இலங்கை தமிழர்களை சிறுபாண்மை இனத்தவர்கள் என்கிறார் செல்வி ஜெயலலிதா !

jayalalitha2இலங்கையுடன் இந்திய கடற்படையினர் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடக்கூடாது, இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கிவருகிறது, மற்றும் ஈழத்தில் தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள் என்பது போன்ற விடையங்களுக்காக குரல்கொடுத்துவரும் செல்வி ஜெயலலிதா அவர்கள், ஈழத்தில் உள்ள தமிழர்களை “சிறுபாண்மை இனத்தவர்கள்” என்று கூறியுள்ளார்.

பல தமிழர்களும் வேற்றின மக்களும் இதில் என்ன பிழை என்று நினைப்பார்கள். ஆனால் இப்படி தமிழக தலைவர்களே சொல்லுவார்கள் ஆனால், சிங்கள இனம் தமிழர்களை ஆட்டிப்படைப்பதை அவர்களே(தமிழக தலைவர்களே) ஒத்துக்கொள்வதுபோல ஆகிவிடும் அல்லவா ?

இலங்கை தமிழர்கள் ஏன் சிறுபாண்மை இனத்தவர்கள் அல்ல ?

இலங்கையில் உள்ள தமிழர்கள் அன் நாட்டின் ஆதிக்குடிகள் ஆவர். அவர்களே அன் நாட்டில் முதன் முதல் குடியேறியவர்கள் என்று இலங்கை வரலாறு கூறுகிறது.

இலங்கையில் தமிழர்கள், சிறிய எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் தமக்கு என்று ஒரு கலை கலாச்சாரத்தோடு வாழும் ஒரு தேசிய இனம் ஆகும். அவர்களுக்கு என்று பல பாரம்பரியங்கள், நிலப்பரப்புகள், கலை கலாச்சாரங்கள் உண்டு. இவை அனைத்தையும் கொண்டவர்களே ஒரு தேசிய இனம் ஆகும்.

வெறுமனவே ஒரு இடத்திற்கு வந்து குடியேறி, சிறிய எண்ணிக்கையில் வாழ்பவர்களையே நாம் சிறுபாண்மை இனத்தவர்கள் என்று கூறுகிறோம். சிறுபாண்மை இனத்தவர்கள் என்ற சொல்லை நாம் பாவித்தாலே, பெரும்பாண்மை இனத்தவர்கள் தான் ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்கள் என்று , அவர்களுக்கு நாமே அங்கிகாரம் கொடுக்கும் நிலை தோன்றிவிடும்.

இச் சொல்லையே சிங்கள அரசியல்வாதிகளும் காலாதி காலமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனை தமிழக தலைவர்களும் பயன்படுத்துவது ஈழத் தமிழர்களின் நெஞ்சை புண்படுத்தும்.

எனவே அவர்களை நாம் ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். அந்த இனம் அழிக்கப்படும்போதுதான், அவர்களை காக்க ஐ.நா போன்ற அமைப்புகள் முன்வரும். அவர்கள் அழிந்துபோகாமல் தடுக்க நாட்டை பிரித்துக்கொடுக்க ஒரு காலத்தில் வெளிநாடுகள் அழுத்தம் கொடுக்கும். இதனை மனதில் நிறுத்துவது அவசியமாகும்.

TAGS: