பெண்களிடம் இருந்து பாதுகாக்க கோரி, ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பெண்களிடம் இருந்து பாதுகாக்க கோரி ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் இன்று சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க தலைவர் அருள்துமிலின் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், ஆண்களுக்கு எதிராக இழைக்கப்படும் சட்ட மீறல்களை தடுக்க வேண்டும். திருமணமான ஆண்கள் தற்கொலைக்கு காரணமாக…

அமெரிக்க ராக்கெட்டுகள் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 21 பாகிஸ்தான் தலீபான்கள் பலி

தேரா இஸ்மாயில் கான், ஆப்கானிஸ்தானின் குனார் பகுதியில் பாகிஸ்தான் தலீபான் தலைவர் முல்லா பஸ்லுல்லா பதுங்கி உள்ளார் என கிடைத்த தகவலையடுத்து அமெரிக்காவின் 2 ராக்கெட்டுகள் அங்கு கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  அவர்களில் பஸ்லுல்லாவின் மகனும் ஒருவர்.  சம்பவம்…

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா விருப்பம்

அமெரிக்காவுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் - இடமிருந்து ஒரு தென் கொரிய தூது குழு முக்கிய செய்தியொன்றை எடுத்து செல்கிறது. வட கொரியாவில், தென் கொரியா குழு மற்றும் கிம் இடையே நடந்த அரிதான பேச்சு வார்த்தை ஒன்றில், அமெரிக்காவுக்கு சொல்லும்படி கிம் செய்தியொன்றை…

கிம் ஜாங்-உன் சகோதரரை கொன்றது வட கொரியா: அமெரிக்கா அறிக்கை

வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜோங்-நாம் வடகொரியா அரசின் உத்தரவின்பேரில் நிகழ்த்தப்பட்ட ஒரு நச்சு வேதிப்பொருள் தாக்குதலிலேயே கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது. வடகொரிய தலைநகர் பியாங்கியாங்கில், அந்நாட்டு அதிபரை தென்கொரிய அதிகாரிகள் குழு திங்களன்று சந்தித்துப் பேசிய பின், அச்சந்திப்பு உளப்பூர்வமாக இருந்ததாக…

உதவியை நிறுத்தியும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மாற்றம் இல்லை பாகிஸ்தான்…

வாஷிங்டன், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது என்றும், நிதி உதவி பெறுவதற்காக அமெரிக்காவை ஏமாற்றிவிட்டது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியதை அடுத்து, பாகிஸ்தானுக்கான நிதி உதவி மற்றும் ராணுவ உதவி ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தான் வெளிப்படையாக பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம்…

தென் கொரிய தலைவர்களுடன் கிம் ஜோங்-உன் விரைவில் சந்திப்பு

அடுத்த மாதம் நடக்கவுள்ள ஒரு உச்சி மாநாட்டின்போது வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் சந்திக்கவுள்ளதாக தென் கொரிய அரசின் தூதர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கு பிறகும், கிம் ஜோங்-உன் வட கொரிய தலைவராக பதவியேற்ற பின்னரும் இருநாட்டு தலைவர்கள் சந்திப்பது இதுவே முதல்முறையாக இருக்கும். தங்கள்…

சிரியாவில் போர் நிறுத்தத்தை மீறி, அரசு படையினர் நடத்திய வான்வழி…

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயுதம் தாங்கி போரில் ஈடுபட்டு வரும், கிளர்ச்சிக்குழுக்கள், ராணுவத்தின் ஒரு பிரிவு ஆகியவற்றை ஒடுக்கும் பணியில் அதிபர் ஆதரவு படையினர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகின்றனர். 6 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுச் சண்டையில் லட்சக்கணக்கான மக்கள்…

சிரியாவில் தாக்குதல்கள் தொடரும்: அதிபர் அல்-அசாத்

கிழக்கு கூட்டாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில் சிரிய அரசு நடத்தி வரும் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்கள் கொடூரமானது என்று தெரிவித்துள்ள அமெரிக்கா, அதிபர் பஷார் அல் அசாத்தின் முக்கிய கூட்டாளியான ரஷியா, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எனக்கூறி அப்பாவி பொதுமக்களை கொல்வதாக…

பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்குத் தெரிவான முதல் இந்து தலித் பெண்

பாகிஸ்தானில் சிறுபான்மையினத்தவர் மற்றும் பெண்கள் ஆகியோர்களின் உரிமைக்கு மதிப்பளிக்கும் விதத்தில் அங்கு முதன்முறை PPP கட்சி சார்பாக ரத்னா பக்வான் தாஸ் சாவ்லா என்ற இந்து பெண் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தார். தற்போது இதன் அடுத்த கட்டமாக அங்கு சிந்த் மாகாணத்தைச் சேர்ந்த கிருஷ்ணா குமாரி…

சிரியாவில் தீவிரமடையும் தாக்குதல்: தப்பி செல்லும் மக்கள்

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு கூட்டாவில் நடத்தப்படும் தாக்குதல்கள் தீவிரமடைந்திருப்பதால் அப்பகுதியில் வாழும் மக்கள் தப்பி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் கிழக்கில் அமைந்திருக்கும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக பல முனைகளிலும் சிரியா அரசு ராணுவம் அழுத்தங்களை அதிகரித்து…

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப் பட்டுள்ள சிரியாவுக்கு நிவாரணப் பொருட்கள் சென்றடைய…

