2020 புத்தாண்டு வாழ்த்துகள்!

இன்று நாம் 2019 ஐ விட்டு 2020 ஐ வரவேற்கிறோம். மலேசியாகினியில் உள்ள எங்கள் அனைவரிடமிருந்தும், உங்கள் அனைவருக்கும் குறிப்பாக எங்கள் வாசகர்களுக்கு, இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டில் மலேசியாவின் பயணத்தை பகிர்ந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த கடமையாக இருந்தது. ஒரு…

2020-ல் மலேசியர்களிடையே வலுவான ஒற்றுமைக்கு பேரரசர் அழைப்பு விடுக்கிறார்!

2020-ஆம் ஆண்டில், நாட்டின் தொடர்ச்சியான ஒற்றுமை மற்றும் செழிப்பை அனுபவிக்க வேண்டுமாயின், வலுவான ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் உருவாக்க அனைத்து மலேசியர்களும் பாடுபட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தபா பில்லா ஷா பரிந்துறை விடுத்துள்ளார். ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நாட்டின் மீது பற்று,…

மக்களை பிளவு படுத்தும் கீழறுப்பு சக்திகளை ஒழிக்க புத்தாண்டிம் ஒன்று…

கடந்த தேர்தலில் மக்களின் சுபிட்சமான வாழ்வுக்கும் பொருளாதார ஏற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் வழங்கும் வகையில் தேர்தல் வாக்குறிதிகள் இருந்தன. அவற்றை பூர்த்தி செய்யும் அளவுக்கு நிதிநிலைமையும் இனவாத அரசியல் தாக்காமும் தடைகளாக இருந்தன. ஆனால் அதனையும் தாண்டி, அரசியல், இனம், சமயம், மொழி போன்ற வேற்றுமைகளாலும் சில கீழறுப்பு…

‘நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளையும் விவசாயத்தையும் அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்!’ –…

கேமரன் மலை விவசாயிகளின் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டதை, மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) மிகக் கடுமையாக கருதுகிறது. அச்செயலைக் கண்டிப்பதாக, பிஎஸ்எம் தலைமைச் செயலாளர்  சிவராஜன் ஆறுமுகம் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார். இதுபோன்ற மோசமான சம்பவத்திற்குப் பக்கத்தான் ஹராப்பான் (பிஎச்) அரசாங்கம் மஇகா- வை மட்டும் குறை கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. மாறாக, பிஎச்…

வன்முறை மிரட்டல்களுக்கு விட்டுக் கொடுப்பதா? சுஹாகாம் வருத்தம்

மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), அதிகாரிகள் வன்முறை மிரட்டல்களுக்கு விட்டுகொடுப்பதை எண்ணி வருத்தமடைகிறது. காஜாங் போலீஸ் சீனக் கல்வி அமைப்பான டொங் சொங் ஜாவி விவகாரம் குறித்து விவாதிக்க கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த மாநாடு நடைபெறாமல் தடுக்க நிதிமன்றத் தடை உத்தரவு பெற்றதுதான் சுஹாகாமின் வருத்தத்துக்குக் காரணம்.…

கிமானிஸ் இடைத் தேர்தலில் அனிபாவின் மகன்கள் போட்டியிட மாட்டார்கள்

எதிர்வரும் கிமானிஸ் இடைத் தேர்தலில் அத்தொகுதியின் முன்னாள் எம்பி-ஆன அனிபா அமானின் இரு மகன்களின் பெயர்களும் சாபா அம்னோ வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அனிபாவின் மகன்களான அஹமட் பிர்டுஸுக்கும் அஹமட் ஜாக்ரிக்கும் இடைத் தேர்தலில் போட்டியிட விருப்பமில்லையாம். அனிபாவின் உதவியாளர் நோர்ஹைடி சே டான் தெரிவித்தார். ஜாக்ரி அம்னோவில்…

எம்ஏசிசி அதிகாரி அடித்தார்: மூன்று போலீஸ்காரர்கள் புகார்

அண்மையில் ஷா ஆலமில் உள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) சிலாங்கூர் அலுவலகத்துக்கு வாக்குமூலம் கொடுக்கச் சென்ற தங்களை எம்ஏசிசி அதிகாரி ஒருவர் அடித்ததாக மூன்று போலீஸ்காரர்கள் புகார் செய்துள்ளனர். அம்மூவரும் சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைமைகத்தில் போதைப்பொருள் குற்றவியல் விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். ஒரு வழக்கு…

அமைச்சர்: ஜனவரியிலிருந்து மலிவு விற்பனையை எத்தனை தடவை வேண்டுமானாலும் நடத்தலாம்

புத்தாண்டிலிருந்து மலிவு விற்பனைகளை ஆண்டுக்கு நான்கு தடவை என்றில்லாமல் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் நடத்தலாம் என வர்த்தக, பயனீட்டாளர் விவகார அமைச்சர் சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் கூறினார். 2019, வர்த்தகச் சட்ட (மலிவு விலை)த்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 2-இலிருந்து அமலுக்கு வருகின்றன. அதன்படி வணிகர்கள்…

பெட்டாலிங் ஜெயாவில் ஜாவி எழுத்து எதிர்ப்பு மாநாடு

செகாட் எனப்படும் காட் எழுத்துக் கலை நடவடிக்கை குழு ஏற்பாட்டில் இன்று காலை பெட்டாலிங் ஜெயாவில் தேசிய ஜாவி காங்கிரஸ் நாடு தொடங்கியது. நேற்று காஜாங்கில் சீனக் கல்வி அமைப்பான டோங் சொங்கும் மற்ற சீன அமைப்புகளும் தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்து கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு ஏற்பாடு…

தலைமைச் செயலாளர்: அம்னோவில் குறுக்கீடு இல்லை; அபாண்டி தலைமையில் கூட்டம்…

அம்னோ தலைமைச் செயலாளர் அன்னுவார் மூசா, ஒழுங்கு நடவடிக்கை வாரிய விவகாரங்களில் கட்சித் தலைமை தலையிடுவதில்லை என்றார். ஒழுங்கு நடவடிக்கை வாரியம் கட்சி அமைப்புவிதிகளின்படி அமைக்கப்பட்டது. அது தனித்து இயங்குகிறது. “ஒழுங்கு நடவடிக்கை வாரிய விவகாரங்களில் தலையீடுகள் இருந்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை”, என அன்னுவார் இன்று ஓர்…

டிஏபி கம்முனிஸ்டா? சிரிப்புத்தான் வருது- முன்னாள் சிபிஎம் தலைவர் அப்துல்லா

மலாயா கம்முனிஸ்டுக் கட்சி முன்னாள் தலைவர்களில் ஒருவர், டிஏபி-யைக் கம்முனிசத்துடன் இணைத்துப் பேசுவதைக் கேட்க வேடிக்கையாக உள்ளது என்றார். மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் சிபிஎம் தலைவர் அப்துல்லா சி.டி., தொடங்கிய காலத்திலிருந்தே டிஏபி கம்முனிஸ்டு- எதிர்ப்புக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்த கட்சி என்றார். 1965-இல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து…

கிட் சியாங்: போலீஸ் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும், டொங் செங்…

போலீஸ் காஜாங்கில் இன்று நடைபெறவிருந்த தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்து கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாநாட்டுக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றதைப்போல் மாநாட்டை எதிர்த்துக் கலவரத்தில் ஈடுபடப்போவதாக மிரட்டியர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தினார். “தீவிரவாத தரப்பினரின் பொறுப்பற்ற மிரட்டல்களுக்கு”ப்…

வன்முறையைக் காட்டி மிரட்டியவர்களுக்கு வெற்றி – ஜைட்

காஜாங்கில் இன்று நடைபெறவிருந்த தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்து கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாநாட்டைத் தடுக்க போலீசார் நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றது குறித்து வருத்தம் கொள்கிறார் ஜைட் இப்ராகிம். “பிஎன் காலத்தில் போலீஸ் ஒரு சார்பாக நடந்துகொள்வார்கள். அது எனக்குத் தெரியும். இப்போது குழப்பம் விளைவிக்கும் கலகக்காரர்கள் தண்டிக்கப்படுவார்கள்…

இன, சமய விவகாரங்களே போலீசுக்குப் பெரும் பிரச்னை- ஐஜிபி

இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் அப்துல் ஹமிட் படோர், அண்மைக்காலமாக போலீசுக்குப் பெரும் பிரச்னைகளாக இருப்பவை இன, சமய விவகாரங்கள்தான் என்கிறார். மக்களுக்குச் சிறப்பான, நியாயமான, வெளிப்படையான சேவை வழங்க போலீஸ் முயலும் வேளையில் இப்படிப்பட்ட எதிர்பாராத, சில்லறை விவகாரங்கள் அதற்கு இடையூறாக அமைந்து விடுகின்றன என்றாரவர். “62…

டொங் சொங் காரணமாக மீண்டும் மே 13 நிகழ இடமளிக்காதீர்:…

காபோங்கான் மகாசிஸ்வா இஸ்லாம் ச-மலேசியா(காமிஸ்) , சீனக் கல்வி அமைப்பான டொங் சொங்கை அதன் “துரோகச் செயலுக்காக” தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. அச்சங்கத்தின் துணைத் தலைவர் முகம்மட் ஸொப்ரி சுகில்மி ரஸ்லி, “இன நல்லிணக்கத்தை”க் கெடுப்பதே டொங் சொங்கின் வழக்கமாகும் என்றார். “சக மலேசியர்களே,…

காணொளி ஒன்றில் கிவானிஸ் பதாதையைக் கம்முனிஸ்டு கொடி என்று கூறியவரை…

பினாங்கு, ஜாலான் ராஜா ஊடாவில் நடைபெற்ற 2019 சிங்கே ஊர்வலக் கொண்டாட்டத்தில் கம்முனிஸ்டுக் கொடி ஒன்று ஏந்திச் செல்லப்பட்டதாக ஒரு காணொளியைப் பதிவிட்டவர் போலீசால் தேடப்படுகிறார். அச்சம்பவம் தொடர்பில் போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் அந்த ஊர்வலத்தில் கம்முனிஸ்டுக் கொடி எதுவும் எடுத்துச் செல்லப்படவில்லை என்பது தெரிய வந்திருப்பதாக செபராங்…

ஜாவி சர்ச்சை: டொங் ஜியாவ் சொங் மற்றும் மசீச-வுடன் கலந்துரையாட…

தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்துப் பயன்படுத்தப்படுவதன் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்குத் தீர்வுகாண உதவுமானால் பாஸ் கட்சி சீனக் கல்வி அமைப்பான டொங் ஜியாவ் சொங் , மசீச உள்பட , எந்தத் தரப்புடனும் கலந்துரையாட தயார் என அதன் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார். பொதுநலன் தொடர்பான…

பேராக் பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டில் ஜாவி எழுத்தைப் பயன்படுத்தும்

அடுத்த ஆண்டு தொடங்கி யுனிவர்சிடி பெண்டிடேகான் சுல்தான் இட்ரிஸ்(யுபிஎஸ்ஐ), பேராக்கில் உள்ள அதன் இரண்டு வளாகங்களிலும்- சுல்தான் அஸ்லான் ஷா வளாகம், சுல்தான் அப்துல் ஜலில் ஷா வளாகம் ஆகியவற்றில்- ஜாவி எழுத்தைத் தேசிய சொத்தாக உயர்த்தும் நடவடிக்கைகளை முடுக்கி விடும். ஜாவி எழுத்தை வலுப்படுத்தும் கல்வி அமைச்சின்…

‘சகிப்புத்தன்மை மற்றும் இணக்கமான தேசத்தை உருவாக்குவோம்!’ – பி.எஸ்.எம். கிறிஸ்துமஸ்…

கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் அன்பர்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளோடு, அனைத்து மலேசியர்களுக்கும் 2020 புத்தாண்டு வாழ்த்துகளையும் மலேசிய சோசலிசக் கட்சி தெரிவித்துக்கொண்டது. நாட்டிற்கும் நம் குழந்தைகளுக்கும் ஒரு மகிழ்ச்சியான எதிர்காலத்தை கட்டியெழுப்ப விரும்பினால், நம் தேசத்தையும் சாதாரண மலேசியர்களின் சிந்தனையையும், கடந்த 60 ஆண்டுகளாக நச்சுப்படுத்தியிருக்கும் இன அரசியலை…

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்

வாசகர்கள் அனைவருக்கும் மலேசியாகினி குடும்பத்தாரின் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள். அன்பு, அமைதி, மகிழ்ச்சி அனைத்தும் நிலைத்திருக்க கொண்டாடி மகிழ்வோம் இத்திருநாளை.

ஜாவி விவகாரம்: மஸ்லி டொங் ஜியாவ் சொங்கைச் சந்தித்துப் பேச…

தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி எழுத்துக்கலை கற்பிக்கப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் சீனக் கல்வி அமைப்பான டொங் ஜியாவ் சொங்குடன் ஒரு கலந்துரையாடல் நடத்துவது நல்லது என்று கோலாலும்பூர், சிலாங்கூர் சீனர் அசெம்ப்ளி மண்டபம் (கேஎல்எஸ்சிஏஎச்) கூறியது. இன்று பிற்பகல் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய கேஎல்எஸ்சிஏஎச் மனித…

‘வழக்கு தொடுங்கள் நான் தயார்’ -மஇகாவுக்கு இராமசாமி பதிலடி

பகாங், கேமரன் மலை விவசாயிகள் தோட்டங்கள் தரைமட்டமாக்கப்பட்டதற்கு மஇகா-வே காரணம் என்று குற்றஞ்சாட்டியதை மீட்டுக் கொள்ளப்போவதில்லை என்கிறார் பினாங்கு துணை முதல்வர் II பி.இராமசாமி. “எதையும் ஆராயாமல் பேசும் மஇகா கோமாளிகள் போல் அல்லாமல் அப்பகுதி பற்றி ஆராய்ந்திருக்கிறேன். உண்மை நிலவரங்கள் எனக்குத் தெரியும். “மஇகா வழக்கு தொடுக்குமானால்…

மஇகா: கேமரன் மலை விவசாயிகளைத் தூண்டிவிட்டு அவர்களின் தோட்டங்கள் அழிய…

கேமரன் மலை விவசாயிகளின் தோட்டங்கள் அழிக்கப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமியை மஇகா தலைமைச் செயலாளர் எம்.அசோஜன் சாடினார். இராமசாமி “தூண்டிவிட்டதும் அவரின் பதவிப் பேராசையும்தான்” நடப்பு நிலவரத்துக்குக் காரணம் என்றவர் சாடினார். மலேசியாகினியில் எழுதிய கட்டுரையில் இராமசாமி, பிஎன் கேமரன் மலை விவசாயிகளுக்குத்…