சர்ச்சைக்குரிய உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர் என்கிறார் பாஸ் தலைவர்

zulபாஸ்  மத்திய  குழு  உறுப்பினரும்  ஆய்வு மைய  செயல்முறை  இயக்குனருமான  சுல்கிப்ளி  அஹ்மட்,  பாஸ்  மத்திய  குழு  உறுப்பினர்களிடையே  வாட்ஸ்அப்-இல்  நிகழ்ந்துள்ள  சர்ச்சைக்குரிய  உரையாடலுக்கு  முக்கியத்துவம்  கொடுக்க  வேண்டாம்  எனக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அதில்  முகம்மட்  ஜுஹடி  மர்சுகி  முன்மொழிந்தவை அவருடைய  “தனிப்பட்ட  கருத்துக்கள்”  என்றும்  அவை  கட்சியினுடைய  கருத்துக்கள்  அல்ல  என்றும்  அவர்  கூறினார்.

“இதைவிடவும்  மோசமான  விவகாரங்களை  எல்லாம்  அவர்கள்  விவாதித்திருக்கிறார்கள்”, என்று  தெரிவித்த  சுல்கிப்ளி,  பாஸ் கட்சி  பக்காத்தான்  ரக்யாட்டின்  கொள்கைகளைக்  கடைப்பிடிப்பதில்  உறுதியாக  உள்ளது  என்றார்.

“உறுப்பினர்களின்  சொந்த  கருத்துக்களுக்கு  பாஸைப்  பொறுப்பாக்க  வேண்டாம்”, என்றவர்  கேட்டுக்கொண்டார்.