மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
‘இன்னும் சில மணிநேரங்களில் பூமியில் விழுகிறது சீன விண்வெளி நிலையம்’
கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1இன் உடைந்த பாகங்கள் திங்களன்று பூமியில் விழ வாய்ப்புண்டு என்று அதைக் கண்காணித்து வரும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஐரோப்பிய விண்வெளி முகமை (European Space Agency) கணித்துள்ளதைப் போல இன்னும் சில மணிநேரங்களில் அந்த விண்வெளி நிலையத்தின் பாகம் பூமியில் விழும்…
பாகிஸ்தானில் தான் சுடப்பட்ட சொந்த ஊருக்கு சென்ற மலாலா
தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பிறகு, முதன்முறையாக பாகிஸ்தானில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய். அவரது சொந்த ஊரான ஸ்வாட், முன்னொரு காலத்தில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்தது. பயங்கரவாதிகளின் அடக்குமுறைக்கு மத்தியில் பெண் கல்வி குறித்து பெரிதும் பேசி வந்த…
இஸ்ரேல் – பாலத்தீன கலவரம்: விசாரணைக்கு ஐநா வலியுறுத்தல்
நேற்று (வெள்ளிக்கிழமை) காசா - இஸ்ரேல் எல்லைப்பகுதியில் பாலத்தீனர்கள் நடத்திய பேரணியின்போது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 16 பேர் பலியான சம்பவத்தை பாலத்தீனர்கள் தேசிய துக்க தினமாக அனுசரித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டானியோ…
உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதல்: 60 அமெரிக்க அதிகாரிகளை வெளியேற்றியது…
பிரிட்டனில் முன்னாள் உளவாளி மீது நச்சுப்பொருள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்கா எடுத்த நடவடிக்கைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக 60 அமெரிக்க ராஜரீக அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியுள்ளது. ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடவும் ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. ரஷ்ய தூதர்களை வெளியேற்றிய பிற நாடுகளும் இம்மாதிரியான எதிர்வினையை…
இஸ்ரேல் – காசா எல்லை: பாலத்தீனர்கள் மீது தாக்குதல்; 12…
தங்களது ஆறு வாரகால போராட்டத்தை துவக்குவதற்காக காசாவிலுள்ள ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் இஸ்ரேலின் எல்லையை நோக்கி பேரணியாக சென்றனர். இந்த பேரணியின்போது குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 750க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாலத்தீனத்தின் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூடே அதற்கு காரணமென்றும் அது குற்றஞ்சாட்டியுள்ளது. ஆறு இடங்களில்…
சிறுவர்களை கொண்டு பயங்கரவாதிகள் படை அமைக்க முயற்சி..
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனை சேர்ந்தவர், உமர் அகமது ஹக் (வயது 25). இவர் முறையாகப் பயிற்சி பெறாமலேயே, மதப்பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவர் சிறுவர்களுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய வீடியோ படம் காட்டி அவர்களை பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு மூளைச் சலவை செய்து உள்ளார்.…
மிக சக்திவாய்ந்த ராணுவம் ரஷ்யாவா, அமெரிக்காவா?
உலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றி வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் 60 வெளியுறவுத் துறை அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா மட்டுமல்ல, ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய…
பழங்குடியின மக்கள் பட்ட துயரங்களுக்கு, மன்னிப்பு கோரிய கனடா பிரதமர்…
பிரிட்டிஷ் கொலம்பிய காலணித்துவ அரசினால் 150 ஆண்டுகளுக்கு முன்னர் பழங்குடியின தலைவர்கள் 6 பேர் தூக்கிலடப்பட்ட சம்பவத்திற்கு கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தற்போது மன்னிப்புக் கோரியுள்ளார். பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு தீர்வுகளை வழங்க புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை செயற்படுத்தி வருகின்ற பிரதமர் இச்சம்பவம் குறித்து…
சிரியா: கிளர்ச்சியாளர்களின் நகருக்குள் நுழைந்தது அரசுப்படை
கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதற்கு காலக்கெடு வழங்கப்பட்ட பின்னர், கிழக்கு கூட்டாவிற்குள் வெகுதூரம் சிரியா அரசுப்படை நுழைந்துள்ளது. ஜெஷ் அல்-இஸ்லாம் என்ற கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற டௌமா நகரில் மிக பெரியதொரு போர் நடவடிக்கை மேற்கொள்ள சிரியா அரசுப்படை தன்னை தயார் செய்து வருவதாக செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. பிற கிளர்ச்சிப்படை பிரிவுகளை…
லண்டனில் 12 நாட்களில் 10 பேர் கொலை: வீதிகளில் பெரும்…
லண்டனில் கடந்த 12 நாட்களில் சுமார் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று மெற்றோ பொலிடன் பொலிசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்கள். இவற்றில் 90 சதவிகிதமானவை கத்திக் குத்து சம்பங்களே ஆகும். லண்டன் வீதிகளில் பல குண்டர்கள் உலவி வருகிறார்கள். அவர்கள் கைகளில் இருக்கும் ஒரே ஆயுதம் கத்தி…
20 நாடுகளில் இருந்து ரஷிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்..
முன்னாள் ரஷிய உளவாளி செர்கெய் ஸ்க்ரியாலும், அவரது மகளும் இங்கிலாந்தில் நச்சுத் தாக்குதலுக்கு ஆளாயினர். இந்த நடவடிக்கையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது புகார் கூறப்பட்டது. அதற்கு ரஷியா மறுப்பு தெரிவித்துள்ளது. இருந்தும் இங்கிலாந்து தன் நாட்டில் இருந்து ரஷிய தூதரக அதிகாரிகள் 23 பேரை வெளியேற்றியது.…
சீனாவுக்கு ரகசிய ரயிலில் சென்றாரா வட கொரிய அதிபர் கிம்?
மூத்த வட கொரிய அதிகாரி ஒருவருடன் ரயில் ஒன்று பீஜிங்கிற்கு வந்துள்ளது என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மூன்று பெயர் வெளியிடப்படாத நபர்கள் தந்த தகவல்படி அது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னாக இருக்கலாம் என ப்ளூம்பர்க் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. சீனா, வட கொரியாவின்…
சௌதி மீது ஏவுகணை தாக்குதல்; ரியாத் அருகே ஒருவர் பலி
ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனிலிருந்து சௌதி அரேபியாவின் எல்லைக்குள் ஏவிய ஏழு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக சௌதியின் படைகள் தெரிவித்துள்ளன. அதில் மூன்று ஏவுகணைகள் சௌதியின் தலைநகரான ரியாத்தை நோக்கி ஏவப்பட்டதாகவும், அதன் பாகங்கள் புறநகர்ப்பகுதியின் தரையை வந்தடைந்தபோது, அதில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏமனின் உள்நாட்டுப்…
உளவாளி மீதான தாக்குதல் சர்ச்சை: 60 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றுகிறது…
பிரிட்டனில் வசித்துவந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி மற்றும் அவரது மகள் மீது நடைபெற்ற நரப்பு மண்டலத்தை பாதிக்கும் நச்சுத் தாக்குதல் தொடர்பாக ரஷ்ய நாட்டின் 60 ராஜிய அதிகாரிகளை வெளியேற்றும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஜெர்மனியும் பிரான்சும் தலா நான்கு ரஷ்ய ராஜிய அதிகாரிகளை…
பாகிஸ்தானில் கிறிஸ்தவ தம்பதியரை செங்கல் சூளையில் போட்டு எரித்துக் கொன்ற…
