தமிழர்களை அடிமைப்படுத்த முடியாது! தமிழீழம் மட்டுமே தீர்வு! லீ க்வான் யூ

lee_kuan_yew_eelamஇலங்கையின் இனப்பிரச்சினை தீர்வுக்கு தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு தமிழீழம் மட்டுமே என்று சிங்கப்பூரின் சிற்பி என்றழைக்கப்படும் லீ க்வான் யூ வலியுறுத்தியுள்ளார்.

பேராசிரியர் Thomas Gordon என்பவர் Conversations With Lee Kuan Yew எனும் நூல் ஒன்றை 2010 இல் எழுதியுள்ளார். இதில் லீ க்வான் யூ வின் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றன. இதன் போது ஈழப் பிரச்சினை தொடர்பாக லீ க்வான் யூ வின் கருத்து வினவப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிங்களவர்கள் மட்டுமன்றி, தமிழர்களும் ஆதி காலம் தொட்டே வாழ்ந்து வருகின்றார்கள். ஆனால் இரு இனத்தவரும் ஒற்றுமையாக வாழும் சூழல் அங்கில்லை. தவிரவும் இலங்கை ஒரே நாடாக இருக்கும் வரை அங்கு அமைதி நிலவாது.

விடுதலைப் புலிகளை ஒழித்தது நாட்டின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதாக ஜனாதிபதி மஹிந்த கூறுகின்றார். அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார்.

ஆனால் சிங்களவர்களால் ஒருபோதும் தமிழர்களை அடிமைப்படுத்த முடியாது. தமிழர்கள் அச்சத்தில் ஓடி ஒளியவும் மாட்டார்கள். மறுபுறத்தில் அவர்களின் மனதை வென்றெடுப்பது அரசாங்கத்தினால் முடியாத காரியம்.

சிங்களவர்கள் தொடர்ச்சியாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றார்கள். அப்பட்டமான இன அழிப்பு நடைபெறுகின்றது. ஆனால் தமிழர்கள் தொடர்ச்சியாக அடங்கியிருக்க மாட்டார்கள். இந்தச் சூழலில் இன்னொரு ஆயுதப் போராட்டம் குறித்து உடனடியாக எதிர்வு கூறமுடியாது.

எனினும் இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழம் மட்டுமே. அதன் மூலமாக இரு இனங்களும் கௌரவமான வாழும் சூழல் ஏற்படுத்தப்படும் என்றும் லீ க்வான் யூ 2010 இல் தெரிவித்துள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதுடன், இவர் எழுதிய புத்தகம் மின்னிதழ் (ebook) வடிவில் வெளியாகவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

TAGS: