அரசியல் பிரச்சினை தொடர்பான விடயங்களை ஆராய புதுடில்லி வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இந்தியா அழைத்துள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை கூறியது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் புதிய முதலமைச்சருக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.
வடக்குக்கு விஜயம் செய்த குர்ஷித்துடன் மீனவர் பிரச்சினை பற்றி வடமாகாண முதலமைச்சர் பிரஸ்தாபித்ததாக சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
முதலமைச்சரும் இந்த பிரச்சினையை குர்ஷித்திடம் பேசியுள்ளார். ஏதோ ஒன்று நடைபெறுமென நான் நினைக்கின்றேன் என சம்பந்தன் கூறினார்.
இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் இந்தியாவுக்கு எப்போது செல்வாரென தெரிவிக்கப்படவில்லை.
வடமாகாணத் தமிழர்களுக்கு நல்லது நடக்க வேண்டும். அதுவே நமது ஆசை.
மகிந்தா கையில் பதவி பிரமாணம் எடுத்த இவனுக்கு என்ன மரியாதை வேண்டி கிடக்கு ? டில்லிக்கு போய் மீதம் இருக்கும் இலங்கை தமிழனை விற்று விடுவான் !
சர்வதேச சமூதாயம் என்று ஒன்று இருக்கின்றது ..இவர்கள் எதோ ஜனநாயகம் என்று உளறுவார்கள் ..ஆக தாங்கள் அரசியலமைப்பின் படி பிரமாணம் எடுத்தோம் என்று காட்டவே இந்த பிரமாணம் …தனிச்சையாக செய்து இருந்தால் இந்த உலக ஜனநாயக தேவதைகள் பிழை பிடித்து இருக்கும் ….இப்பொது முடியாது