தீயணைப்பு படையின் ரிம50 மில்லியன் டம்பமான செலவு

 

Bombaதீயணைப்பு மற்றும் மீட்பு இலாகவுக்கு தேவையற்ற கருவிகளை வாங்கியதன் மூலம் நிதி அமைச்சு ரிம50 மில்லியனை வீண் செலவு செய்துள்ளது என்று நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு (பிஎசி) குற்றம் சாட்டியது.

116 வெட்டும் தீயணைப்பு கருவிகள் வாங்கப்பட்டது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிஎசி தலைவர் நுர் ஜாஸ்லான் முகமட் இன்று கூறினார்.

அந்த “சிசிஎஸ் கோப்ரா கட்டிங் எக்ஸ்டிங்குயூசர் இ300” (“CCC Cobra Cutting Extinguisher E300”) நேரடி பேச்சுவார்த்தை மூலம் சரிகாட் கெஜுருதெரஆன் அசாஸ் ஜெயா செண்ட். பெர்ஹாட்டிடமிருந்து வாங்கப்பட்டது.

இக்கருவுகள் தேவையற்றவை என்று கருதப்படுவதோடு தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகா அவற்றை முழுமையாக பயன்படுத்தவில்லை.

Bomba1தேசிய கணக்காய்வாளரின் 2012 ஆண்டு அறிக்கையில் எழுப்பப்பட்டிருந்த இவ்விவகாரம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகாவின் துணை இயக்குனர் மஹாடி மாட் அலியிடமிருந்து விளக்கம் பெற்ற பின்னர் நுர் ஜாஸ்லான் இதனைக் கூறினார்.

தீயணைப்பு இலாகா இந்த வெட்டும் தீயமைப்பு கருவிகளை வாங்கச் சொல்லவில்லை. அவற்றை வாங்குமாறு நிதி அமைச்சு அந்த இலாகாவுக்கு உத்தரவிட்டுள்ளது என்று நூர் ஜாஸ்லான் பிஎசி கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்

“இக்கருவிகளை வாங்குமாறு தீயனைப்பு இலாகா ஏன் கேட்டுக்கொள்ளப்பட்டது என்பதை நாங்கள் நிதி அமைச்சிடமிருந்து தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம் – என்ன காரணம் என்பது எங்களுக்குத் தெரியாது – அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்”, என்றாரவர்.

“இக்கருவிகள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், மலேசியாவில் பூகம்பங்கள் மற்றும் கட்டடங்கள் இடிந்து விழுதல் அபூர்வமான சம்பவங்கள். ஆகவே, இந்தக் கருவிகள் மிக அத்தியாவசியமான உபகரணங்களாகக் கருதப்படவில்லை”, என்று அவர் கூறினார்.

 

 

 

 

TAGS: