இன்று நூற்றுக்கணக்கானவர் கோலாலும்பூர், பிரிக்பீல்ட்சில் ஒன்று திரண்டு இந்து சமயத்தை இழிவுபடுத்திப் பேசிய இஸ்லாமிய சமயப் பரப்புரையாளரான உஸ்தாஸ் ஷாகுல் ஹமிட்-டுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டனர்
மஇகாவும் இன்னும் சில என்ஜிஓ-களும் அந்தக் கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. அதில் கலந்துகொண்ட மஇகா உதவித் தலைவர் எம்.சரவணன், பினாங்குக்காரரான உஸ்தாத் ஷாகுல் ஹமிட் உண்மையில் பாஸ் உறுப்பினர்தானா என்று வினவினார்.
“அது உண்மையானால் அவருக்கு எதிராக பாஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார்.
ஷாகுல் ஹமிட்டின் பேச்சு ஒரு காணொளியாக இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில், அவர் அழகப்பா, பாபாஸ் போன்ற “இந்துக்களின்” நிறுவனங்களிடமிருந்து மசாலை பொருள்களை முஸ்லிம்கள் வாங்கக் கூடாது என்கிறார்.
“பெர்மாத்தாங் பாவ் அருகே அழகப்பா தொழிற்சாலைக்குச் சென்றால், அதன் முன்வாசலில் ஒரு (தெய்வ) சிலையைப் பார்ப்பீர்கள். நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கும். ஏன் நாக்கு வெளியில் நீட்டிக் கொண்டிருக்கிறது? விற்பதற்குமுன் எல்லா மசாலைத் தூளையும் அந்தத் தெய்வம் ருசி பார்க்க வேண்டும், அதற்காகத்தான்”, என்று ஷாகுல் கூறுகிறார்.
அவர், இவ்வாண்டு பிப்ரவரி மாதம் ஷா ஆலம் தொழுகை இல்லமொன்றில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார். அதன்பின்னர் அவர், அவ்வாறு பேசியதற்காக முகநூலில் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
அது தனிப்பட்ட முறையில் நடந்த ஒரு நிகழ்வு என்றும் அந்தக் காணொளியை எவரும் இணையத்தில் பதிவேற்றம் செய்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் சொன்னார்.
“அது உண்மையானால், பாஸ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று சரவணன் கூறினார்.
இந்துக்கள் மறக்க மாட்டார்கள்
ஷாகுல் ஹமிட்டிற்கு எதிராக கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஸுல்கிப்ளி நோர்டின் விவகாரத்தில் நடந்தது போலல்லாமல், இந்தியர்கள் இந்த விவகாரத்தை பல வாரங்களுக்குப் பின்னர் மறந்து விட மாட்டார்கள் என்று சரவணன் கூறினார்.
ஆனால், ஸுல்கிப்ளிக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அவரும் மன்னிப்பு கோரினார். அதன் பின்னர், கடந்த பொதுத் தேர்தலில் அவர் பாரிசான் நேசனலின் ஷா அலாம் நாடாளுமன்ற வேட்பாளராகவும் கூட நியமிக்கப்பட்டார்.
ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பினாங்கில் ஷாகுல் ஹமிட்டின் வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் சரவணன் கூறினார்.
இன்று பின்னேரம் வரையில், ஷாகுல் ஹமிட்டிற்கு எதிராக 400க்கு மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக சரவணன் மேலும் கூறினார்.
முஸ்லிம் பொருட்களை வாங்குவதற்கு தடை
ஷாகுல் ஹமிட்டின் பேச்சு இந்தியர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கி விட்டது” என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷான் கூறியதாக தமிழ் நேசன் செய்தி கூறுகிறது.
“எங்களுக்கு சமாதானம் சொல்லி விஷயத்தை ஆறப்போடுவதை விடுத்து உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கின்றோம்”, என்று கூறிய மோகன் ஷான் “அப்படி இவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் இந்துக்கள் அனைவரும் முஸ்லிம் பொருட்களை வாங்குவதற்கு முற்றிலும் தடை செய்வோம்”, என்று மோகன் ஷான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தமிழ் நேசன் (ஜூலை 30) செய்தி மேலும் கூறுகிறது.
கே.ரமணி அக்கா எப்பொருள் எவர் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு ,தந்தை
பெரியார் தமிழ் மொழி மற்ற மொழிகளை போல அறிவியல்
படங்களை படிப்பதற்கு பயன் பட வேண்டும் ,தமிழை கடவுள் துதி பாடவும் ,புராண இதி காச நூல்களை மட்டும் படிபதிற்கு பயன்படுத்தினால் பிராமணன் மாதிரி கோயிலில் அர்ச்சனை தட்டை ஏந்தி பிச்சை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெரியார் கூறி இருக்கலாம் ,ரமணி அக்கா பெரியாரை பற்றி தோழர் திராவிடன் முழுமையான சரித்திரத்தை எழுதியுள்ளார் படியுங்கள் ,பிறகு தந்தை பெரியார் கொண்டு வந்த சீர்திருத்த தமிழ் எழுத்தில் அவரை தாக்கி எழுதாதீர்கள் .நீர் ஒரு பிராமண மாமி என்றால் எங்கே சமஸ்கிரதத்தில் எழுதும் பார்ப்போம் ,சொந்த மொழியில் ஒரு வரியை கூட எழுத முடியாத நீ கோயிலுக்கு போய் அர்ச்சனை செய்து அர்ச்சனை தட்டை காட்டி பிச்சை எடு அப்போதாவது புத்தி வருதா பாப்போம் .
ஆப்ரகாம் தேரே நைனா , தமிழ்பத்திரிகைகள் ஆரம்ப கால
கட்டத்தில் தமிழ் நாட்டு செய்திக்கு முக்கிய துவம் கொடுக்க
காரணம் கடல் தாண்டி இங்கு வந்தாலும் அவர்களின் உறவினர்கள் வாழும் தாய் நாட்டின் செய்தியை அறிய ஆவலாய் இருப்பதைக்கண்ட பத்திரிகை நடத்துனர்கள் தமிழ்
நாட்டு குறிப்பாக திராவிட கழக செய்திகளை அன்றாடம்
வெளியிட்டு வந்தனர் ,அந்த செய்திகளை போட அந்த நாடும் இந்த நாடும் தடைசெய்யவில்லை ,ஆனால் சீன பத்திரிக்கைகள் அப்படி சீனாவின் செய்திகளை குறிப்பாக கம்முனிஸ் செய்திகளை வெளியிட மலேசிய நாடு அனுமதி வழங்க வில்லை ,சீனனும் தமிழனும் ஒரு பாய் தலையணை யை மட்டும் தான் கொண்டு வந்தான்
அவன் மட்டும் பொருளாதாரத்தில் முன்னுக்கு வர அந்த இன பத்திரிக்கைகள் பொருளாதார சிந்தனையை மட்டும் காரணம் அல்ல தமிழன் சீனனைவிட உழைப்பதில் சளைத்தவன் இல்லை ,இவன் உடல் உழைப்பை மட்டும் போட்டான் ,அவனோ உடல் உழைப்போடு மூளைக்கும் வேலை கொடுத்து உழைத்தான் ,தமிழ் பத்திரிகைகள் ஆரம்ப காலத்தில் திராவிட கழகத்தின் சீர்த்திருத்த கருத்துகளை கொண்ட தன் முனைப்பு தூண்டும் கட்டுரைகளை ,தொடர்ந்து போட்டுக் கொண்டு வராமல் ஜோசியத்கும்,சினிமா செய்திகளுக்கும்,அடிக்கடி வரும் உலக அதிசய செய்திகளான சினிமா நடிகைகள் மாசமான செய்திகள் (முதல் பக்கத்தில் வரும் ) அரசியல் வாதிகளுக்கு துதி பாடும் செய்திகள் ,ஒரு அரசியல் வாதி ஒரு பதிகையில் பங்கு வாங்கி அவரின் அரசியல் லாபத்திற்காக அவரின் விரோதிகளின் செய்திகளை தாக்கி போடுவது ,கோயில செய்திகள் ,குருஜி களின் செய்திகளை பெரிய அளவில் போட்டு தமிழ் சமூதாயத்தையே கெட்டு குட்டிசுவராக்கியது தமிழ் பத்திரிகை தான் ,அதோடு மூட பழக்கத்தையும் விதைத்து உங்கள் கூற்று பிரகாரம் நம் இன பொருளாதரத்தை கெடுத்து விட்டது இப்போதைய தமிழ் பத்திரிகைகள் .ஒரு தமிழ் பத்திரிகையின் ஆரியரை நேரில் கண்டு ஏன் குப்பைகள் போட்டு தமிழ் சமூதாயத்தை கெடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு எங்களுக்கு எங்கள் பெண்டாட்டி பிள்ளைகள் தான் முக்கியம் ,இந்த சமூதாயம் முன்னுக்கு வர நாங்கள் ஒன்றும் சமூதாய இயக்கத்தை வைத்து நடத்தவில்லை ,தமிழ் பத்திரிக்கை ஒரு வியாபார நிறுவனத்தால் நடத்தபடுகிறது ,லாபம் இல்லை என்றால் நாங்கள் எங்கே போகவேண்டும் என்று கேட்கிறார் .
ஆன்மீக எண்ணம் எவர் ஊட்டாமலும் நம் குருதியில் கலந்துள்ள ஒரு விஷயம்..எல்லா மதங்களிலும் இடையே மூட விஷயங்கள் இருப்பது பொதுவான விஷயம்..களைய முனைந்து வெற்றிபெற்ற அருளார்கள் பலர்..ஆனால் உங்கள் தலைகளோ ..ஹிந்து மதம் மட்டுமே தவறான மதம் என்ற மாயையை உருவாகியதுதான் பெரும் தவறு..எதோ கன்னடதான் ஈவே ராமசாமி நாயகரர்தான் தமிழை கண்டு பிடித்தது போல் ஜம்பம் வேண்டாம்..எம்ஜியார் புதிய வடிவை சட்டமாக்கா விடினும் பழைய முறையிலும் கூட தமிழ் நிலைத்தே நின்றிருக்கும்.ஈ வே ரா வுக்கு 5000 முன்பே சைவ -வைணவ ஆன்மீக தமிழறிஞர்கள் வாழ வைத்ததால்தான் இன்றும் திருமுறைகளும் -திவ்ய பிரபந்தங்களும் .திருப்புகழும்,அபிராமி அந்தாதியும் வாழ்ந்து வருகின்றன.இன்னமும் ஆரியர் ,பிராமணர்-சமஸ்கிருதம் புரானம்தனா ?இன்னமுமா இந்த பழைய பஞ்சாங்கம் ? பரபரப்பான வாழ்கை விடுத்து “ஹரே ராமா-ஹரே கிருஷ்ணா ” கிருஷன பக்தி பேரியக்கம் மூலம் இன்று அமெரிக்க கிறிஸ்துவ மக்களே எளிமையின் சின்னமான ஹிந்து மதத்தை உணர்ந்து லட்சம் -லட்சமாக மதம் பெயர்ந்து வருகின்றார்கள்..உங்கள் அறிவின்படி பார்த்தால்- அவர்களும் மூடர்களா ?ஐயா சொன்னார் என்ற கட்டத்தை உடைத்து யதார்த்த நிலைக்கு வாரும் ஐயா.. ..
எந்த கிறிஸதவ நூலோ அல்லது இஸ்லாமிய நூலோ அல்லது மற்ற மத இதிகாசங்களோ தமிழனை, அவனது மொழியை, அவனது கலாச்சாரத்தை,அவனது பிறப்பை தரந்தாழ்த்தி எழுதவில்லை. ஆனால் இந்து மத நூல்கள்,இதிகாசங்களில் அப்படியா? எங்களின் சிறந்தப் பண்பாட்டிற்கு எதிரான ஆரியப் பண்பாட்டுக் கூறுகளை எங்களினத்தவனின் தலையிலும் வாழ்க்கையிலும் தினித்துள்ளது இந்து மதம். இந்திய உப கண்டத்திலிருந்த எல்லா வழிபாட்டையும் இந்து மதம் என்று மூட்டை கட்டி தமிழனையும் அவனது இறைக் கொள்கைகளையும் இந்துவில் கலந்து தமிழினத்தின் தனித்தன்மை முழுதுமாக சீரழித்தது இந்துவும் இந்து மதமும். அதனால்தான் தமிழனை மீட்டெடுக்க பெரியார் இந்து மத நூல்களையும், இதிகாசங்களையும், இந்து மதத்தையும் சாடவேண்டிய நிர்பந்தம் பெரியாருக்கு ஏற்பட்டது. இன்னும்ஆரிய புராணம்தானா? இன்னும் ஏன்? இதைவிட்டால் உங்களுக்கு வேறு எதுவும் இல்லையா? லண்டனைப் பார்… அமெரிக்காவைப் பார்… எல்லோரும் இந்துவாகிறார்கள். அவர்களெல்லோரும் முட்டாள்களா? என்று கேட்கிறீர்கள். உங்களுக்கு கேள்வி கேட்கவாவது அறிவிருக்கிறதா?
ஆரியத்தின்தாக்கம் தமிழினத்தை பாதிக்கும் நாள் வரைக்கும் தந்தை பெரியாரின் தாக்குதலிலிருந்து ஆரியத்துவமும் அதன் போதனைகளும் தப்பாது. தமிழின உணர்வாளனின் போராட்டமும் ஓயாத அலைதான். தமிழனைப் பார்த்து சூத்திரன்(வேசி பிள்ளை) என்று எழுதியும் பேசியும் வருவதைப்போல் லண்டன் , அமெரிக்கர்களை எழுதியோ அல்லது பேசியோவிட்டு உன் இந்து மதத்தை அவனிடம் பரப்பிட முடியுமா என்று கேட்கிறேன்? “வேசியின் பிள்ளை” என்று சொன்ன பிறகும் உன் மதத்தில் மான உணர்வே இல்லாமல் ஒட்டிக்கொண்டு இருக்கும் எங்களின் தமிழினம்போல் வெள்ளையனை அவமதித்துவிட்டு அங்கே உன் இந்து மதத்தைப் பரப்பிட முடியாது. அது என்ன லண்டன், அமெரிக்கா என்றால் முட்டாள்களும் , மூடநம்பிக்கையாளனும் இருக்கமாட்டானா? வால்டேர்,இங்கர்சால் போன்றவர்களெல்லோரும் மேலைநாட்டுச் சீர்திருத்தவாதிகள்தாம். அங்கும், இங்கும், எங்கும் மூடநம்பிக்கைகளும் முட்டாள்களும் நீக்கமற நிறைந்திருப்பர் என்பது மாத்திரம் உண்மையிலும் உண்மை. ரமணி … நீங்கள் குரங்குபோல தாவித்தாவி ஓடாமல் எங்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் எழுதவும். குழப்பாதேயும்!
கே.ரமணி அக்கா ,ஆரம்பத்தில் கிரிஸ்துவ மும் , இஸ்லாமிய மதமும் இந்தியாவிற்கு வந்த போது இந்துக்கள் தான் அதிகமாக அந்த இரண்டு மத்தில் இணைத்தனர் , இந்து மதத்தில் மேல் ஜாதி ,கீழ் ஜாதி என்றும் வேசியின் மக்கள்
என்றும் சொந்த மதக்காரனை கேவலமாக பேசியதால் தான் பாதி பேர் முஸ்லிம் மதத்திலும் ,பாதிபேர் கிரிஸ்துவ மதத்திலும் சேர்ந்ததாக எம்.ஆர். ராதா கூரியத்தை கேட்டதில்லைய .உண்மையை கூற வேண்டும் என்றால் இந்து மதத்தை இப்போது உள்ள அளவுக்கு எண்ணிகையை காப்பற்றி வருவது நாங்கள் தான் நாங்கள் இந்து மதம் ஒழிய வேண்டும் என்று பாரடா வில்லை ,இந்து மத்தில் உள்ள சிந்தனைக்கு எட்டாத ,மற்ற சகோதரர்களை திட்டா மல் .ஒதுக்கி தல்லாமல் நல்ல தொரு மதமாக இருக்க வேண்டும் என்று திராவிடர்கள் போராடினார்கள் ,ஆனால் நீங்களோ ,கடவுள் மந்திரத்திற்கு கட்டு பட்டது ,மந்திரம் பிரமணர்களுக்கு கட்டு பட்டது என்று போய் உரைத்து உங்களை மட்டும் மேல் ஜாதி என்று பறை சாற்றி கொண்டதால் இந்து மதத்தில் முஸ்லிம் ,கிறிஸ்துவ மத திற்கு இந்துக்கள் மதம் மாறிக்கொண்டு இருக்கிறார்கள் ,ஆரியர்களே உங்கள் மதம் இந்த நாட்டில் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் நீங்கள் மாற வேண்டும் ,மனிதர்களை மதிக்க வேண்டும் எல்லோரும் சமம் என்ற நிலைக்கு உங்கள் மதத்தை கொண்டு வரவேண்டும் ,இல்லையேல் 2030 ஆண்டில் இந்து மதம் மலேசியாவில் இல்லாமல் போய் விடும் , அனைத்து இந்தியர்களும் முஸ்லிம் ,கிறிஸ்துவ மத த்தில் இருப்பார்கள் அவர்கள் மாஜி இந்துக்களாகி விடுவார்கள் .
