சுதந்திர தாகம் தணியவில்லை என்பதன் வெளிப்பாடே தேர்தல் வெற்றி!- வி. உருத்ரகுமாரன்

pm_rutthiraஇனப்படுகொலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைக்குள்ளும், தங்களுடைய சுதந்திர தாகம் தணியவில்லை என்பதனை தாயக மக்கள் உலகிற்கு தெட்டத் தெளிவாக கூறியிருக்கின்றார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்ரகுமாரன் அவர்கள் பொங்குதமிழ் எழுச்சி முழக்கமிட்டுள்ளார்.

தொடங்கியுள்ள ஐ.நாவின் வருடாந்த கூட்டத் தொடரில் பங்கெடுப்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள  இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின்  வருகையினை மையப்படுத்தி, ஐ.நா முன்றலில் பொங்கு தமிழெனச் சங்கே முழங்கு என்ற முழக்கத்துடன் இடம்பெற்றிருந்த பொங்குதமிழ் எழுச்சி ஒன்றுகூடலில் பிரதமர் வி. ருத்ரகுமாரன் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபைத் தேர்தலில் தாயக மக்கள் வெளிப்படுத்திய விடுதலை வேட்கையின் தன்னெழுச்சி தந்த மனவெழுச்சியின் தொடர்சியாக, ஐ.நா முன்றலில் சுதந்திர தமிழீழத்துக்கான இந்த வட அமெரிக்கத் தமிழர்களால் முழங்கப்பட்டது.

மேலும் பிரதமர் வி. உருத்ரகுமாரன் தனதுரையில்,

தாயக மக்கள் நாங்கள் தனித்துவமான இனம், எங்களுக்கென்று பாராம்பரிய தாயகம் உண்டு, எங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டென்பதனை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தமிழர்களுக்கான அரசியல்வெளி முழுமையாக அங்கு இல்லாத காரணத்தினாலும், சிறிலங்காவின் 6வது அரசியல் அமைப்புச் சட்த்திருந்தம் சுதந்திர தமிழீழ கோரிக்கையினை தடை செய்கின்ற காரணத்தினாலும், தமிழ்மக்கள் தங்களுடைய அரசியல் அபிலாசையினை முழுமையாக வெளிப்படுத்தவதற்கான சந்தர்பம் இல்லை.

இந்நிலையில் தமிழ் தேசத்தின் அரசியல் அபிலாசைகளை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய பாரிய தார்மீக கடமைப்பாடு, புலம்பெயர் வாழ் தமிழ்மக்களின் தோள்களின் மீதுதான் வரலாறு சுமத்தியுள்ளது. “அதனை செவ்வனே செய்வதற்கு நாம் என்றுமே தயாராக இருக்க வேண்டும். எங்கள் சரித்திரம் எங்கள் மேல் இட்டுள்ள கடமைப்பாட்டடை செய்ய வேண்டிய கடப்பாட்டுக்கு உரியவர்கள்.

இன்றைய நிலைப்பாடுகள் எங்களுடைய விடுதலைக்கு சாதகமாக வருகின்றது. உலகமயமாதலும் தொழில்நுட்பட முன்னேற்றங்களும் இதற்கு வழிகோலுகின்றன.

தாயகத் தமிழ் மக்கள், புலத்தில் வாழ்கின்ற தமிழ்மக்கள், உலகத் தமிழ்மக்கள் ,தமிழக தமிழ்மக்கள் அனைவரும் ஈழத்தின் சுயநிர்ணய உரிமையினை பரிகார சுயநிர்ணய உரிமையாக சுதந்திர தமிழீழம் அமைப்பதற்கு நாம் ஒன்றுபட்டு உழைப்போம்.

சுதந்திர தமிழீழம் கிடைக்குமா இல்லையா என்பதல்ல கேள்வி! சுதந்திர தமிழீழம் எப்போ கிடைக்கும் என்பதுதான் தற்போதுள்ள கேள்வி.

எங்களுடைய கடின உழைப்பாலும், செயற்பாட்டாலும் சுதந்திர தமிழீழம் அமைப்போம் என ஐ.நா முன்றலில் பொங்குதமிழ் எழுச்சி முழக்கத்தினை பிரதமர் வி.உருத்ரகுமாரன் அவர்கள் வெளிப்படுத்தினார்.

வட அமெரிக்கத் தமிழ் மக்களின் உணர்வெழுச்சி நிகழ்வாக அமைந்த இந்த நிகழ்வில், சிங்களத்தின் தமிழிழன அழிப்பினை அம்பலப்படுத்தி நின்றதோடு தமிழர்களுக்கான நீதியினை உலகதத்தின் வாயிலான ஐ.நாவிடம் கோரி நின்றது.

TAGS: