சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இரண்டு முக்கிய பிகெஆர் தொகுதி
கிளைகளில் குறிப்பாக பிகெஆர் நாடாளுமன்ற தொகுதி அந்தஸ்தை வைத்துள்ள அம்பாங், பாண்டன் என்ற இரண்டு தொகுதியில் இப்போட்டி நிலவுகிறது.
பாண்டானில் முன்பு லேம்பா பந்தாயில் இருந்த இளஞர் திரு .ராமன் இளங்கோவும், அம்பாங்கில் சமூக சேவகர் உலக தமிழர் பாதுகாப்பு இயக்க இயக்குனர் திரு பொன் ரங்கனும் களம் இறங்குகின்றனர்.
பிகெஆர் ஒரு பல்லின உரிமைக கட்சி அடிப்படையில் நாடு முழுக்க தொகுதி கிளைகளில் இந்தியர்கள் இந்த முறை போட்டி இட தயாராகி உள்ள வேளையில் இது கட்சிக்கும் இனத்துக்கும் ஒரு ஆரோக்கியமான பலத்தை குறிப்பா இந்தியர்கள் மத்தியில் தரும் என்று எதிர்பார்க்கலாம்.
கடந்த தேர்தலில் நம்மவர்கள் வாக்கால் வெற்றிபெற்றவர்கள் நம்மை ஒரு பொருட்டாக கட்சியில் நம்மமை உயர்த்தவில்லை,அரசு அரசு சாரா பதவிகளிலும் நமக்கு ஏமாற்றமே! குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அம்பாங் MPAJ எனும் நகராண்மை கழக இரண்டு இந்தியர்கள் பதவி நிரப்ப படாமல் போனது மிகுந்த ஏமாற்றத்தை தந்தது.
இதுபோல அம்பாங் தமிழ்பப பள்ளி நிலம் கெடுபிடி /பள்ளி திடல் மீது தோல் சாலை தசெக் பெர்மாய் மக்களின் வாழ்வாதார சிக்கல் போன்றவை தலை தூக்கி உள்ளது.
பழையது பழையதாக இருக்க மிக மோசமாக போக நாம் இனி இடம் தரலாகாது. அரசியலில் ஏமாறுவதும் எமாற்றபடுவதும் நம் தலை விதி என்று போக முடியாது. நம் உரிமை வெல்ல இந்தியர்கள் தமிழகர்கள் சிந்தனைக்கு ஒரு திட்டமிடல் கூட்டம் எதிர்வரும் 11/4/2014 வெள்ளிகிழமை இரவு 7 மணிக்கு அம்பாங் கம்போங் தசெக் பெர்மாய் மண்டபத்தில் திரு பொன் ரங்கன் அவர்கள் தலைமையில் நடைபெறும். அதுபோது கட்சியில் பொறுப்பு வகிக்க விரும்பும் உறுபினர்கள் /இளையர்கள் மாதர்கள் தங்கள் அடையாள அட்டை நகல் ஒரு பாஸ்போட் அளவு படம் உடன் கொண்டுவர வேண்டுகிறோம் . மேலும் விபரம் பெற திரு பொன் ரங்கன்
016 6944223016 6944223 அல்லது திரு ராமன் 0162777576 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளவும்.மீண்டும் சந்திக்கும் வரை நன்றி .
அம்பாங் ,பாண்டான் இரண்டு பிகேஆர் கிளைகளிலும் தலைவர் பொறுப்புக்கு இந்தியர்கள் போட்டி…………. இந்தியராக இருப்பதை விட தமிழராக இருப்பது சிறப்பு……
திருக்குறளில் அரசியல் அதிகாரத்தில் இறைமாட்சி குறள் 381 பாருங்கள்.
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு என்பதாகும் .
இரு அரசியல் வாதிக்கு வலிமையான படை ,அறிவுமிக்க மக்கள் ,பசிபோக்கும் தலைவன்,திறமையான அமைச்சர்கள்,நப்பு பாராட்டும் குணம் ,வலிமையான பாதுகாப்பு தர வல்ல ஆறும் உடையவன் மட்டுமே ஆன் சிங்கம் போன்று மக்கள் பிரதநிதியாக இருக்க முடியும்.
பெரும்பாலும் அரசியல் வாதிகள் இப்படி அமைவதில்லை. மாறாக ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு தேர்த்தல் வரும் போதுமட்டும் காசுக்கு மாரடிக்கும் கூட்டம் சமுதாயத்தை விலை பேசி தலைவனையும் சந்தி சிரிக்க வீம்புக்கு ஓட்டு தேடும் கூட்டமாக உள்ளது.
ஐயா வெறித்தனமான ஆலோசைனதான் என் எங்கள் போராட்டமும் தமிழன் தான் ஆனால் மலேசியா மற்றும் உலக அரசியல் அமைப்பில் தமிழனுக்கு தனி உரிமையில்லை. நாம் கட்டி கூவிகொண்டுதான் உள்ளோம் ஆனால் இந்தியன் என்ற மொழியற்ற இனத்தில் இருந்து நம்மை பிரிக்க முடியவில்லை.. மலேசியாவில் தமிழன் என்ற திராவிட கூட்ட குரங்குகள் ஏற்ப தில்லை ..தமிழனுக்கு தன் மீது தனி குழப்பம் ..அரசியல் போருக்கு இந்தியன் என்றால் ஒட்டு போடுவான் என்று தமிழ் அரசியல் அசிங்கள் அலையும்போது நானும் நீங்களும் எம்மாத்திரம் ..காலம் வந்தால் உங்கள் சித்தனை வெல்லும் துணை நிற்க தமிழர்கள் வர வேண்டும். இப்போதைக்கு நஹீ !
தகுதியிருந்தால் எந்த துறையிலும் போட்டியிடலாம்,இது அரசியல் என்பதால் நிதானமும் மக்கள் ஆதரவும் அவசியம்,pkr கட்சியில் இனத்துக்கு என்று தனி கட்சிகள் உருவாக்கப்படவில்லை,பல இனம் அடங்கிய ஒரு கட்சியில்,இந்தியர்களின் அங்கத்தினர் குறைவாகக்கானப்படுவதால் இந்திய தலைவர்களுக்கான ஆதவு எண்ணிக்கையும் குறையலாம் என்று கருதுகிறேன். இனப்பற்று என்பது இயல்பு.ஒருவகையில் இந்தியாகள் போட்டிகளில் பாதிக்கப்பட்டாலும் மற்றொருவகையில்,சலுகைகளில் அனைவருக்கும் பங்குண்டு என்பதை அறிந்துள்ளேன்,கெடா முன்னால் பக்காதான் ஆட்சியில் லங்காவி இந்தியர்கள் வரலாறு காணாத அளவில் நன்மைகள் பெற்றுள்ளனர்.ஆதாரங்கள் உண்டு.
தோழர் நிஞ்சா …இன ரீதி அரசியல் மட்டுமே அழுத்தம் தந்து இந்த இனத்தை காப்பாத்தும் என்பதுதுதான் உங்கள் அடை மொழி அர்த்தம் ! வாழ்த்துகள்.