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கசூர் மாவட்டம், சக் என்ற கிராமத்தில் இருக்கும் செங்கல் சூளையில் சஹ்ஜாத் மசி(35) மற்றும் அவரது மனைவி ஷமா(31) ஆகியோர் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர். அந்த சூளை அமைந்துள்ள இடத்தில் கூலித் தொழிலாளிகளுக்கு…
முன்னாள் தலைவர் ஜெர்மனியில் கைது: கேட்டலோனியாவில் பதற்றம் அதிகரிப்பு
ஸ்பெயினின் கேட்டலோனிய பிரதேச முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவருடைய வழங்கறிஞர் தெரிவித்திருக்கிறார். தேச துரோகம் இழைத்ததாகவும், கலகம் செய்ததாகவும் ஸ்பெயினால் தேடப்பட்டு வரும் பூஜ்டிமோன், டென்மார்க்கில் இருந்து பெல்ஜியத்திற்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜயுமே அலன்சோ-குயவில்லா கூறியுள்ளார். கேட்டலோனியா பிரிந்து தனிநாடு…
துப்பாக்கி கட்டுப்பாட்டை வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் பிரமாண்ட பேரணி
அமெரிக்காவில் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக அந்நாடு முழுவதும் நடைபெறும் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். "மார்ச் பார் அவர் லைவ்ஸ்" என்று பெயரிட்டுள்ள மாணவர் வழிநடத்தும் இந்தப் பேரணியானது, கடந்த மாதம் ஃபுளோரிடாவிலுள்ள பள்ளியொன்றில் துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு…
சிரியா: அரசு கட்டுப்பாட்டில் 70 சதவீத கிழக்கு கூட்டா
டமாஸ்கஸின் புறநகர் பகுதிகளில் சிரிய அரசு தனது கட்டுப்பாட்டை அதிகப்படுத்தி வரும் நிலையில், கிழக்கு கூட்டாவின் பல்வேறு நகரங்களில் உள்ள சிரிய கிளர்ச்சியாளர் குழுக்கள் வெளியேறி வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி நகரமான டூமாவில் இருந்து போராளிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் பலரும் பேருந்துகள் மூலம் சனிக்கிழமையன்று…
சிரியாவில் ரஷ்ய ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 37 பேர் பலி..
சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சிரியாவின் அர்பின்…
பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தப்பட்ட ரோஹிஞ்சா அகதி சிறுமிகள் – பிபிசி…
வங்கதேசத்தில் ரோஹிஞ்சா அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் பதின்ம வயது சிறுமிகளும் பெண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக பிபிசி ஆய்வு கண்டறிந்துள்ளது. மியான்மரில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களில் இருந்து தப்பித்து, தங்கள் குடும்பத்தினருடன் வங்கதேசத்தை சரணடைந்த பரிதாபத்திற்குரிய இந்த சிறுமிகள் அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். இந்த முகாம்களில் தங்கியிருக்கும் பெண்களை வெளிநாட்டினருக்கு…
பிரான்ஸ்: பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருந்தவர் சுட்டுக்கொலை
பிரான்சின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பொதுமக்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மூன்று பொதுமக்களை கொன்றதாக சந்தேகிக்கப்படும் இந்த துப்பாக்கிதாரி போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொரோக்கோவை சேர்ந்தவராக கருதப்படும் அந்த துப்பாக்கிதாரி, தான் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறியதாக…
அறிவுசார் சொத்துரிமை விவகாரம் – சீனா மீது கடுமையான நடவடிக்கை…
“மேக் அமெரிக்கா கிரேட் அகைன்” (மீண்டும் அமெரிக்காவை பெருமைமிக்கதாக மாற்றுவோம்) என்ற வாக்குறுதியுடன் அதிபரான டிரம்ப், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை சமீபத்தில் உயர்த்தினார். இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரி…
அச்சத்தில் வாழும் ரோஹிங்கியா குழந்தைகள் கடத்தி விபசாரத்திற்கு விற்கும் கொடுமை
மியான்மரில் நடைபெற்ற இனக்கலவரத்தில், சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகின. இருக்க இடமில்லாமல் லட்சக்கணக்கானோர் வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். அப்படித் தஞ்சம் அடைந்து முகாம்களில் வசித்துவரும் பெண்களைக் கடத்தல்காரர்கள் நெட்வொர்க் அமைத்து, பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்துவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. அன்வாரா…
























