கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் அனைவரையும் இன்று காலை கிளிநொச்சி பிரதான இராணுவ முகாம் பகுதிக்கு வருமாறு இராணுவத்தினர் அவசர அறிவித்தல் ஒன்றை பிறப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புலிகள் அமைப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட மற்றும் புனர்வாழ்வு பெறாதா நிலையில் உள்ள கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து முன்னாள் புலி உறுப்பினர்களையும் இன்று காலை 9 மணிக்கு கிளிநொச்சி நகரப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு வருமாறு இராணுவத்தினர் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
இதனால் கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் வேலை மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிப் பிரதேசங்களுக்கு சென்றிந்த நிலையிலும் கூட அச்சம் காரணமாக உடனடியாக கிளிநொச்சி செல்வதாக அறிய முடிகிறது.
இவ் அறித்தல் ஏன் விடப்பட்டது? என்ன நடக்கப் போகுறது என்பது தொடர்பில் தெரியவராத நிலையில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்கள் மத்தியிலும் அச்சவுணர்வு ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியான தேடுதல்களும் கைதுகளும் இடம்பெற்று வரும் நிலையில் இவர்வாறு தங்களை அழைப்பது குறித்து அவர்கள் அச்சமடைந்துள்ளனர்.