இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரினால் நியமிக்கப்பட்ட குழுவின் பெயர் விபரங்களை வெளியிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தொடர்பிலான தகவல்களை வெளியிட முடியாது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பேச்சாளர் ரொபர்ட் கொல்வில்லியிடம் இலங்கை ஆங்கில ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அவ் ஊடகம் எழுப்பிய பெரும்பான்மையான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைக் குழுவின் இணைப்பாளராக சான்ட்ரா பெய்டாஸ் செயற்பட உள்ளார் என்ற விபரம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை விசாரணைக் குழுவின் நிபுணத்துவ ஆலேசானை வழங்கும் குழுவில், பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அதிசாரி, நியூசிலாந்து நீதவான் சில்வியா கட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைவர் அஸ்மா ஜஹான்கீர் ஆகியோர் அங்கம் வகிப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.