ரெம்பாவ் போலீசார், இந்த சம்பவத்தில் 16 வயது அறிவுத்திறன் குறைபாடுள்ள சிறுமியும் 36 வயது ஆண் ஆசிரியரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறினர். பாதிக்கப்பட்டவர் நேற்று மாலை 5.15 மணிக்கு புகார் அளித்ததை அடுத்து, சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக ரெம்பாவ் போலீசார் தெரிவித்தனர். மே 5 அன்று…
பினாங்கு பிஎன் தலைமைத்துவத்துக்கு அம்னோ கோரிக்கை விடுக்காது
பிஎன் ஒற்றுமைக்காக பினாங்கில் பின்னிருக்கையில் அமருவதற்கு அம்னோ தயாராக இருக்கிறது. அத்துடன் அந்த வட மாநிலத்தில் கெரக்கானுடைய நிலையை வலுப்படுத்துவதற்காக மற்ற பிஎன் உறுப்புக் கட்சிகளுடன் இணைந்து செயல்படவும் அம்னோ விரும்புகிறது. இவ்வாறு பிஎன் தலைவரும் அம்னோ தலைவருமான பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று கூறியுள்ளார். நஜிப் …
Project IC என்ற அடையாளக் கார்டு திட்டம் பற்றியும் ஹிஷாம்…
அண்மையில் இந்த நாட்டுக்கு வந்த பலருக்கு நீங்கள் எவ்வாறு குடியுரிமைகளை வழங்க முடியும் ? சபாவில் இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது ? அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது பற்றி ஹிஷாம் எல்லா விவரங்களையும் வெளியிடுவார் மாத்தியூ இயோ: உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் யாரை முட்டாளாக்க நினைக்கிறார் ?…
ஜனவரி தொடக்கம் புதிய மை கார்டுகள் வெளியிடப்படும்
என்ஆர்டி என்ற தேசியப் பதிவுத் துறை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய மை கார்டுகளை அறிமுகம் செய்யும். அது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைப் பெற்றிருக்கும் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இன்று கூறினார். போலியாகத் தயாரிக்கப்படுவதைத் தடுக்கக் கூடிய அம்சங்களைக் கொண்ட கணினி சில்லுகள்…
நாங்கள் சொல்வது தவறென்றால், வழக்கு போடுங்கள்: பாஸ் இளைஞர் பிரிவு
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் எனத் தான் அண்மையில் அறிவித்தது தவறு என்றால் எங்கள் மீது இன்னேரம் வழக்குப் போடப்பட்டிருக்கும் என பாஸ் இளைஞர் பிரிவு கூறுகிறது. அதற்குப் பதில் அரசாங்கம் "மறுக்கும் போக்கை" பின்பற்றி வருகிறது என அதன் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் நஸ்ருதின் ஹசான் கூறினார்.…
பதவி துறக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கோ நிராகரித்தார்
கெரக்கான் தலைவர் கோ சூ கூன், பதவி துறக்குமாறு தமக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோட்களை நிராகரித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தல் வரையில் தாம் பதவியில் இருக்கப் போவதாக அவர் சொன்னார். "நான் அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியை வழி நடத்த எண்ணியுள்ளேன். என் பதவியைப் பொறுத்த வரையில் நான் போட்டியிடுவேனா…
தலைமையின் பலவீனம் கண்டு வெட்கப்படுகிறோம், மகளிர் தலைவி
கெராக்கான் மகளிர் தலைவர் டான் லியான் ஹோ, கெராக்கான் தலைவர் கோ சூ கூனைப் பெயர் குறிப்பிடாமலேயே கடுமையாகச் சாடினார். “தலைமை பலவீனமாக இருப்பதாக பழித்துரைக்கப்படுவதைக் கண்டு வெட்கப்படுகிறோம்”, என்றாரவர். இன்று கெராக்கான் மகளிர் பேராளர் மாநாட்டில் தலைமையுரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தலைமை பலவீனமாக இருப்பது “சுவரில்…
ரிம24மில்லியன் மோதிரம் தொடர்பில் ஒரு விளக்க ஏடு
ரிம24 மில்லியன் மோதிரம் தொடர்பில் தரப்பட்ட விளக்கங்களால் நிறைவடையாத சமூக ஆர்வலர் பட்ருல் ஹிஷாம் ஷாஹாரின், அதன் பின்னணியில் உள்ள உண்மைகளை அம்பலப்படுத்தும் 16-பக்கச் சிற்றேடு ஒன்றைக் கொண்டுவரப்போவதாகக் கூறியுள்ளார். ச்சேகுபார்ட் என்ற பெயரில் பிரபலமாக விளங்குபவரான பட்ருல், சோலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) என்னும் இளைஞர்…
“மக்களின் வரிப்பணத்தில் அந்நியருக்குத் தொழில் பயிற்சியா, ஏன்?”
உங்கள் கருத்து: மைகார்ட் மோசடி:அந்நியர்கள் தொழில்பயிற்சிக்காக ஓய்வுத்தலம் சென்றனர் ஜேபிசுவாரா: தொழில்முனைவர் பயிற்சிக்குச் செல்லும் அந்நியருக்குப் போலீஸ் வழித்துணையா. கேட்பதற்கு நல்லா இல்லையே. போலீஸை இப்படி வீணடிக்கக்கூடாது. இவ்விசயம் குறித்து பாஸ் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சு இன்னும் பொறுப்புடன் பதில் அளிக்க வேண்டும். இல்லையேல், எங்கள் எம்பிகள்…
அந்நிய பண்ணைத் தொழிலாளர்களுக்கு ஏன் வர்த்தகப் பயிற்சி?
இந்த நாட்டுக்கு விவசாயத் தொழிலாளர் என்னும் வேலை அனுமதியில் வந்த அந்நியத் தொழிலாளர்களுக்கு "முதல் வகுப்பு மரியாதை" கொடுக்கப்பட்டு "தொழில் முனைவர் பயிற்சியில்" பங்கு கொண்டது குறித்து ஜோகூர் பாஸ் கேள்வி எழுப்பியுள்ளது. அந்த அந்நியத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலை அனுமதி அவர்கள் இந்த நாட்டில் வர்த்தகம் செய்வதற்கு அனுமதிக்காத…
600,000 அந்நியர்கள் குடிமக்களாகியது பற்றி புலனாய்வு செய்க- ஒர் அரசு…
600,000 அந்நியர்களுக்கு குடியுரிமை பெற்றுக் கொடுத்ததாக கூறப்படும் கும்பல் ஒன்று குறித்து புலனாய்வு செய்யுமாறு ஜிங்கா 13 என்ற அரசு சாரா அமைப்பு ஒன்று தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாருக்கு மனுக் கொடுத்துள்ளது. அந்த அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் அதன் ஒருங்கிணைப்பாளர் பேரிஸ் மூசா தலைமையில்…
பாஸ், இசி-என்ஆர்டி இணைப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது
வாக்காளர் பட்டியலில் 40,000 பெயர்கள் சந்தேகத்துக்குரியவை என இசி என்ற தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து அதனையும் என்ஆர்டி என்ற தேசியப் பதிவுத் துறையையும் இணைக்கும் அலிஸ் என்ற கணினித் தொடர்பு முறைக்கு என்னவாயிற்று என பாஸ் அறிய விரும்புகிறது. பொது மக்களுடைய ஆழமான ஆய்வுக்காக சந்தேகத்துக்குரிய…
ஷா அலாம் எம்பி-க்கு ரிம60 ஆயிரம் கொடுக்குமாறு உத்துசானுக்கு உத்தரவு
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவின் முதல் பக்கத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் ஷா அலாம் எம்பி காலித் சாமாட் மீது அவதூறு கூறியதற்காக அவருக்கு 60,000 ரிங்கிட் கொடுக்குமாறு அந்த நாளேட்டின் ஆசிரியருக்கும் வெளியீட்டாளருக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. கோலாலம்பூரில் இன்று உயர் நீதிமன்ற நீதிபதி டாக்டர்…
பாஸ்: “மை கார்டு மோசடி” குறித்த போலீஸ் விளக்கம் நம்ப…
"பாங்கி ஒய்வுத் தலத்தில் அந்நியர்கள் தொழில் முனைவர் பயிற்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்ததாக போலீஸ் அளித்துள்ள விளக்கம் நம்ப முடியாததாக இருக்கிறது. அத்துடன் அந்த விளக்கம் மேலும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது." "போலீசாருக்கும் எதுவும் தெரியாமல் இருக்க வழி இல்லை. மக்கள் கேள்வி எழுப்புவர். மக்களுக்கு ஒன்றும் தெரியாது…
தாய்மொழிக் கல்வியை அகற்றினால் ஒற்றுமை குலையும்: கா. ஆறுமுகம்
(கா.ஆறுமுகம், சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர், தமிழ் அறவாரிய ஆலோசகர்) மொழி அளவிலான பள்ளிகள் நாட்டில் இனப்பாகுபாட்டை ஏற்படுத்தும் என்பதால் இந்நாட்டிலுள்ள தமிழ், சீனப்பள்ளிகளை மூடிவிட்டு ஒரே மொழி பள்ளிகளை உருவாக்கும் வகையில் நாட்டின் கல்வி முறை மாற்றி அமைக்கப்பட வேண்டுமென பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர்…
சில பல்கலைக்கழகங்கள் தீபாவளி தொடர்பில் பிரதமரின் உத்தரவை மதிக்கவில்லை
தீபாவளியைக் கொண்டாட இந்திய மாணவர்களுக்கு சற்றுநீண்ட விடுமுறை கொடுக்கப்பட வேண்டும் என்ற அரசாங்க உத்தரவை சில பல்கலைக்கழகங்கள் புறக்கணிப்பதாக மனித உரிமைக்கட்சி(எச்ஆர்பி) கூறுகிறது. எச்ஆர்பி தலைமைச் செயலாளர் பி.உதயகுமார், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எழுதியுள்ள திறந்த மடலில், ஹரி ராயா, சீனப் புத்தாண்டு, கிறிஸ்மஸ் போன்ற விழாக்காலங்களில்…
மலாய்மொழி பைபில் குறித்து போலீசில் புகார்
சிலாங்கூரில் செயல்படும் அரசுசாரா அமைப்பு (என்ஜிஓ) ஒன்று புழக்கத்தில் உள்ள மலாய் மொழி பைபில் முஸ்லிம்களின் சமய நம்பிக்கைக்கு ஊறு செய்யும் என்று போலீஸில் புகார் செய்திருக்கிறது என உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. நேற்று ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் செய்த புகாரில், பைபிலில் இறைவன் என்பதற்கு…
டோனி புவா: எம்ஆர்டி நிலத்தைக் கையகப்படுத்துவது மீதான குழப்பத்தைத் தெளிவுபடுத்துக
சுரங்க வேலைகளுக்காக எந்த நிலமும் கட்டாயமாக கையகப்படுத்தப்பட மாட்டாது என்ற் அறிக்கை மீதான தங்களது "அதிகாரத்துவ நிலையை' தெளிவுபடுத்துமாறு எம்ஆர்டி திட்ட உரிமையாளர்களை எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார். அந்தத் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், அரசாங்கம் வழங்க முன்வந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டு…
மைகார்ட் மோசடி: அந்நியர்கள் தொழில் பயிற்சிக்காக அங்கு சென்றனர்
பாஸ் கட்சி கூறிக்கொள்வதுபோல் அந்நியர்கள் குடியுரிமை பெறுவதற்காக பாங்கி ஓய்வுத்தலத்துக்குச் செல்லவில்லை. அவர்கள் “தொழில்முனைவர் பயிற்சி” ஒன்றில் கலந்துகொள்ளவே அங்கு சென்றனர்.செப்பாங் ஓசிபிடியை மேற்கோள்காட்டி சினார் ஹரியான் இவ்வாறு தெரிவித்துள்ளது. “எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அன்று டேசா பெங்கிரான் புத்ராவில் இருந்த அந்நியர்கள் அனைவரும் தொழில்முனைவர் பயிற்சியில் கலந்துகொள்ளச்…
