ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அதன் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டிலேயே இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் மனித உரிமைகள் குறித்தே மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது,
நவநீதம்பிள்ளை அம்மையார் கடந்த ஆண்டில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பிலும், அறிக்கையில் குறிப்பிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது,
இதற்கு மேலதிகமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தமது ஆண்டறிக்கையிலும் இலங்கை விடயம் பற்றி குறிப்பிடவுள்ளார்.
இலங்கை நிலைமைகள் குறித்தே அவர் ஆண்டறிக்கையில் உள்ளடக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


























இதனாலாவது எல்லையில்லா துயருறும் ஈழ மக்களுக்கு விரைவில் ஒரு விடிவு கிட்டுமா.?
மனித நீதியின் கண்களே ,நவநீதம்பிள்ளை அவர்களே ,ஒரு தேசிய இனத்திற்கு ,ஏற்பட்ட அவலத்தின், மறைக்கப்பட்ட உண்மையும் ,மறுக்கப்பட்ட நீதியும் ,தங்கள் எழுத்தால் கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்றும் நாங்கள் ,நீதி கிடைக்கும் வரை போராடுவோம் . ஈழத்தின் சுதந்திர சாசனம் கிடைக்கும் வரைப்போராடுவோம் , வெற்றி நமதே .