இலங்கையிலுள்ள தமிழ் சிறுபான்மை மக்களின் சுய மரியாதையை இந்தியா உறுதி செய்ய வேண்டும் எனவும் அது அரிப்புண்டு போய்விடக் கூடாது எனவும் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற சொற்பொழிவொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இலங்கைக்கான இந்திய முன்னாள் உயர்ஸ்தானிகருமான அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா ஒரு வலுவான அயல் நாடு. இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்துள்ள நிலையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்த வரலாற்று ரீதியான ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அண்டைய நாடுகளில் இருந்து எழும் சவால்களுக்கு இந்தியா தந்திரமான மற்றும் மூலோபாயமான மறுமொழிகளை வழங்க வேண்டும்.
தெற்காசியாவில் இந்தியா, மத்திய நிலையில் உள்ளது. தீவிரவாதம் மற்றும் ஆயுத பரவல் காரணமாக சூழவுள்ள பிராந்தியங்கள் கடுமையானதாக மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் சரியான கட்டுப்பாட்டுடன் கூடிய கலவையான வலிமை மற்றும் மூலோபாயம் தேவைப்படுகிறது.
அயல் நாடுகளுடன் ஒரு கொள்கையை பின்பற்றி தொடர்புகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
சீனாவுடான விடயங்களை கையாள்வதில் உள்ளார்ந்த சிக்கல்கள் இருந்தாலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு மேலாண்மையான நிலைமை காணப்படுகிறது. சீனாவுடன் எல்லை தொடர்பான புதிய பிரச்சினைகள் எதுவுமில்லை என்றார்.
ஈழ தமிழனுக்கு செய்த துரோகத்தை எப்படி திசை திருப்புவதேன்று கடுமையாக சிந்திக்கிறது இந்திய.
என்னமா செய்கிற துரோகம் எல்லாம் செய்துவிட்டு அறிக்கை விடுகிறாயா ,பச்சை துரோகி.ஈழ மக்கள் ஆத்மா உன்னை விடாது.