ஐஜிபி: மைகார்கார்ட் மோசடி பற்றி அறியேன்
ஒரு கும்பல் வெளிநாட்டவருக்கு மைகார்டுகள் வழங்கிவருவது பற்றிய தகவல் தமக்குத் தெரியாது என்கிறார் போலீஸ்படைத் தலைவர் (ஐஜிபி) இஸ்மாயில் ஒமார். இதன் தொடர்பில் பாஸ் கடந்த ஆண்டு தொடங்கி பல போலீஸ் புகார்களைச் செய்துள்ளது. “அது பற்றி எந்தப் புகாரையும் நான் பெறவில்லை”, என இன்று போலீஸ் பயிற்சி…
இசி: மனுப்பாரங்களை நிராகரிக்கவில்லை, மைகார்ட் பிரதிகள் தேவை
தேர்தல் ஆணையம் (இசி), டிஏபி கூறுவதுபோல் மைகார்ட் பிரதிகள் இணைக்கப்படாமல் சமர்பிக்கப்படும் புதிய வாக்காளர்களின் விண்ணப்பப் பாரங்களை நிராகரிக்கவில்லை என்று அதன் தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறுகிறார். அரசியல் கட்சிகள் விண்ணப்பத்தாரர்களின் மனுப்பாரங்களை அனுப்பிவைக்கும்போது கூடவே அவர்களின் மைகார்ட் ஓளிநகல்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அவர்…
அசிஸ் பாரி, மலேசியாகினி தேசநிந்தனைக்காக விசாரிக்கப்பட வேண்டும், எஸாம்
அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி மற்றும் மலேசியாகினிக்கு எதிராக செனட்டர் எஸாம் முகமட் நூர் இன்று (13/10) போலீஸ் புகார் செய்தார். செக்சன் 6, ஷா அலாம் போலீஸ் நிலையத்தில் செய்யப்பட்ட அப்புகாரில் மலேசியாகினியில் வெளியிடப்பட்ட அப்துல் அசிஸ்சின் விமர்சனம் தேசநிந்தனையானது மற்றும் அமைதிக்கும் ஒழுங்குக்கும்…
ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை எங்கே?
பட்ஜெட் 2012 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே தேசிய கணக்காய்வர் (ஆடிட்டர் ஜெனரல்) அறிக்கை தயாரிவிட்டது. அரசாங்கம் அவ்வறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பதின் நோக்கம் குறித்து பக்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பினர். நேற்று ஆடிட்டர் ஜெனரலின் அலுவலகத்தை அழைத்து அவ்வறிக்கை குறித்து விசாரித்தாகவும், அது…
பாங்கி “மைகார்டு மோசடியில்” சம்பந்தம் இல்லை என்கிறது தேசியப் பதிவுத்துறை
பாங்கியில் நேற்று அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுவதாக கூறப்பட்ட நடவடிக்கையில் தான் சம்பந்தப்பட்டுள்ளதாக பாஸ் கூறுவதை தேசியப் பதிவுத் துறை மறுத்துள்ளது. "கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் எந்த நடவடிக்கை குறித்த தகவலும் இது வரையில் இல்லை," என அந்தத் துறையின் பொது உறவு அதிகாரி ஜாய்னிஷா முகமட்…