சீனா சுரங்க விபத்தில் சிக்கி 9 பேர் பலி!

சீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஜிலின் மாகாணத்தில் ஜிலின் லாங்ஜியாபோ சுரங்கம் உள்ளது. இங்கு உள்ளூர் நேரப்படி நேற்று இரவு சுமார் 8 மணியளவில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில், தொழிலாளர்கள் சிலர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் விரைந்து…

அனல் காற்று அடிக்கும் ஆபத்து: “பெண்களின் கருவுறும் திறன் பாதிக்கப்படலாம்”…

வெயில் காலம் சிலருக்கு மிக மோசமானதாக இருக்கிறது. மத்திய மற்றும் தென் இந்தியா, அண்டை நாடான பாகிஸ்தான் ஆகிய இடங்களில் வெப்பநிலை 45 டிகிரியை தாண்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு என்ற நகரத்தில் வெயில், 50.8 டிகிரி செல்சியஸை தொட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…

டுரியான் பழம் RM2 லட்சத்திற்கு விற்பனையான பாங்காக் ஏலம்

முன்னெப்போதும் இல்லாத வகையில், தாய்லாந்தில் நடைபெற்ற ஏலத்தில், பழங்களின் அரசன் என்றழைக்கப்படும் துரியன் பழம் இந்திய மதிப்பில் சுமார் 33 லட்சம் ரூபாய்க்கு விலைபோயுள்ளது. ஒரு சிலருக்கு பழங்களின் அரசனாக இருக்கும் துரியன் பழங்கள், பிறருக்கு நினைத்து பார்க்கமுடியாத அளவுக்கு அதிக துர்நாற்றத்தை வெளிப்படுத்தும் பழமாக இருக்கிறது. உலகின்…

சிரியாவில் கடும் மோதல் – 21 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்‌ஷாம் பயங்கரவாதிகள் அரசு படைகளுக்கு சவாலாக உள்ளனர். இத்லிப் மாகாணத்தில் கடும் ஆதிக்கம் செலுத்தி வரும் அவர்கள், அதன் அண்டை மாகாணங்களிலும் கால் பதிக்க முயற்சித்து வருகின்றனர். ர‌ஷியா மற்றும் ஈரான் படைகளின் உதவியோடு…

ர‌ஷியாவில் 75 அடி நீள ரெயில்வே பாலம் திருட்டு?

ர‌ஷியாவில் 56 டன் எடை கொண்ட 75 அடி நீளம் உள்ள ரெயில்வே பாலம் காணாமல் போயிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ர‌ஷியாவில் 56 டன் எடை கொண்ட 75 அடி நீளம் உள்ள ரெயில்வே பாலம் காணாமல் போயிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அந்நாட்டின் முர்மன்ஸ்க் பகுதியில்…

ஹாங்காங்: “இது வாழ்வா, சாவா போராட்டம்” – சீனாவுக்கு எதிராக…

அரசியல் எதிர் கருத்து உடையவர்களுக்கு எதிரானது என கருதப்படும் சீனாவின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் ஹாங்காங்கில் பேரணி சென்றனர். இந்த சட்டத்திருத்தமானது ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை சீனாவிடம் ஒப்படைக்க அனுமதிக்கிறது. ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி 2014ம் ஆண்டு நடந்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பின்…

தென் ஆப்பிரிக்காவில் மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள்…

தென் ஆப்பிரிக்காவில் மிருக காட்சி சாலையில் இருந்து 14 சிங்கங்கள் தப்பி ஓட்டிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் வடக்கு லிம்போயோ மாகாணத்தில் குருகர் என்ற இடத்தில் தேசிய பூங்கா உள்ளது. இங்குள்ள மிருக காட்சி சாலையில் ஏராளமான சிங்கங்கள் உள்ளன. அவற்றில் 14…

ரஷ்யத் தொழில்நுட்பமா? அமெரிக்க போர் விமானமா? துருக்கிக்கு அமெரிக்கா கெடு

அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்புமுறை இந்த இரண்டில் எது வேண்டும் என்று அடுத்த மாதம் ஜூலைக்குள் முடிவெடுக்கும்படி துருக்கிக்கு அமெரிக்கா காலக்கெடு விதித்துள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் பொறுப்பு வகிக்கும் பேட்ரிக் ஷனஹன் ஒரு கடிதம் மூலம் இந்த காலக்கெடுவை துருக்கி…

