அரசாங்கத்தின் காணாமல்போனோர் கணக்கெடுப்பில் நம்பிக்கையில்லை: எம்.ஏ.சுமந்திரன்

sumanthiran_001இலங்கையில் கடந்த 30 வருட காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இந்திய செய்தி சேவை ஒன்றுக்கு தகவல் வெளியிடும் போது, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

இதன்போது கிராம மற்றும் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துப்படி இந்த கணக்கெடுப்பு உரிய முறையில் நடத்தப்படவில்லை என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

1983 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையில் நாடளாவிய 14 ஆயிரம் கிராமங்களை மையப்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அரசாங்கம் கூறுகிறது.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி வடக்கு, கிழக்கில் 8000 பேர் கொல்லப்பட்டும் ஆறாயிரம் பேர் காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

TAGS: