புலி அர­சி­யலின் நீட்­சியும் உணர்­வு­பூர்­வ­மான அர­சி­யலும்!

jeyawardana_rajjevghandhi‘புலிகள் அர­சி­யலின் தொடர்ச்சி’, ‘உணர்ச்சி வசப்­பட்ட அர­சியல்’ என்­கிற சொல்­லா­டல்கள், எதற்­காக இப்­போது அதி­க­மாகப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது?. அது மட்­டு­மல்­லாது ‘பூகோள அர­சியல்’, ‘பிராந்­திய அர­சி­யலில் சீனாவின் ஆதிக்கம்’ போன்ற பெரிய விட­யங்­களும் இத­னோடு இணைத்தே பேசப்­ப­டு­கி­றது.

இந்த இரண்டு உள், வெளி அர­சி­ய­லுக்­கி­டையே, பொருத்­தப்­பா­டான நுண்­ண­ர­சியல் அநே­க­மாகக் காணப்­ப­டு­வ­தில்லை. இழுத்து வந்து உட்­கார வைத்த ‘செருகல்’ போன்றே காட்­சி­ய­ளிக்­கின்­றது.

பொது­வாக, விடு­த­லைப்­பு­லி­களின் அர­ சி­யல் ­மீ­தான மேம்­போக்­கான விமர்­ச­னங்கள் இறு­திப்­ ப­கு­தி­ வரை ஆக்­கி­ர­மித்து, பூகோள அர­சி­ய­லோடு அது முற்­றுப் ­பெறும். புவிசார் அர­சியல் பார்வை குறித்த சிந்தனைகள் முழுக்­கட்­டு­ரைக்­கு­மான கன­தி­யைக் ­கொ­டுத்­து­த­வு­மென கற்­பிதம் கொள்­வது தவ­றா­னது.

முதலில் இவர்கள், ‘புலி அர­சியல், அதன் தொடர்ச்சி’ என்று எத­னைக்­கு­றிப்­பிட முற்­ப­டு­கி­றார்கள் என்­பதைப் பார்க்க வேண்டும். இங்கு தர்க்க ரீதி­யான அள­வு­கோல்கள் எது­வுமே இல்லை. அரை­வாசி மூடப்­பட்ட கத­வினை, அரை­வாசி திறந்­துள்­ளது என்றும் தர்க்கம் செய்­யலாம். உள்­ளி­ருந்தும், வெளி­யி­லி­ருந்தும் பார்க்கும் பார்­வை­யா­ள­ருக்கு அது மூடியும் திறந்தும் இருக்கும்.

இதில் ‘இரண்­டுமே சரி’ என்­கிற பார்­வைக்­கான தளம் எங்கே நிலைத்­தி­ருக்­கின்­றது?. ஒரு வகையில் இரண்டும் சரிதான். ஆனால் புலி­களின் அர­சியல் எது­வாக இருந்­தது? என்­ப­தனை சரி­யாக மதிப்­பீடு செய்தால், இரண்டும் சரி­யா­னது என்­கிற முடி­விற்கு வரலாம்.

விடு­த­லைப்­பு­லிகள் பயங்­க­ர­வா­திகள், உலகின் மிகச் சிறந்த கெரில்லா இயக்கம் என்­ கிற பொது­வான பார்­வை­ க­ளுக்கு அப்பால், அவர்­கள் ­முன்­னி­றுத்­திய அர­சியல் கோட்­பாடு என்ன என்­ப­தனைக் கூறாமல், ‘உணர்ச்­சி­கர அர­சியல்’ என்­கிற குறு­கிய சந்­துக் குள் 35 ஆண்­டு­காலப் போராட்­டத்தை முடக்­கி­விட முடி­யாது.

ஓர் இனத்தின் மீதான கட்­ட­மைக்­கப்­பட்ட ஒடுக்­கு­மு­றை­யா­னது, ஒட்­டு­மொத்த இனத்தின் கூட்டு உள­வி­யலை மோச­மாகப் பாதிக்கும் என்­பது, உணர்­வு­பூர்­வ­மான உண்மை. அந்த வலி தரும் உணர்ச்­சியை கொச்­சைப்­ப­டுத்த முடி­யாது. யாரும் அவர்­க­ளு­டைய உணர்ச்­சியைத் தூண்ட வேண்­டிய அவ­சி­யமு­மில்லை. ஒடுக்­கு­ப­வனே அந்த காரி­யத்தைச் செய்து விடுவான்.