பாகிஸ்தான் வாஜிரிஸ்தான் மலையின் வெளிவராத மனித உரிமை மீறல்கள்: 8,000…

2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் பயங்கரவாதிகளால் தாக்கி தரைமட்டமாக்கப்பட்டன. இதையடுத்து, ``பயங்கரவாதத்துக்கு எதிரான போர்'' என்ற நடவடிக்கையைத் தொடங்கியது அமெரிக்கா. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற நீண்ட போராட்டத்தின்போது பல லட்சம்…

பாம்புக்கடியால் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு: விஷமுறிவு மருந்துகளின்…

உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாம்பு கடிக்கு பலியாகும் நிலையில், பாம்பு கடிக்கு குறைந்த செலவில் தரமான விஷமுறிவு மருந்துகளை தயார் செய்யும் ஆய்வில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் பங்குகொள்வது தெரியவந்துள்ளது. உலக நாடுகளில் ஓராண்டில் பாம்பு கடிக்கு பலியாகுவோரின் எண்ணிக்கை 81,000 முதல் 1,38,000…

ஓரின சேர்க்கையாளராக இருந்து குணமடைந்தேன் – பிலிப்பைன்ஸ் அதிபர் சர்ச்சை…

ஓரின சேர்க்கையாளராக இருந்து குணமடைந்தேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் பொது நிகழ்ச்சிகளில் பேசுகிறபோது சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவதும், இதனால் பல தரப்பினரின் கண்டனங்களுக்கு உள்ளாவதும் வாடிக்கையாகி…

கிழக்கு சீனக் கடலில் கிட்டத்தட்ட மோதவந்த ரஷ்ய, அமெரிக்க போர்க்…

ரஷ்ய போர்க்கப்பல் ஒன்றும், அமெரிக்க போர்க்கப்பல் ஒன்றும் மேற்கு பசிபிக் பெருங்கடலில் ஏறக்குறைய மோதுகின்ற அளவுக்கு நெருங்கி வந்தன. இந்த சம்பவத்திற்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒன்றையொன்று மாறிமாறி குற்றஞ்சாட்டியுள்ளன. மாஸ்கோ நேரப்படி காலை 6.35 மணிக்கு, யுஎஸ்எஸ் சான்சிலர்வில்லி போர்க்கப்பல், அட்மிரல் வினோகிராதோஃப் போர்க்கப்பலுக்கு முன்னால் 50 மீட்டர்…

85 நோயாளிகளை கொலை செய்த ஆண் செவிலியர்

வடக்கு ஜெர்மனியில் இரு வேறு மருத்துவமனைகளில் 85 நோயாளிகளை கொலை செய்த ஆண் செவிலியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நீல்ஸ் ஹோகெலின் இந்த கொலைகள் ஒரு புரியாத புதிராக இருப்பதாக நீதிபதி செபாஸ்டியன் புர்மன் விவரித்துள்ளார். ஹோகெல் ஏற்கனவே தாம் செய்த இரண்டு கொலைகளுக்காக ஆயுள் தண்டனை…

‘சினாயில் பாதுகாப்புப் படையினர் எண்மர் கொல்லப்பட்டனர்’

இஸ்லாமிய ஆயுததாரிகளுடன் நீண்ட காலமாக எகிப்தியப் படைகள் மோதலில் ஈடுபடுகின்ற வட சினாயில், சோதனைச் சாவடியொன்றைத் தாக்கிய ஆயுததாரிகள், பாதுகாப்புப் படையினர் எண்மரை நேற்று (05) கொன்றதாக எகிப்திய அரச செய்தி முகவரகமான மெனா தெரிவித்துள்ளது. இதேவேளை, ஐந்து ஆயுததாரிகளும் இறந்ததாகவும், சிலர் தப்பித்துள்ளதாகவும் எகிப்திய அரச தொலைக்காட்சியும்,…

பால்வினை நோய்த் தொற்று: 10 லட்சம் பேர் பாதிப்பு –…

உலகில் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்கு புதிதாக பால்வினை நோய்த் தொற்று ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கோனோரியா, சிபிலிஸ், ச்லாமைதியா, ட்ரைகோமோனியாசிஸ் போன்ற பாலுறவு மூலம் பரவும் நோய்த் தொற்றுகளுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் 2012 முதல் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என்று…

புதின் – ஷி ஜின் பிங் சந்திப்பு: சீனா –…

வணிக உறவுகள் தொடர்பாக விவாதிக்க மூன்று நாள் சுற்றுப் பயணமாக ரஷ்யா சென்றுள்ள சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை தன் நெருங்கிய நண்பர் என்று விவரித்தார். சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வணிகப் போர் நடக்கும் சூழலில் ஷி ஜின்பிங் இந்த சுற்றுப் பயணத்தை…

இந்திய, சீன மக்கள்தொகை அதிகரிப்பை சூழல் மாசுக்கு காரணமாக்கும் டிரம்ப்

தனது பிரிட்டன் பயணத்தின்போது இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் உடன் சுற்றுச்சூழல் குறித்து நடத்திய பேச்சுவார்தைக்குப் பிறகு அளித்த பேட்டியில் சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளில் அதிகரிக்கும் மக்கள்தொகையே உலகின் நீர் மற்றும் காற்றின் தரம் குறையக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். பருவநிலை…

அரசுக்கு எதிரான போராட்டம்; 46 பேர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொள்ளும் சூடான்…

சூடானில் மக்களின் போராட்டங்களின்போது சூடான் ராணுவம் குறைந்தது நூறு பேரை கொன்றுவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை தவறானது என மறுத்த ஒரு சூடான் அதிகாரி, அதிகபட்சம் 46 பேர் போராட்டங்களின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளனர் என ஒப்புக்கொண்டார். புதன்கிழமையன்று ராணுவத்துக்கு எதிராக போராடியவர்களுடன் தொடர்புடைய மருத்துவர்கள்…

எகிப்தில் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: 10 போலீசார் பலி!

எகிப்தில் போலீஸ் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 காவல்துறை அதிகாரிகள் பலியாகியுள்ளனர். எகிப்தின் மேற்கில் அமைந்துள்ளது சினாய் தீபகற்பம், மிகவும் பதற்றமான பகுதியாக இது கருதப்படுகிறது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு அப்பகுதியில் இன்று காலை இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த போலீஸ் சோதனைச்சாவடி…

நேட்டோ- ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணையும்: அதிபர் விளாமிடிர் செலன்ஸ்கி…

நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக உக்ரைன் இணையும் என புதிய அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்தார். உக்ரைனின் அதிபராக பதவியேற்ற விளாமிடிர் செலன்ஸ்கி, தனது முதல் வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக பெல்ஜியம் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பிரசல்ஸ் நகரில் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய…

சுவிட்சர்லாந்தில் சம ஊதியம் கேட்டு 30 ஆண்டுகள் கழித்து மீண்டும்…

சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டி 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெண்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கையில் எடுக்க உள்ளனர். சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டி 1991 ஜூன் 14 ம் நாள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அலுவலகத்திலிருந்தும், வீட்டிலிருந்து…

”எனக்கு எதிரான போராட்டம் எல்லாம் போலிச் செய்திகள்” – டொனால்டு…

அமெரிக்கா - பிரிட்டன் கூட்டணி தான் உலகத்தில் எப்போதும் அறியப்பட்ட ஒரு மிகச்சிறந்த கூட்டணி என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரிட்டனுக்கு மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக சென்றுள்ளார். பிரிட்டன் பிரதமர் தெரீசா மே உடன் செய்தியாளர் சந்திப்பில்…

ஹூவாவே விவகாரம்: டொனால்ட் டிரம்புடன் தெரீசா மே ஆலோசனை

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின் அமெரிக்காவுடன் ஒரு நீடித்த வணிக ஒப்பந்தத்தை பிரிட்டன் பெறும் என தாம் நம்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் மூன்று நாட்கள் அரச பயணமாக பிரிட்டன் சென்றுள்ளனர். பிரிட்டன் அரசி எலிசபெத்தை…