https://www.facebook.com/photo.php?fbid=989535581063412&set=a.430275396989436.120983.100000209373190&type=1&தியேட்டர்
ஹரே கிருஷ்ணா இயக்கம் கிருஷ்ணரைத் தவிர வேறு எந்த தெய்வங்களையும் வழிபடுவதில்லை. அவர்கள் தங்களை இந்து மதம் எனப்படும் பெரிய போர்வைக்குள் மூடிக் கொள்வதில்லை. அதன் ஒரு சிறு பகுதியை மட்டும் அவர்களின் இயக்கத்தில் புகுத்திக் கொண்டனர். வைணவ மத அடியார்கள் திருமால் என்னும் விஷ்ணுவை மட்டுமே வழிபடுபவர்கள். இவர்களும் பிற தெய்வங்களை ஏற்பதில்லை. இவர்களில் 99.999% தமிழர் வழி வந்த பிராமணர்களே. அவர்களைத் தவிர பாமரத் தமிழர்களை தங்களுடன் இணைத்துக் கொண்டவர்கள் அல்ல. இன்றும் வைணவ மதத்தில் இருக்கும் மக்கள் அவர்கள் அல்லாத தமிழர்களை இழிவாகவே நடத்தியே வருகின்றனர். தமிழர்களை இழிவாக நடத்தும், கூறும் மதமெல்லாம் தமிழரின் தலையில் திணித்து வைத்த காலம் போய் விட்டது ரமணி. நீர் சுய தமிழரானால், உம்மை சூத்திரன் என்று முத்திரைக் குத்திய மதத்தைக் கட்டிக் கொண்டு அழச் சொன்னது யார்?. இதுவா தமிழனின் தலை எழுத்து?. இதுதானா தமிழனுக்கு உள்ள மான ஈன ரோசம்?. உப்பை போட்டு சோறு சாப்பிடும் எவ்வொரு தமிழனும் தன்னை இழிவுபடுத்தும் ஒரு மதத்தை தனது மதமாக ஏற்கமாட்டான். கன்னடத்தவர்களோ, மலையாளிகளோ, தெலுங்கு வம்சாவளி மக்களோ தங்களுக்கென ஒரு மதத்தை உருவாக்கிக் கொள்ள வில்லை. ஆதலால் அவர்கள் இந்து மதத்தை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழி இல்லை. ஆனால் தமிழர்களுக்கு அந்த நிலை ஏற்படவில்லை. சிறந்ததொரு ஆன்மீக தத்துவத்தின் அடிப்படையில் உருவான சைவ சித்தாந்தம் தமிழர்களின் சைவ சமயத்தின் அடித்தளமாக உள்ளது. இச்சைவ சமயமானது உயிர்கள் அனைத்தும் சமமானவை என்றே வலியுறுத்தும். இங்கே வருணாசிரம கோட்பாடுக்கு இடமில்லை. உன் உயிரின் விடுதலைக்கு வழி காட்டும் சைவம் வேண்டுமா அல்ல உம்மை இழிவுபடுத்தும் இந்து மதம் வேண்டுமா?. முடிவு அவரவர் கையில்.
வெளிநாடுகளில் ஹிந்து மதத்தின் மீது பற்று கொண்டு மாறி வரும் எல்லா கிறிஸ்துவர்களும் உங்களுக்கு மூடர்கள் ..முட்டாள்கள் ! இதை படிக்கும் மானமுள்ளவர்கள் இந்நேரம் உங்களின் சிந்தனை பேராற்றலை புரிந்து கொண்டிருப்பார்கள்..உங்களை வெளி காட்டி விட்டீர்கள்…நன்றி..உங்களின் பாசறையின் பண்பே இதுதான் ..எதற்கு எடுத்தாலும் கொதித்து எழுவது ! நிதானம் அன்பரே நிதானம் ..
உங்கள் நிதானம் என்ன என்பது எங்களுக்குத் தெரியாதா? ஒரு பெண் என்றும் பாராமல் மூக்கினை வெட்டியவனின் பொறுமை என்னவென்று எங்களுக்கும் தெரியும் ரமணி. இன்று போய் நாளை வா என்று சொல்லத் தெரிந்தவனுக்கு மரத்தில் ஒழிந்திருந்து ஒரு வீரனை அம்பெய்தியவனைக் கடவுள் என்று சொல்லும் உங்களின் பகுத்தறிவைவிட எங்களின் அறிவு ஒன்றும் கீழானதல்ல ரமணி.
