விபத்தில் ஒருவர் பலி: ஊபரின் ஓட்டுநரில்லா கார்களின் பரிசோதனை நிறுத்தம்

ஊபர் நிறுவனத்தின் ஓட்டுநரில்லா வாகனத்தால் ஏற்பட்ட பலியை தொடர்ந்து அனைத்து வட அமெரிக்க நகரங்களிலும் தனது ஓட்டுநரில்லா கார்களை பரிசோதிப்பதை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டெம்பே பகுதியில் பரிசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊபரின் ஓட்டுநரில்லா கார் ஒன்று, சாலையை கடக்க முயன்ற 49 வயதான பெண் மீது…

போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை: டிரம்ப்

அமெரிக்காவில் வலி நிவாரணி மாத்திரைகளுக்கு மக்கள் அடிமையாவதை தடுக்கும் தனது திட்டத்தின் ஒரு பங்காக போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார். வலி நிவாரணியில் பயன்படுத்தப்படும் ’ஓபியாட்’ எனப்படும் மருந்துக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நியூ ஹாம்ஷர் மாநிலத்தில் பேசிய அவர் இதனை…

“ரகசிய மெட்ரோ, கடுங்குளிர், அணுகதிர்” – ரஷ்யா குறித்த 6…

அண்மைக்காலமாக செய்தி ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருக்கிறது ரஷ்யா. சிரியா போரில் அதன் பங்கு முதல் உளவாளி கொலை வரை செய்திகள் ரஷ்யாவை சுற்றியே சுழல்கின்றன. இதற்கு மத்தியில் அங்கு நேற்று தேர்தலும் நடந்துள்ளது. சரி. நமக்கு ரஷ்யாவை பற்றி வேறு என்னவெல்லாம் தெரியும்? செஞ்சதுக்கம் முதல் அந்நாட்டின்…

ரஷ்யா: அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதினுக்கு குவியும் வாழ்த்து

ரஷ்யாவின் அதிபராக மீண்டும் விளாடிமர் புதின் வெற்றி பெற்றதற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுவரை மேற்கத்திய தலைவர்கள் யாரும் புதின் வெற்றிக்கு வாழ்த்தவில்லை. "வரலாற்றில் இல்லாத அளவிற்கு ரஷ்யாவுடன் நல்ல உறவு நிலவி வருவதாக" சீன அதிபர் ஷீ ஜின்பிங் கூறியுள்ளார். கசகஸ்தான், பெலாரஸ்,…

70 சதவித ஆதரவுடன் புதின் மீண்டும் அதிபராவார், ரஷ்ய ஊடகங்கள்…

ரஷ்யாவின் தற்போதைய அதிபரான விளாடிமிர் புதினின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று தொடங்கி நடந்து வருகிறது. வாக்களிக்க தகுதியுடைய மக்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இத்தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட எட்டு பேர்…

சிரியா: ஆஃபிரினில் இருந்து குர்துகளை வெளியேற்றிய துருக்கி படைகள்

சிரிய குர்துக்களின் நகரமான ஆஃபிரின் மையத்தை, துருக்கி ஆதரவிலான படைகள் தங்கள் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று நகரத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக கூறிய அவர்கள், அங்கு தங்கள் கொடிகளை ஏந்திச் சென்று, அங்கிருந்த பழப்பெரும் குர்து நபரின் சிலையை தகர்த்தனர். பயங்கரவாதிகள் என்று கருதி,…

பிரிட்டனின் 23 ராஜீய அதிகாரிகளை வெளியேற்ற ரஷ்யா முடிவு

பிரிட்டனில் வாழ்ந்து வந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரியும், அவரது மகளும் நரப்பு மண்டலத்தை பாதிக்கும் நஞ்சால் தாக்குதலுக்குள்ளானதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில் பிரிட்டனின் 23 ராஜீய அதிகாரிகளை ரஷ்யா நாட்டை விட்டு வெளியேற்றவுள்ளது. மாஸ்கோவிலுள்ள பிரிட்டன் தூதரகத்தின் ஊழியர்கள் ஒரு வாரத்திற்குள் தாயகத்திற்கு அனுப்பப்படுவர் என்று…

தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சீனா எதிர்ப்பு

தைவான் அதிகாரிகளை சந்திக்க அந்நாட்டுக்கு அமெரிக்க அதிகாரிகள் பயணிக்க அனுமதிக்கும் சட்டத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். தைவானை துரோகியாக கருதும் சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, அமெரிக்கா "ஒரே சீனா" என்ற கொள்கையை கடைபிடிக்க வேண்டும்; தைவான் உடனான அதிகாரப்பூர்வ பரிமாற்றங்களை நிறுத்த…

உலகின் மகிழ்ச்சியான நாடு ஃபின்லாந்து : ஐ.நா அறிக்கை

பூமியில் மகிழ்ச்சியான இடம் ஃபின்லாந்து என இந்த ஆண்டுக்காண வருடாந்திர அறிக்கையில் ஜ.நா குறிப்பிட்டுள்ளது. சென்ற ஆண்டு இந்த இடத்தை நார்வே பிடித்திருந்தது. மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளார்கள் மற்றும் என்ன காரணங்களால் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பதை வைத்து உலக மகிழ்ச்சி அறிக்கை அளவிடும். நோர்டிக் நாடுகள்தான் வழக்கமாக…

சிரியா: தொடர் தாக்குதல்களால் 50,000 பேர் வெளியேறினர்

வடக்கு மற்றும் தென் சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 50 ஆயிரம் பேர் அங்கிருந்து தப்பி வெளியேறி உள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். துருக்கி படைகளும் அதன் கூட்டாளிகளும் முற்றுகையை விலக்கியதை அடுத்து, தென் சிரியாவில் உள்ள ஆஃபிரின் நகரத்தில் இருந்து சுமார் 30 ஆயிரம்…

மனிதக் கடத்தலுக்காக 200 பேருக்குப் பிடியாணை

லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்பும் அகதிகளை, சட்டவிரோதமாக அனுப்பும் பணியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், லிபியாவையும் வெளிநாடுகளையும் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் மீது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என, லிபிய சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (15) அறிவித்தது. “குடியேற்றச் செயற்பாடுகள், மனிதக் கடத்தல், சித்திரவதை, கொலை, வன்புணர்வு ஆகியவற்றோடு…

வேதிப்பொருள் தாக்குதல்: ‘ரஷ்யா விளக்கமளிக்க வேண்டும்’- பிரிட்டனின் நேச நாடுகள்

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் மீது நடந்த கொலை முயற்சி தொடர்பாக ''நம்பகமான விளக்கம் அளிப்பது'' ரஷ்யாவின் பொறுப்பு என்று பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் தாங்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு…

‘விரைவில் பிரிட்டன் அதிகாரிகளை வெளியேற்றுவோம்’ : ரஷ்யா பதிலடி

பிரிட்டனில் பணியாற்றும், ரஷ்யாவைச் சேர்ந்த 23 ராஜீய அலுவலர்களை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ரஷ்யாவில் பணியாற்றும் பிரிட்டன் அலுவலர்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்த வெளியேற்றம் நிச்சயம் நடக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறியுள்ளார். முன்னதாக முன்னாள்…

ஸ்டீஃபன் ஹாக்கிங்: கோட்பாடுகள் மூலமாக நவீன அறிவியலுக்கு திசைவழி காட்டியவர்

எனக்கு மரணம் குறித்த அச்சம் இல்லை. அதற்காக விரைவாக இறந்து போக வேண்டும் என்றில்லை. நான் முடிக்க வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன என்று ஒரு முறை கூறினார் ஸ்டீஃபன் ஹாக்கிங். அந்த அனைத்து பணிகளையும் முடித்துவிட்டாரா என்று தெரியவில்லை. 76 வயதில் இந்த பூவுலகை விட்டு சென்றிருக்கிறார்…

முற்றுகிறது மோதல் – ரஷ்ய அதிகாரிகள் வெளியேற பிரிட்டன் உத்தரவு

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கத்தை ரஷ்யா அளிக்காததால் தங்கள் நாட்டில் பணியாற்றும் 23 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உளவுப் பிரிவு அதிகாரிகளின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. பிரிட்டனில் கடந்த மார்ச் 4 அன்று மயங்கிய…

உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்க வேண்டும்: பிரிட்டன்…

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள்,ரஷ்யராணுவத்தால் பயன்படுத்தப்படும் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனத்தால் தாக்கப்பட்டுள்ளனர் என தெரீசா மே தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியதற்கான "அதிக வாய்ப்புகள்" இருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது குறித்து விளக்கமளிக்குமாறு ரஷ்ய தூதரகத்தை வெளியுறவுத் துறை அலுவலகம் கேட்டுள்ளது. செவ்வாயன்று…

ஜப்பான்: விவசாய நிலங்களை பாதுகாக்க ‘ரோபோ ஓநாய்’ வடிவமைப்பு

விவசாய நிலங்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ரோபோ ஓநாய், தனது சோதனையில் வெற்றி பெற்றதையடுத்து அடுத்த மாதம் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. 65 சென்டிமீட்டர் நீளமும், 50 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட இந்த ரோபோ விலங்கு, உண்மையான விலங்கினை போல முடியையும், சிவப்பு கண்களையும் கொண்டுள்ளது என…

உலகின் மிகவும் ஆபத்தான 50 நகரங்கள் பட்டியல் வெளியீடு.. முதலிடம்…

உலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும் 50 நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடம் வகிக்கிறது. உலகின் போதை மருந்துக்கு அது ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது. இங்கு போதை பொருள் கடத்தல் கும்பலின்…

நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 49…

நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச நிலையத்தில், 71 பேருடன் பயணித்த விமானம் நொறுங்கி விழுந்ததில்குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டனர். திங்கள்கிழமை பகலில் தரையிறங்கும் போது வங்கதேச விமான சேவை விமானம் ஒன்று விமான ஓடுதளத்தில் இருந்து விலகி சென்றதால் தீ பிழம்பு உண்டானது. மீட்பு படையினர் சிதைந்த விமானத்தில் இருந்து உடல்களை…

சற்றுமுன் உலகை நடுங்கவைக்கும் ஹப்பர் சோனிக் ஏவுகணையை ஏவியது ரஷ்யா……

ரஷ்யா சில மணி நேரங்களுக்கு முன்னதாக, ஹப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி உலக வரலாற்றில் மிகப் பெரிய வல்லரசு என காட்டியுள்ளது. ஒலியைக்(sound) காட்டிலும் 3 மடங்கு வேகமாக செல்லக் கூடிய இந்த ஏவுகணையை ரஷ்யாவின் மிக் 31 ரக விமானம்  விண்ணில் பறந்து ஏவியுள்ளது என அதிர்வு…

சிரியா: கிளர்ச்சியாளர்கள் பகுதிகளை கைப்பற்றி முன்னேறும் அரசு படைகள்

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு கோட்டா பகுதியில் சிரியா குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்த்துள்ளதாக, அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கு கோட்டா பகுதியின் பெரிய நகரமாக விளங்கும் டூமா நகரின்தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்துக்கான பாதைகளை பிற பகுதிகளில் இருந்து துண்டித்துள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான சிரியன் அப்சர்வேட்டரி…

சிரியா: சிறையில் இருக்கும் ஜிகாதிகளை வெளியேற்றும் கிளர்ச்சியாளர்கள்

கிழக்கு கூட்டாவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஜிகாதி போராளிகளை வேறிடத்திற்கு மாற்றுவதற்கு சிரியா கிளர்ச்சி குழுவான ஜெய்ஷ் அல்-இஸ்லாம் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்குழு ஒன்றுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் நடந்த…

வட கொரியாவுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிகள் நடப்பதாக டிரம்ப் தகவல்

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்த ஒரு நாளுக்கு பின்னர், கிம்முடனான சந்திப்பின்போது, ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அதிபர் டிரம்ப் டுவிட்டர் பதிவிட்டுள்ளார். வட கொரியா "நடைமுறை செயல்பாடுகளை" எடுக்காதவரை இந்த சந்திப்பு நடைபெறாது என்று முன்னதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது,…