சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் பாஸ் மத்திய குழு ஆகஸ்ட் 17-இல் கூட்டம் நடத்தி முடிவெடுக்கவுள்ள வேளையில், 2008-இல் உருவான பக்கத்தான் ரக்யாட் கூட்டணியைக் கட்டிக்காப்பது அவசியம் என அக்கட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பக்கத்தானில் பலவீனங்கள் இருந்தாலும் தனியொரு மனிதருக்காகக் கூட்டணி உடைந்து விடக்கூடாது என பாஸ் மத்திய குழு உறுப்பினர் முஜாஹிட் யூசுப் ராவா கூறினார்.
அவர் குறிப்பிட்ட அந்த மனிதர் சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம். பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் சிலாங்கூர் சுல்தானின் அனுமதியுடன் இன்னமும் பதவியைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்.
“பக்கத்தான் உணர்வும் இலட்சியமும் மிகப் பெரியவை, தனியொருவருக்காக அவற்றைக் கைவிடுதல் கூடாது”, என பாரிட் புந்தார் எம்பியும் பாஸ் தேசிய ஒற்றுமை பிரிவுத் தலைவருமான முஜாஹிட் கேட்டுக்கொண்டார்.
நல்ல கருது …தனி ஒரு மனிதனுக்காக பெரும் லட்சியத்தை இழக்க கூடாது…எதை நினைத்து கூட்டனி வைதிர்களோ அந்த லட்சியம் நிறைவேறும் தருணத்தில் தனி ஒரு மனிதனுக்காக கூட்டனியை இலகாதிர்.இந்த கூட்டம் தான சேர்ந்த கூட்டம் அல்ல மக்களால் சேர்ந்த கூட்டம்,மக்கள் நம்பிக்கை வைத்து உங்கள் கூட்டனிகு மிக பெறிய ஆதரவு தந்து உள்ளார்கள் நசபடுதிவிடதிர்கள்…பாஸ் கச்சி நல்ல யோசித்து நல்ல முடிவெடுக்க வேண்டும்.நாம் கஷ்டம் படும் பொது கைகொடுதவர்களுக்கு நாம் கைகொடுக்க வேண்டும்…
நல்லதை கூர எங்கோ உங்களை போன்ற ஓரிருவர் இருக்கத்தான் செய்கிறிர்கள்?
இன, மதமெனும் பெரிய வட்டத்திற்குள் தத்தளிக்கும் பாஸ் கட்சிக்குள் சிறிய வட்டமாக திகழும் முஜாஹிட் யூசுப் ராவா போன்ற பரந்த மனம் கொண்டவர்கள் தொடர்ந்து பெயர் போட முடியுமா என்பது சந்தேகமே!.
இந்த ஒரு சிறிய பிரச்சனையில் ஒற்றுமை காண முடியாத பாஸ் கட்சியா புத்ராஜெயா வரை சென்று அரசாட்சி செய்யப் போகின்றது?. காலைக் கடிக்கும் செருப்பை தூக்கி எரிந்து விட்டு புதிய செருப்பை சோதித்துப் பார்த்து விட்டுப் போடுங்கள்.
காலிட்டுக்காக மக்கள் கூட்டணி உடையவில்லை. மாறாக மக்கள் கூட்டணியை உடைப்பதற்கு உம்னோ நிபுணர்கள் வழிவகை செய்து கொடுத்து பாஸ் கட்சி மூலம் நிறைவேற்றப்படும் நாடகம்தான் என்பதனை மக்கள் என்ன அறியாமலா இருக்கின்றார்கள்?.
சரியாக சொன்னீர்கள் …..
பாஸ்கரன் அம்நோகாரனிடம் இவ்ளவு எளிதில் விலை போவான் என்று எண்ணி பார்கவில்லை
பாஸ் கட்சியின் இந்தியர் கிளாப் ஆதரவாளர்கள் என்னச் செய்ய போகிறார்கள்..?
இந்தியர்கள் இந்த கிளப்பில் என்ன செய்து கொண்டிருகிறார்கள்?என்ன செஇதுருகிரார்கல் இந்தியர்களுக்கு ?
முஜாஹிட் யூசுப் ராவா போன்ற தூர நோக்கு சிந்தனையாளர்கள்தான் இந்நாட்டுக்குதேவை.
PAKATAN RAKYAAT கூட்டணி தொடர வேண்டும் என்பது நாட்டில் உள்ள பெரும் பன்மையான மக்களின் எதிர் பார்ப்பு . ஆனால் PAS உண்மையாக இருக்க வேண்டும் என்பது ஒட்டு மொத்த நாட்டு மக்களின் திடமான எதிர்பார்ப்பு. நம்பிக்கை என்ற பெயரில் மலேசியா இந்திய சமுதயத்திக்கு பெரிய துரோகம் செய்யும் நஜிப்பை போன்று PAS கட்சியும் மாறிவிடக்கூடாது என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
லிம் வேறு பாஸ்ஸுடன் மோதிகொண்டார்,ஒத்துவரலேன்னா கழற்றி விட்ருங்கப்பா பாஸ்ஸை,முடியுமா நாராயண நாராயண.