன்று சம உரிமைகள் ஆணையத்தை அமைக்க வேண்டும்  என இளைஞர், விளையாட்டுத் துணை அமைச்சர் கான் பெங் சியூ கருதுகிறார். அத்தகைய சட்டங்கள் தேவை இல்லை என வலியுறுத்திய அவர் போதுமான சட்டங்கள் நாட்டில் இருப்பதாகத் தெரிவித்தார். இன்று…

சிலாங்கூரில் பிஎன் சிறந்த வெற்றியைப் பெறும் என நோ ஒமார்…

அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் சிலாங்கூரில் மொத்தமுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் 36ல் வெற்றி பெற்று மாநிலத்தை மீண்டும் கைப்பற்றும் என அந்த மாநில அம்னோ துணைத் தலைவர் நோ ஒமார் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார். 36 இடங்கள் என்பது மாநிலச் சட்டமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மைக்கு…