இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் இந்திய அரசாங்கம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளது. குறித்த பிரேரணை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு அமெரிக்காவின் பிரேரணையையும், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் மனித உரிமை சூழ்நிலைகள், அபிவிருத்தி மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை ஒப்பு நோக்கி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யவுள்ளது.
இதனை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பரீசிலித்ததன் பின்னர், குறித்த அறிக்கையை இந்திய மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக வெளியிடும் என்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கையில் அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்குமா? இல்லையா? என்பது தொடர்பிலும், இந்தியாவின் நிலைப்பாட்டுக்கான காரணம் குறித்தும் விளக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, போர் முடிந்து நான்கரை ஆண்டுகளாகியும் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கம் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காட்டவில்லை என்று பிரேரணைக்கு ஆதரவான நாடுகள் கூறுகின்றன.
அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் மௌனம் காத்துவருகிறது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியப் பிரதிநிதி எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
ஆனால், இலங்கைக்கு இன்னும் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு முன்னால் வேறு உலகப் பிரச்சனைகள் உள்ளன என்றும் பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வாதிட்டுள்ளன.
அதேவேளை, உள்நாட்டு விசாரணை பொறிமுறை இலங்கையில் சாத்தியமாகாது என்றும் இலங்கையில் நீதித்துறையை ஜனாதிபதியே கட்டுப்படுத்தி வைத்துள்ளதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்தியா வெளியிடவுள்ள “ஒப்புநோக்கும் விசேட அறிக்கை” இந்த முண்டாசு பொம்மை ஒப்புக்கு சரிபார்த்தப்பின் imported from Italy பாரத மாதாவின் அதிகாரத்துவ final ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். இதையெல்லாம் இவர்கள் செய்தியாக சொல்லிக்கொண்டு இருக்க மாட்டார்கள்…!!
இதைப்பற்றி பேசவே எரிகிறது. எல்லாம் துப்புகெட்ட தமிழ் நாட்டு தமிழர்களால் தான் — பக்கத்தில் இருந்து கொண்டே ஒன்றும் செய்யாமல் இப்போது ஏன் இந்த நீலிக்கண்ணீர்?
அதிலும் கருணா போன்ற ஈழத்ரோகிகள் -காட்டிகொடுக்கும் பிறவிகள் இருக்கும் வரை நமக்கு விடிவே கிடையாது.
இன்னுமா இந்தியாவை நம்புவது.இந்தியா தமிழர்களுக்கு துரோகத்தை தவிர வேறு என்ன செய்ய முடியும்?