ஆனால் ஒடுக்­கப்­படும் மக்கள் மத்­தி­யி­லி­ருந்­து ­வெ­ளிப்­ப­டுத்­தப்­படும் இவ்­வா­றான விமர்­ச­னங்கள், அறி­வு­பூர்­வ­மான அர­சி­யலில் இருந்து வரு­வது போலா­ன­தொரு தோற்­றப்­பாட்­டினைக் காட்­டிக்­கொள்ள முயற்சிக்­கி­றதா?. இதுவே கவ­னிக்­கப்­பட வேண்­டிய விவ­கா­ர­மாகும்.

மக்­களின் அந்த உணர்ச்சி, ஒரு கனவு நிலை­யல்ல. விரும்பி ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­ய­மு­மல்ல.

மனி­தர்­களின் உணர்ச்­சி­களை நிரா­க­ரித்து, இயந்­தி­ரத்­த­ன­மான தத்­து­வங்­களை மட்­டுமே உரு­வாக்க முடியும். உணர்­வு­க­ளற்ற அல்­லது ஒன்று குவிக்­கப்­பட்ட ஏகத்­துவ நிலையை எழுத்­தில்­கூட வடிக்க முடி­யாது. ‘கண்­டவர் விண்­டிலர்’ என்­கிற வெளி­யற்ற கருத்­து­நிலை, மானு­டத்தின் அர­சியல்- பொரு­ளா­தார அசை­வி­யக்கத் தத்­து­வத்­திற்குப் பொருந்­தாது.

தாம் அழிக்­கப்­பட்டு விடு­வோமோ என்­கிற ஜாக்­கி­ரதை உணர்வு உயிர்ப்­புடன் உள்­ள­வரை, போராட்­டங்கள் எல்லா வடி­வங்­க­ளிலும் தொடரும். சாக­டிக்­கப்­பட்ட உணர்ச்­சி­யி­லி­ருந்து இது உரு­வா­காது. இதனை உணர்ச்­சி­வ­சப்­பட்ட அர­சியல் என்று சிறு­மைப்­ப­டுத்த முடி­யாது. அதி­கா­ரத்­தையும் அர­சி­ய­லையும் எவ்­வாறு பிரித்­துப்­பார்க்க முடி­யாதோ, அது­போல மக்­களின் கூட்­டு­மன உணர்­ச்சி­க­ளையும், அது வெளிப்­ப­டுத்தும் அர­சி­ய­லையும் வேறு­ப­டுத்­திப் ­பார்க்க முடி­யாது.

அதனை எவ்­வாறு ஒருங்­கி­ணைத்து ஒரு போராட்ட வடி­வ­மாக மாற்­று­வது என்­பது குறித்தே, பல பாதை­களும் செயற்­பாட்டு முறை­மை­களும் முன்­வைக்­கப்­ப­டுகின்­றன.

இங்­குதான், புலி அர­சி­யலின் தொடர்ச்சி என்று சுட்­டிக்­காட்­டப்­படும் கருத்­து­நிலை, மாகாண சபைப் பாதையில் இட­றுப்­ப­டு­கி­றது. அது எது­வாக இருக்கும் என்று சொல்­லா­ம­லேயே, தடைகள் போல் சித்திரிக்கப்ப­டு­கி­றது.

ஒரு தரப்­பினர், 13வது திருத்தச் சட்­ட­மூலம் தீர்­விற்­கான முதற்­புள்­ளி­யல்ல என்­கிற விவா­தத்­தினை அழுத்­த­மாக முன்­வைக்­கையில், அவ்­வி­வா­தத்­தி­னை ­புலி அர­சி­யலின் நீட்­சி­யாகத் தொழிற்­பட முனைவோரின் வாத­மாக மாற்ற அல்­லது வலு­வி­ழக்கச் செய்ய இன்­னொரு தரப்பு முயற்­சிக்­கி­றது.

சரி. இந்தப் புலி அர­சியல் என்றால் என்ன என்று பார்த்­து­ வி­டுவோம்.

