இந்திய விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தற்போது தொடர்ந்தும் தமிழகத்தில் தங்கியுள்ளனர். அவர்கள், இன்னமும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பின்களான மாவை சேனாதிரா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வராஜா ஆகியோர் இலங்கை திரும்பிவிட்டனர்.
எனினும் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் தமிழகத்தில் இன்னும் தங்கியுள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்கான கோரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அது பரிசீலனையில் இருக்கும் நிலையிலேயே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழகத்தில் தங்கியுள்ளனர்.
எனினும் ஜெயலலிதாவை சந்திக்கும் முன்னர் அவர்கள் வேறு எந்த முக்கியஸ்தர்களையும் சந்திக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இனப்பிரச்சினையில் முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் காட்டிய தீவிர பங்களிப்புக்கு பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் நேரடியான பங்களிப்பை வழங்கவில்லை.
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை சம்பவமே இதற்கு காரணமாக இருந்தது.
திராவிட முன்னேற்றக்கழகத்தை பொறுத்தவரையில் அது இலங்கையில் இறுதிப்போர் இடம்பெற்ற காலத்தில் தமது செல்வாக்கை பயன்படுத்தி இந்திய மத்திய அரசாங்கத்தின் ஊடக ஒரு போர்நிறுத்தத்தை கொண்டு வந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம் என்ற ஆதங்கம் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் உள்ளது.
இந்தநிலையில் மீண்டும் இந்தப்பிரச்சினையில் தமிழக அரசியல் அரங்கில் வலுவான நிலையில் இருக்கும் ஜெயலலிதாவை உள்வாங்கவேண்டும். மற்றும் இலங்கை மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் அதற்கு ஜெயலலிதாவின் ஆசிர்வாதம் அவசியமானது என்ற அடிப்படையிலேயே கூட்டமைப்பினர் ஜெயலலிதாவின் சந்திப்பை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் நாளை வரை கூட்டமைப்பினர் தமிழகத்தில் தங்கியிருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்மா! இன்னும் வெற்றி களிப்பில் இருக்கிறார். தொடர் கொண்டாட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இவைகளையெல்லாம் முடித்து விட்டுத்தான் உங்களைப் பார்க்க அவருக்கு நேரம் கிடைக்கும். அவருக்கு எது தேவையோ அதற்குத் தான் நேரம் ஒதுக்குவார்!
தனி தமிழ்நாடு உருவாக முயலுங்கள்.அங்கே ஈழம் பிறபதற்கு தானாக வழி பிறக்கும்.
இதெல்லாம் ஓவரான கற்பனை,வாழ்க நாராயண நாமம்.
டில்லியில் மோடியைப் பார்க்கக் கூட நீங்கள் இவ்வளவு சிரமப்படவில்லை…!! ஏன் நீங்கள் முன் கூட்டியே இந்த v v v v vip உடன் சந்திப்பு உர்ஜிதம் செய்யவில்லை?!
செயலலித்து அம்மா சசியோட கிச்சனில் தோசை சுடுகிராற்போல் ..
கொஞ்சம் பொறுமையா காத்திருங்களேன் ..
சின்னபையன் சம்பந்தன் துன்கிடாமல் இருக்க யாராச்சும் குச்சுமிட்டாய் வாங்கி கொடுங்கப்பா
காயி,அவர்களுக்கு.சிங்கப்பூர்,பங்களாதேசம்,கிழக்கு திமோர்,தென் சூடான்,வட கொரியா ,இன்னும் பல நாடுகள் நசுக்கப்படும்போது எழுந்து நின்று தமக்கு தேசம் வேண்டும் என்று போராடி இன்று உலகத்தில் யாரிடமும் அடிமையாக நில்லாமல் சுதந்திரமாக வாழவில்லையா?தொப்புள்கொடி உறவுகள் கொல்லப்படும்போது கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாய் இந்த துரோக இந்தியாவோடு சேர்ந்து வாழ்கிறோமே இது இனதுரோகத்தின் உச்சகட்டம் ஆச்சே.சொல்லுங்கள் நண்பரே தனி தமிழ் நடு உருவாகுவதில் என்ன பிரச்னை.என்னிடம் தனி நாட்டின் அவசியம் மற்றும் வழிமுறைகள் நிறைய இருக்கிறது.வாருங்கள் நண்பரே இதை சபைக்கு கொண்டு வந்து பேசுவோம் .நான் தயார்.இந்தியாஎன்பது கூட்டு நாடுகள் ஆட்சி.அவற்றால் நமக்கு பிரயோஜனம் இல்லை என்றால் தூக்கி எறிவோம் .ஐரோப்பா போன்றதுதான் இந்தியா.அனால் அவர்கள் மொழிக்கென நாடாகி மிக சிறந்த வாழ்க்கை வாழ்வது இந்த உலகமே அறியும்.இதெல்லாம் ஓவரான கற்பனை ஆகாது , நாராயண பக்தா!.