சட்ட நிபுணர்: சுல்தானின் விருப்பத்துக்கு இடமில்லை

bariஒருவர்  மந்திரி  புசாராவதற்கு  சட்டமன்றத்தில்  பெரும்பான்மை  ஆதரவு  பெற்றவரா  என்பதே  ஒரே  தகுதியாகும்  என்கிறார்  அரசமைப்பு  வல்லுனர்  அப்துல்  அசீஸ்  பாரி.

“ஆட்சியாளரின் தனிப்பட்ட  விருப்பத்துக்கு  அங்கு  இடமில்லை”, என்றாரவர்.

“ஒருவர்  எம்பி, பிஎம்(பிரதமர்) அல்லது சிஎம்(முதலமைச்சர்)  ஆவதற்கு  பெரும்பான்மை  ஆதரவு  என்பதே ஒரே  தகுதி. ஆணா, பெண்ணா,  கல்வித்  தகுதி  ஆகியவற்றுடன்  ஆட்சியாளரின்  விருப்பத்துக்குக்கூட  அங்கு  முன்னுரிமை  கிடையாது”, என்றவர்  விளக்கினார்.

பெரும்பான்மை  இருக்குமிடத்தில்  எம்பி “மலாய்க்காரராக,  முஸ்லிமாக” இருக்க  வேண்டும்  என்ற  நிபந்தனையைக்கூட  ஒதுக்கி  வைக்க  முடியும்  என  அப்துல் அசீஸ்  கூறினார்.

பக்கத்தான்  ரக்யாட்  கட்சிகளின்  பெயர்ப் பட்டியலில்  இல்லாத  ஒருவரைகூட  சுல்தான்  மந்திரி  புசாராக  நியமனம்  செய்ய  முடியும்  என்று  கூறும்  சிலாங்கூர்  அரண்மனை  அறிக்கை  குறித்து  கருத்துரைத்தபோது  அவர் இவ்வாறு  கூறினார்.