அந்த வெள்ளைக்காரனிடம் அவன் சூத்திரன் என்று சொல்லி இருக்க மாட்டீர்களே?.
ரமணிக்கு இது போதும். அவர் முதலில் அவருடைய வட்டத்தை விட்டு கொஞ்ச நேரம் தமிழனாக இருந்து பார்க்கட்டும். அப்போது நமது உணர்வை புரிந்துகொள்வார் ரமணி.
ஆடு ,மாடு ,கோழிகள் எல்லா கோயில்களிலும் பலி கொடுபதில்லை ..பலிகொடுக்கும் இடங்களில் இறைச்சி சமைத்து சாப்பிடுவதாக கேள்விபடதில்லை ..சாமிக்கு சாராயம் வைத்து வழிபாடும் வழக்கம் எல்லா இடங்களிலும் இல்லை ..பொதுவாக எல்லா நாடுகளிலும் கோயில் அன்னதான உணவு மரக்கறி வகைகள் தான் 200 வருடங்களுக்கு முன்னர் படிப்பறிவில்லாத நம் முன்னோர்கள் செய்ததை இன்னும் தொடர வேண்டுமா .?.அன்று கண்ட இடங்களில் கோயில் கட்டும் போது british நிர்வாகத்திடம் கோவில் நிலங்களை பதிந்து இருந்தால் இன்று எவரும் உடைக்க முடியாது கடைசியில் சமய நம்பிக்கைக்கும் ..ஒரு எல்லை வேண்டும்
ஆடு,கோழி சமைத்து உண்ண சுகாதார அமைச்சு அனுமதி கொடுத்துள்ளது,சில மிருகத்தை வளர்ப்பு மிருகமாகவும்.சில மிருகம் ஆபத்தானவை.சில மிருகம் விஞ்ஞான பரிசோதனைக்கு உற்படுகிறது.சில மிருகம் பாதுகாக்கப்படுகிறது.குல தெய்வம் என்பது தன் இனத்தை காக்க போரில் வீரமரணம் எய்த வீரனுக்கு வருடம் ஒரு முறை ஆடு,கோழி சமைத்து தன் ஊர் மக்கள் ஒன்றுகூடி நன்றி சொல்லும் வழக்கம் தொன்று தொட்டு நடந்து வருகிறது.மது அருந்துவது வீர மக்களின் பழக்கம் வழக்கம்.அசைவம்,மது அருந்துவது யார் தவறு சொன்னது.பன்றி சலி காய்ச்சல் வரும்போது ஒரு ஆய்வு சொல்கிறது ஹிந்துக்கள் மது அருந்துவதால் நோய் தாக்குவதில்லை.கசகசாவை அரசு தடை செய்யும் போது நம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்,கசகசா பாரம்பரிய சமய பொருள்யென்று,அதுவும் போதை பொருள்.டீ,காப்பி,வெற்றிலை,பாக்கு,பீடா,சிகரேட்டு,புகையிலை,எது நம்மை அது இல்லாமல் இருக்க முடியாது செய்கிறதோ அது போதை பொருளே.அன்பு,பாசம் உட்பட.வாழ்க நாராயண நாமம்.
வாலி தன் தம்பியின் மனைவி பாராது அபகரித்து தன் தம்பியை காட்டுக்கு விரட்டிய அரக்கனை முதுகில் குத்துவதில் தவறு ஏதும் உண்டோ.தீவினை அச்சத்தில் பிறனில் விழையாமை மிக கடுமையான குற்றமாக எச்சரித்துள்ளார்.வாழ்க நாராயண நாமம்.
தேவர்கள் தாங்கள் செய்யும் யாகத்தை இராவணன் முதலிய இராட்சதர்கள் வந்து அழிப்பதாய் நான்முகனிடம் வந்து முறையிடுகின்றார்கள். நான் முகன் தன் தந்தையாகிய திருமாலிடம் சென்று முறையிடுகிறான். திருமால் தாம் பூமியில் இராமனாகப் பிறந்து இராவணனைக் கொல்லுவதாக ஒப்புக் கொள்ளுகிறார் இதுவே இராமாயண கதை தோன்றக் காரணம்.
