பெங்காலான் குபோர் அம்னோ வெற்றி

 

P.Kubor umno retainsஇன்று நடைபெற்ற பெங்காலான் குபோர் இடைத் தேர்தலில் அம்னோ அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்புர்வமற்ற தகவல் கூறுகிறது.

வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவல்படி, பெரும்பான்மை 1,200 லிருந்து 1,300 க்குள் இருக்கலாம்.

மாலை மணி 5.00 வரையில் பதிவு செய்யப்பட்ட 23,929 வாக்காளர்களில் 72 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.

பாஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் ஆரவாரம் ஏதுமின்றி நடைபெற்றது. பாஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் நெருக்கடியின் காரணமாக பக்கத்தான் பங்காளிகளான டிஎபி மற்றும் பிகேஆர் ஆகியவற்றிடமிருந்து வலுவான ஆதரவு இல்லாமல் போனது ஆகியவற்றுக்கிடையில் இந்த இடைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.