நவாஸ் ஷெரிப் வெற்றியை புகழ்ந்து தள்ளியுள்ள இந்திய நாளிதழ்கள்

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை இந்தியப் பத்திரிகைகள் புகழ்ந்துதள்ளியுள்ளன. இந்தியாவுடனான அமைதிப் பேச்சுக்களுக்கு நவாஸ் ஷெரிப்பின் வெற்றி நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றும் நாளிதழ்கள் கூறியுள்ளன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஷெரிப்புக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். நவாஸ் ஷெரிப் இந்தியாவுக்கு விஜயம்…

இடிபாடுகளிலிருந்து 17 நாட்கள் கழித்து உயிரோடு மீண்ட பெண்

வங்கதேசத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த பெண் ஒருவர் 17 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தலைநகர் டாக்காவுக்கு அருகே இருந்த ஒரு எட்டு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்தக் கட்டிடத்தில் நான்கு ஆயத்த-ஆடைத் தொழிற்சாலைகளும் ஒரு வங்கியும் செயற்பட்டு வந்தன. கட்டிட இடிபாடுகளுக்கிடையே…

நியூசிலாந்தில் கரையொதுங்கிய மர்ம உயிரினம்! திணறும் விஞ்ஞானிகள்

நியூசிலாந்து நாட்டின் பியுக்ஹினா கடற்கரையொன்றில் இராட்சத கடல் வாழ் உயிரினமொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இதன் உடலின் பெரும் பகுதி அழுகிய நிலையில் காணப்படுகின்றது. இம்மர்ம உயிரினம் தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்கியுள்ளனர். திமிங்கிலம் அல்லது உவர் நீர் முதலை என பல விலங்குகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்த்து…

வங்கதேச இஸ்லாமியக் கட்சித் தலைவருக்கு மரண தண்டனை

வங்கதேசத்தின் பெரிய இஸ்லாமிய எதிர்க்கட்சியான ஜமாத் ஈ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் போர்க் குற்றம் செய்ததாகக் கூறி அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. அந்தக் கட்சியின் துணைத் தலைமைச் செயலாளரான முஹமட் கமரூஷாமன் அவர்களை, இனப்படுகொலை மற்றும் பாலியல் வல்லுறவு…

அமிலத் தன்மை கொண்டதாக மாறுகிறது ஆர்டிக் கடல்

கரியமில வாயுக்களின் வெளியேற்றம் காரணமாக ஆர்ட்டிக் கடற்பகுதி விரைவாக அமிலத் தன்மை கொண்டதாக மாறி வருகிறது என்று நார்வே நாட்டினர் நடத்தியுள்ள ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆர்ட்டிக் கடலின் பல பகுதிகளில் குறிப்பிடத்தகுந்த அளவில் அமிலத்தன்மை காணப்பட்டதாக சர்வதேச அளவில் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நார்வேஜிய ஆய்வு…

உதட்டுச்சாயத்தில் உலோகங்களால் ஆபத்து – ஆய்வு

அமெரிக்காவில் பரவலாக விற்கப்படும் 30க்கும் மேற்பட்ட உதட்டுச்சாயங்களில் விஷத்தன்மை வாய்ந்த உலோகங்கள் இருப்பதைக் காட்டுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கலிபோர்னியா பல்கலைக்கழகதின் பார்க்லி பொதுச்சுகாதாரப் பள்ளியினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்த உதட்டுச்சாயத்தில் காட்மியம், க்ரோமியம் மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்கள் இருப்பதைக் காட்டியது. சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு…

சிங்கப்பூரில் மக்கள் தொகையை உயர்த்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு

சிங்கப்பூரில் மக்கள் தொகையை உயர்த்த அரசு வகுத்துள்ள திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு அசாதாரணமான எதிர்ப்பு போராட்டத்தில் சுமார் 3000 பேர் பங்குபெற்றுள்ளனர். வெளிநாட்டினரைக் கொண்டு சிங்கப்பூரின் மக்கள் தொகையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ஒரு நகரத்தை மட்டுமே நாடாகக் கொண்டுள்ள…

தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

தாய்லாந்தின் தென்பகுதியில் பட்டாணி என்னும் கிராமத்தில் ஒரு ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 3 வயது சிறுவன் ஒருவன் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமக் கடை ஒன்றின் முன்பாக எழுந்தமானமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்த அந்த துப்பாக்கிதாரி, பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பி ஓடியதாக…

வெள்ளை மாளிகை குண்டு வெடிப்பில் ஒபாமா காயம்?

"வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டு வெடிப்புகள்: ஒபாமா காயம்" என்ற செய்தியை டுவிட்டரில் பார்வையிட்ட பலர் நேற்று  அதிர்ந்துதான் போய்விட்டனர். ஆம்,  AP (Associated Press) ஊடக நிறுவனத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கிலிருந்தே இச் செய்தி நேற்று வெளியாகியிருந்தது. இது உலகம் பூராகவும் பெரும் பரபரப்பை இச்செய்தி ஏற்படுத்தியிருந்தது.…

வங்கதேச கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 150ஐ தாண்டியது

வங்கதேசத்தில் புதனன்று கட்டிடம் இடிந்ததில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 150ஐயும் தாண்டி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக மீட்புப் பணியாளர்கள் இரவோடிரவாக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆடைத்தொழிற்சாலையில் சிக்கியுள்ளவர்களுக்கு தண்ணீர் பரிமாறப்பட்டதுடன், வெளிச்ச விளக்குகளும் போடப்பட்டன. இதுவரை இடிபாடுகளில் இருந்து 2000க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டதாக அரசாங்க அமைச்சர் ஒருவர்…

பாஸ்டன் குற்றவாளிக்கு மரண தண்டனை?

பாஸ்டன் மாரத்தான் போட்டியின் போது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய குற்றவாளி, மருத்துவமனையில் நேற்று கைது செய்யப்பட்டான். டிசோஹர் சர்னேவ் என்ற அந்த நபர், பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி பெரிய அளவில் தாக்குதல் நடத்தி பலரையும் கொலை செய்த குற்றத்திற்காக அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளி…

அணு ஆயுதத் தடையை மீறிய வடகொரியா, ஈரான்: ஐ.நா கவலை

ஐ.நா பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பினர்களான P5 நாடுகள், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தின் மறு ஆய்வை 2015ம் ஆண்டில் நடத்துவதற்காக ஜெனீவாவில் இரண்டு நாள் ஆயத்தக் கூட்டம் நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், அணு ஆயுதத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அணுசக்தி மையம்(IAEA)…

நைஜீரியா: மோதல்களில் சிக்கி 185 பேர் பலி

நைஜீரியாவின் வடக்கில் இஸ்லாமியவாத ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நடந்த உக்கிர சண்டையில் குறைந்தபட்சம் 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சாட் நாட்டுடனான எல்லைக்கு அருகில் உள்ள பாகா என்ற ஊரில் ராக்கெட் எறிகுண்டு வீச்சுகள் மற்றும் பெருமளவான துப்பாக்கிச் சூட்டுடன் கடந்த வெள்ளியன்று கடும்…

பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான முஸாரப்புக்கு வீட்டுக்காவல்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான ஜெனரல் முஸாரப் அவர்கள் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் அவரது சொந்தவீட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் 6 வருடங்களுக்கு முன்னதாக நீதிபதிகளை சட்டத்துக்கு விரோதமாக தடுத்து வைத்தது குறித்து நீதிமன்ற வழக்கு ஒன்றில் அவர் முன்னதாக ஆஜராகியிருந்தார். அப்போது அந்த நீதிபதிகள் மீது…

“பீரின் சுவையே ஒருவரை குடிகாரராக்கும்”

ஒருவருக்கு பிடித்தமான பீரின் சுவை கூட அவரது மூளையை தூண்டி, மேலும் அவரை குடிக்கத்தூண்டுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பீரின் சுவையே அதை குடிப்பவரின் மூளையிலிருந்து டோபோமைன் என்கிற வேதிநொதிமத்தை உருவாக்கி அவர்கள் மேலும் அதிகமாக குடிக்கவேண்டும் என்கிற உணர்வை உருவாக்குவதாக இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதாவது பீரில்…

இரானில் கடும் நிலநடுக்கம்- 40 பேர் பலி?, டில்லியில் கட்டிடங்கள்…

இரானின் தென்கிழக்குப் பகுதியில் பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே 7.8 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. இலகுவில் செல்ல முடியாத, சனநெருக்கடி மிக்க சிஸ்டான் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பலியாகியிருப்போரின் எண்ணிக்கை குறித்து குழப்பம் காணப்படுகிறது. எவரும் இதில் உயிரிழக்கவில்லை என்று மாகாண…

அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு : 3 பேர் பலி:141 காயம்

பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்தது.போட்டி முடியும் நேரத்தில் ‌வெடிகுண்டு வெடித்தது.இந்நிலையில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையடுத்து சிதறி ஒடினர். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்‌ந்தது. தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்ததாக பாஸ்டன் போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. இச்சம்பவத்தில்…

ரஷிய அதிபர் புதினை பிளாக்லிஸ்ட்டில் போட்ட பின்லாந்து

மாஸ்கோ: ரஷியாவின் அதிபர் விளாடிமீர் புதினை கிரிமினல் நடவடிக்கைகளில் தொடர்புடையவராக குறிப்பிட்டி பிளாக்லிஸ்ட்டில் பட்டியலிட்டதற்காக பின்லாந்து மன்னிப்பு கோரியுள்ளது. பின்லாந்து நாட்டுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருக்கும் பிளாக்லிஸ்ட்டில் ரஷிய அதிபர் புதினின் பெயர்ம் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் உருவானது. இதைத் தவிர்க்கும்…

நண்பர்கள் கற்பழித்து, இணையதளத்தில் படம் வெளியிட்டதால் சிறுமி தற்கொலை

அமெரிக்காவில் விடுமுறை நாள் விருந்தில் நண்பர்கள் கற்பழித்து, இணையதளத்தில் படம் வெளியிட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம், ஓடும் பஸ்சில் ஒரே பெண்ணை 6 காமுகர்கள் கற்பழித்து சிதைத்து, அந்த பெண் உயிரிழந்த சம்பவத்தின் வடு இன்னும் நம்…

சிலி நாட்டில் இலவசக் கல்வி கோரி போராட்டம்

இலவசக் கல்வி கோரி சிலி நாட்டின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் முக்கிய நகரங்களில் தெருக்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலையை மூடி வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரமடக்கும் பொலிஸாருடன் மோதி, வீதிப்போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை அடித்து நொருக்கியதால், தலைநகர் சந்தியாகோவில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரத்தில்…

பாதுகாப்பு உஷார் நிலையை தென்கொரியா அதிகரித்தது

வடகொரியா நடுத்தர தூர எவுகணை ஒன்றை சோதனை செய்வதற்கான சமிஞ்ஞைகளுக்கு மத்தியில், தென்கொரியா தனது பாதுகாப்பு உஷார் நிலையின் அளவை அதிகரித்துள்ளது. 3000 கிலோ மீட்டர் தூரம் வரை போகக்கூடிய, முன்னெப்போதும் சோதனை செய்திராத, ஒரு வகை ஏவுகணைக்கு எரிபொருள் நிரப்பி வடகொரியா தயார் நிலையில் வைத்திருப்பதாக அமெரிக்க,…

தெற்கு சூடானில் தாக்குதல்: இந்திய வீரர்கள் ஐவர் பலி

தெற்கு சூடான் நாட்டில் அமைதி பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய ராணுவ வீரர்கள், ஐந்து பேர், அந்நாட்டு பிரிவினைவாதிகள் தாக்கியதில் பலியாயினர். ஆப்ரிக்க நாடான சூடான் நாட்டில் நீண்ட காலமாக உள்நாட்டு சண்டையை அடுத்து, 2011ல் தெற்கு சூடான் தனியாக பிரிந்தது. எனினும், கும்ருக் பகுதியில் அதிக வன்முறை காணப்பட்டதால்,…

ஈரான் அணு ஆலைக்கு அருகில் பூகம்பம் : 30 பேர்…

ஈரானின் ஒரேயொரு அணு ஆலை அமைந்துள்ள புஷேர் நகருக்கு அருகே ஏற்பட்ட ஒரு பூகம்பத்தில், குறைந்தபட்சம் 30 பேராவது இறந்துபோனதுடன், 800 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அந்த பூகம்பத்தின் மையம் நகருக்கு தென்கிழக்கே 100 மைல் தூரத்தில் நிலைகொண்டிருந்தது என்றும், அதன் வீரியம் 6.3 என்றும் அமெரிக்க நிலவியல் ஆய்வு…