திருமால் மனிதனாகப் பூமியில் பிறந்து பல சங்கடங்களை அனுபவிக்கக் காரணம் என்னவெனில், முன்பு அவர் செய்த பாபச்செயல்களுக்காக அவருக்கு ஏற்பட்ட சில சாபக்கேடுகள் என்பதாகத் தெய்வீகப் புராணங்கள் சொல்லுகின்றன. அவையாவன:- திருமால் பிருகு முனிவரின் மனைவியைக் கொன்ற பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் ஜலந்திராசூரன் மனைவியை வஞ்சகமாய்க் கூடின பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், திருமால் திருமகளைப் பகல் காலத்தில் பிறர் அறியக் கலவி செய்த பாவத்திற்காக ஏற்பட்ட சாபம் என்றும், இன்னும் இப்படிப் பலவாறாகப் புராணங்களில் கூறப்பட்டி ருக்கின்றன.
மேற்குறிப்பிட்ட ராம அவதாரம் எடுத்த திருமாலை அதே வள்ளுவனின் பிறன் இல் விழையாமையில் சேர்க்கலாமா? கூடாதா? ராமனின் ஒரிஜினலே (திருமால்) நிலவரம் இப்படி இருக்கும்போது … வாலியை காயி சொன்ன பிறன் இல் விழையாமை குற்றத்திற்காக மறைந்திருந்து முதுகில் அம்பெய்தி குத்த என்ன தகுதியை இராமன் பெற்றிருக்கிறான் என்பதை தயவு செய்து பழுக்காத காயி செம்பருத்தி வாசகர்களுக்காக விளக்கம் தருவாரா?
2500 வருட சரித்திர சமுத்திரம் ராமாயணம்..அதன் உட்பொருளை புதிந்தோர் மட்டுமே தொடர்ந்து நீந்த இயலும்..அது உங்களைபோன்ற எதிர்மறை சிந்தனையாளர்களால் தொட கொஞ்சம் காலம் ஆகும்..உங்கள் பாசரைக்காக ராமாயணத்தை ” கீமாயணம்”என்று மாற்றி கிண்டலடிக்க முனைந்த கவியரசு கண்ணதாசன் தன்னையே கம்பனின் தமிழுக்கு தந்தான்.இது தன் நூலில் அவரே சொன்னது..நேர்மறையாக கம்பனையும் ராமாயணத்தையும் கண்ட தீர்கதரிசி அவன்..அவன் பாடாத ராமன் பாடல்களா ? உங்கள் சீர்திருத்த அறிவால் அவரையும் மூடன் ;முட்டாள் என்று உங்கள் பாஷையில் சொல்லி சொல்லிவிடுங்கள்.காலம்காலமாக மாற்றாமல் அதே பல்லவியையும் மறக்காமல் பாடிவிடுங்கள்..உங்களைபோல ஒருவரின் நூலை வைத்து சில ஆண்டுகளாக குண்டான் சட்டியில் குதிரை ஓட்டினால் ஊர் போய் சேர முடியாதையா.?திருமுறைகள் 12- திவ்ய பிரபந்தம் 4000 – திருமந்திரம் -3000 போக,..அபிராமி அந்தாதி-திருப்புகழ்-திருமுருகாற்று படை என பல நூறு அருத்களஞ்சியங்கள் கொண்ட அற்புத மதம்.எதிர்த்து கேட்க ஆள் இல்லாத்தால். அன்று பெரியார் நிறைய பேசினார்..தரம் தாழ்த்த தமிழர் கூட்டம் தலை குனிந்து கேட்டது..இன்று யாரையும் உங்கள் பேச்சால் மாற்ற முடியாது ஐயா..உங்களை விட கணினி வலைதளங்கள் மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்தி வருகின்றது…அவர்களையும் அறிவிலாத ஜன்மங்கள் என்று சொல்லிவிடுங்கள் ..தீர்ந்தது பிரச்னை..
ஜீவாத்மா, மகாத்மா,பரமாத்மா,நீங்கள் குறிப்பிடுவது ஜீவாத்மாவை பற்றியது பசி,தாகம்,ஆசை,காமம் போன்றவற்றுல் உழன்று வாழ்பவை,மகாத்மாவாகப்பட்டவர் முன்பு ஜீவாத்மா நிலையிலிறுந்து முன்னேறி விடுப்பட்டு மகாத்மாவாக புனிதம் அடைந்தவரே.ஆனால் நீங்கள் குற்றம் சாற்றுவதோ பரமாத்மாவைபற்றயது உடல் உள்ளதற்கு ஏற்படும் அவஸ்தை பற்றியது.நீங்கள் முதலில் கடவுளை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.அதாவது திருக்குறளில் அறன் வலியுறுத்தல்,நீத்தார் பெருமை,வான் சிறப்பு மற்றும் கடவுள் வாழ்த்து இவைகளை உணர்ந்தால் கடவுளிள் தன்மை புலப்படும் அதற்கும் பெரியோறை துணைக் கொள்ளல் வேண்டும்.வாழ்க நாராயண நாமம்.
பத்து மலை முருகனுக்கும் இறச்சி,மீன் கறி…..எல்லாம் படைத்தது ஒரு புது யுகம் i
இதற்காக ஆரம்பிக்கலாம் கூடவே இதற்கு கட்டணம் அறவிட்டால் கோயிலுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும் …வியாபாரிகளும் கோயில் அருகே மீன் இறச்சி கடைகள் போடலாம் நல்ல வருமானம் கிடைக்கும் …பின்னர் மற்ற நாடுகளுக்கும் ..இந்த வழிபாட்டை அறிமுகபடுத்த்லாம்
ஜீவாத்துமா பரமாத்துமா எனும் எஸ்கேபிச ஆத்துமா கதையெல்லாம் வாழும் மனித ஆத்துமாக்களை முட்டாளாக்கும் ஆத்மாக்களின் வேலை என்பது தெள்ளத் தெளிவாக்கியமைக்கு நன்றி.
இந்து மா தர்மரே… முதலில் இராமன் என்றால் யார்? இராமயணம் என்றால் என்ன? நீங்கள் குறிப்பிட்ட இந்த 2500 கணக்கு சரிதானா? எனும் இன்னும் பல கேள்விகளுக்கு நீவீர் பதில் கண்டு இந்தப் பகுதிக்கு மற்றவரகளையும் முட்டாளாக்க வாங்கள். தலையும் தெரியாமல் காலும் தெரியாமல் ராமனுக்காக இங்கே வக்கீலாக ஆஜராக ஆசைப்படாதீர்கள். கண்ணதாசனையும் தெரியும் அவர் கவிதையும் தெரியும் எனக்கு. உங்களுக்குத் தெரியுமா அவருக்கு தமிழில் எத்தனை பாக்கள் தெரியும் என்பது? கவிதைக் கன்னியின் காய்,கனி,தொடை எல்லாம் கண்ணதாசனுக்கு நன்றாகவே தெரியும். கம்பராமயணத்தில் அவை தெள்ளத் தெளிவாக உள்ளதால் கண்ணதாசன் அதில் சொக்கிப்போனார் என்பது எனக்குத் தெரியும். உமக்குத் தெரியுமா? இதை எல்லாம் தெரிந்துகொண்டு இங்கே சொல்லாட வாரும் ஹிந்து தர்மனே!
திராவிடரே,தெய்வத்தின் தன்மை தெரிந்து வாரும் பின் நாம் பேசுவோம்.ஆறாம் அறிவு என்பது ஞானத்தால் வரும் தெழிவு.ஆமாம் வெங்கட் ராமசாமி நாயக்கர் ஐந்தாண்டுக்குமேல் படிக்கவில்லை ஏன்.வயதுக்கு மீறிய செயல் ஒரு நோய் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.திருவல்லுவம் சொல்கிறது கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும் அவரை கல்வியில் சிறந்தோர் என்று அறிவுடையோர் ஒப்புக்கொள்ள மாட்டார் யென்று.வாழ்க நாராயண நாமம்.
தெளிவா? அல்லது தெழிவா? திருவள்ளுவமா? அல்லது திருவல்லுவமா? இப்படிப் பட்ட தமிழ் அறிவுகூட இல்லாத காயி போன்றவருக்குச் சொன்ன குறளை பகுத்தறிவுப் பகலவனுக்குச் சொன்னதாகப் பிதற்றாதீர்கள். உங்களுக்குக் குறளும் தெரியாது. இடம், பொருளும் கண்டு குறளை விளங்கிக் கொள்ளவும் தெரியாது. பிறகு ஏன் பெரும் புலவனைப்போல் அவையில் சிறகை விரிக்கிறீர்? ஆறாம் அறிவும் தெரியும். ஏழாம் அறிவும் (சினிமா ஏழாம் அறிவு அல்ல) தெரியும். இவை உமக்கு எட்டாக் கனி என்பதும் எமக்குத் தெரியும். முதலில் தமிழ்ச் சொற்களைப் பிழையற எழுதும் அறிவை ஒரு நல்ல தமிழாசிரியனிடம் கற்றுத் தெளியுங்கள்.