தமக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்குச் செல்வதைத் தான் தவிர்த்துக் கொள்வதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் அமர்வு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன் போது ஜெனிவாவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும் செல்லவேண்டும் என்ற பிரேரணையை அனந்தி முன்மொழிந்திருந்தார்.
இந்தப் பிரேரணைக்கு ஏகமனதாக ஆதரவு வழங்கிய வடக்கு மாகாணசபை, ஜெனிவாவுக்குச் செல்வதற்குப் பொருத்தமானவர் அனந்தியே என்றும் தீர்மானித்திருந்தது.
இவ்வாறானதொரு நிலையில் நேற்றுக் கருத்து வெளியிட்டுள்ள திருமதி அனந்தி சசிதரன்,
வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஜெனிவாவுக்குச் செல்ல வேண்டும் என்றேதான் பிரேரணையை முன் வைத்திருந்ததாகவும், தான் செல்ல வேண்டும் என்று எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.
அத்துடன் மாகாண சபை தனக்கு வழங்கிய அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த அனந்தி, பல்வேறு சிக்கல்கள் காரணமாக ஜெனிவாவில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை அமர்வை தவிர்ப்பதாகக் கூறினார்.
எமக்கும் வருத்தம் தான். வேறு ஆண்கள் யாரும் இல்லையோ? அவர்களுக்கும் தேவையற்ற அழுத்தம் கொடுக்கப் படுகிறதோ?
சர்வதேசமே நல்லினக்கம் என்றாயே ,தீர்வு தருகின்றேன் என்று ஒரு தேசிய இனத்தை அடிமைகளாக மாற்றுகிறாயே ,தமிழ் இனம் ஆதரவு பெற்ற ஆனந்தி அவர்களின் நிலையை பார் ,நடந்தவைகளை சர்வதேசத்திடம் சாட்சி சொல்ல முடியா அவலம் பார் ,கட்டிய கணவன் எங்கே என்று தெரியாது , இவராலேயே சாட்சி சொல்ல முடியவில்லை என்றால் ,வேர்யாரால் சாட்சி சொல்ல முடியும் , இலங்கையில் இன்றைய நிலை என்ன என்பதற்கு,ஆனந்தி அவர்களின் நிலையே முழுமையான சாட்சியாகும் , விடுதலை மட்டுமே விடியல் தரும், தடைகள் ஆயிரம் இருந்தாலும் நிலையை நோக்கி நகர்வோம் [ மலரட்டும் தமிழ் ஈழம் ] .