சமீப நாட்களாக சிரிய உள்நாட்டுப் போரில் அரச படைகள் மற்றும் ரஷ்ய விமானப் படைகளின் தாக்குதலில் 700 இற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப் பட்டுள்ள நிலையில் அங்கு இதுவரை யுத்த நிறுத்தம் பூரணமாக அமுலாகவில்லை. மேலும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஐ.நா இன் நிவாரணப் பொருட்களை ஏற்றிச்…

புற்றுநோய் குறித்து ஆய்வு செய்ய இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு 1.1…

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நவீன் வரதராஜன் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் புற்றுநோய் சிகிச்சை குறித்து ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் டெக்சாஸ் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது. நவீன்…

ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் குளிருக்கு இதுவரை 55 பேர்…

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. இது சைபீரிய வானிலை அமைப்பு என்று அழைக்கப்படுகிறது. பனிப்புயல் மற்றும் கடும் பனி பொழிவால் அனைத்து சாலைகள், ரயில்வே சேவைகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன மேலும் நூற்றுக்கணக்கணக்கான விமான சேவைகளை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய தரைக்கடலின்…

ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்பினருடன் இருந்த ஜெர்மன் நாட்டவர் கைது

கந்தகார், ஆப்கானிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் மிகுந்த மாகாணமான ஹேல்மண்ட் மாகாணத்தில், தலீபான் அமைப்பைச்சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.  இந்த மூன்று பேரோடு சேர்த்து ஜெர்மன் நாட்டவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த ஒருவர் தலீபான் அமைப்பினரோடு கைது செய்யப்பட்டுள்ளதன் மூலம், தலீபான்…

‘ஆப்பிரிக்க குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு 2030க்கு பின்னும் தொடரும்’

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்க குழந்தைகள் மத்தியில் நிலவும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க வேண்டும் என்று ஐ.நாவின் நிலைபேண் வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) திட்டத்தின்கீழ் வைத்திருக்கும் இலக்கை அடைய முடியாது என்பது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கல்வி தொடர்பாக ஆப்பிரிக்க நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம்…

சிரியா: போர் நிறுத்தம் தோல்வியால் மனிதநேய உதவிகள் பாதிப்பு

உருவாக்கப்பட்டிருக்கும் 5 மணிநேர போர் நிறுத்தம், சிரியா அரசு படைப்பிரவுகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெறும் போரை தடுப்பதற்கு 2வது நாளாகவும் தோல்வியடைந்துள்ளது. கிழக்கு கூட்டாவில் முற்றுகையிடப்பட்டுள்ள கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள பகுதிக்கு உதவி பொருட்களை வழங்குவதற்கு தாக்குதலில் தினமும் இடைவெளி வழங்க சிரியா அரசின் ரஷ்ய கூட்டணி படைகள்…

சிரியா: போருக்கு மத்தியிலும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் பெண்கள்

ஐ.நா மற்றும் பிற சர்வதேச தொண்டு அமைப்புகள் சார்பில் போரில் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்த மக்களுக்கு உதவிப் பொருட்களை விநியோகம் செய்யும் ஆண்களால், அங்குள்ள பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது. உணவு மற்றும் மீட்புதவிகளை வழங்க, தங்கள் பாலியல் இச்சைகளுக்கு இணங்குமாறு, உதவிகளை விநியோகம் செய்யும்…

அதிகார போட்டி.. மதம்.. மரணம்.. சிரியாவில் ஏன் போர் நடக்கிறது?

டமாஸ்கஸ்: சிரியாவில் கடந்த 8 வருடங்களாக போர் நடந்து வருகிறது. 2012ல் தான் இந்த போர் உக்கிரமாக நடக்க ஆரம்பித்தது. தற்போது மீண்டும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும்…

சிரியா போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா?

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் கடந்த சனிக்கிழமை சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளபோதிலும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீது சிரியா அரச படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தலைநகர் டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள கிழக்கு கூட்டாவில் நடந்த தாக்குதல்களில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள்…

சவுதி அரேபியாவில் பெண்களும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி அரேபியா விஷன் 2030 என்ற தொலைநோக்குத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். சில நாட்களுக்கு முன் சவுதி பெண்கள் ஆண்களில் அனுமதி இல்லாமலேயே தொழில் தொடங்கலாம் என்று அறிவித்திருந்தது. முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரியில் அரசின் அதிகாரப்பூர்வ முடிவுகளை எடுப்பதற்கு…

சிரியா: “பூமியில் உள்ள நரகத்தை மாற்றும் நேரம் வந்துவிட்டது”

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டாவில், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா நீட்டித்துள்ளது. விமான தாக்குதல்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக செய்திகள் வரும் நிலையில், ஐ.நா இந்த கோரிக்கையை நீட்டித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கடந்த சனிக்கிழமை சிரியாவில் தற்காலிக…

நாடு கடத்தப்பட்ட போதை மருந்து கடத்தல்காரர்

கடந்த ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக 250 டன்னிற்கும் அதிகமான அளவு போதை மருந்துகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்படும் நபர் ஒருவர் கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். ஈக்குவேடாரை சேர்ந்த வாஷிங்டன் பிராடோ அல்வா என்ற அந்த நபர் அமெரிக்கா முழுவதும் போதை மருந்து செயற்பாடுகளை மேற்கொண்டதாக வழக்கறிஞர்கள்…

சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்திற்கு, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்…

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப்படையினர் இதுவரை இல்லாத அளவுக்கு ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஒர் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ந்து வருகின்றனர். இந்த சூழலை…