நைஜீரியாவில் ராணுவம் நடவடிக்கை: 95 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை- முகாம்களும் அழிப்பு

nigeriaமைதுகுரி, அக்.27– நைஜீரியாவில் ‘போஹோ ஹரம்’ என்ற தீவிரவாத அமைப்பினர் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். இவர்கள் நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் பெருமளவில் உள்ளனர்.

அங்கு முகாம்களை அமைத்து பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் போர்னோ மாகாணத்தில் முகாமிட்டுள்ள ‘போஹோ ஹரம்’ தீவிரவாதிகளின் முகாம்கள் மீது ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.

அப்போது ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது 95 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன. வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.