பூரண சுய­நிர்­ணய உரி­மை­யோடு கூடிய தாயகம், தேசியம், தன்­னாட்சி என்­பதன் அடிப்­ப­டையில் அமைந்த தீர்­வி­னையே தமி­ழீழ விடு­த­லைப் ­பு­லிகள் முன்­வைத்துப் போரா­டி­னார்கள். இதனை ஏற்­றுக்­கொள்­ளாத தரப்­புக்­க­ளோடு ஒரே மேசையில் அமர்ந்­தி­ருந்து பேசி­னார்கள். ஒஸ்­லோவில் எட்­டப்­பட்ட இணக்­கத்தை வைத்து, பிரிந்து செல்லும் பகு­தியை சுய­நிர்­ணய உரிமைக் கோட்­பாட்­டி­லி­ருந்து புலிகள் அகற்றி விட்­டார்கள் என்­கிற வியாக்­கி­யா­னமும் செரு­கப்­பட்­டது.

ஆனால் தனித்­து­வ­மான பூர்­வீக தேசிய இனம், இறைமை கொண்ட தேசம் என்­கிற அடிப்­ப­டை­யான பிறப்­பு­ரி­மையை விட்­டுக்­கொ­டுத்து, சம­ரசப் பேச்­சு­வார்த்­தைகளில் அவர்கள் ஈடு­பட்­ட­தில்லை. இடைக்­காலத் தன்­னாட்சி அதி­கார சபை என்­ப­து­கூட, அடிப்­ப­டையில் தமிழர் இறை­மையை ஏற்­றுக்­கொள்ளும் விப­ரீ­தத்­ திற்கு வித்­திட்­டு­விடும் என்­ப­தா­லேயே அரசு அன்று அதனை தவிர்த்­தது.

ஆகவே மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட புலி­களின் அர­சியல் அடிப்­ப­டைக்­கோட்­பா­டு­க­ளுக்கும், 13ஆவது திருத்தச் சட்­டத்தில் தொங்கிக் கொண்­டி­ருக்கும் மாகாண சபை அர­சி­ய­லிற்கும் சம்­பந்­த­மே­யில்லை என்­பதைப் புரிந்து கொள்­வது சுலபம். தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் ஆங்­காங்கே இச்­சொற் கள் உணர்ச்­சி­ம­ய­மாக ஜொலித்துக் கொண்­டி­ருக்கும். அவ்­வ­ள­வுதான்.

இந்­தி­யா­விற்குப் பிடித்த மாகாண சபை முறை­மையை சரி­யென்று ஏற்­றுக்­கொள்­ப­வர்­க­ளுக்கு, புலி­களின் அர­சியல், உடன்­பா­டற்றே காணப்­படும். இதனை நிரா­க­ரிக்­காமல், தாங்கள் சொல்­வதை மக்கள் ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்கள் என்­கிற சிக்­கலில் அகப்­பட்­ட­வர்கள், பிரி­வி­னைதான் புலி அர­சியல் என்று கூறித் தப்­பித்து விடு­வார்கள்.

1983 இல் வந்த 6 ஆவது திருத்தச் சட் டம் பிரிவினையை மறுப்பதால், தாய கம், தேசியம், இறைமை, சுயநிர்ணயம் என்பவற்றையும் எமது அரசியல் போரா ட்ட வாழ்வுச் சூழலில் இருந்து அகற்றி விடவேண்டும் என்கிற அவசியமில்லை.

இரண்டையும் போட்டுக் குழப்பியவாறு, புலி அரசியலின் நீட்சி பற்றிப் பேசி, மக் களை மயக்க நிலைக்குள் தள்ள வேண்டிய தேவையுமில்லை.

ஆனால், பலமான சில வெளிச் சக்திக ளுக்கு, இந்த சுயநிர்ணயம், இறைமை போன்ற கோரிக்கைகள் தமிழ்த் தேசிய அரசியலில் இருப்பது பிடிக்கவில்லை.

அரசுடனான தமது இணக்கப் பாட்டு அரசியல் நகர்வுகளுக்கு இவை பங்கம் விளைவிக்குமென எண்ணுகின்றன. அத னால்தான் சிலர், புலிகளின் அரசியல் நீட்சி தவிர்க்கப்பட வேண்டு மெனச் சொல்கிறார்களோ… புரியவில்லை.

– இதயச்சந்திரன்

TAGS: