ஒரே வகைப் பள்ளிகள் மட்டுமே இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு வலைப்பதிவில் பதிவிட்டிருக்கும் செராஸ் அம்னோ தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி. தாய்மொழிப் பள்ளிகள் இன உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகவும் அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டிய தருணம் வந்து விட்டதாகவும் கூறினார்.
“இனங்களைப் பிரித்துவைக்க நினைத்த பிரிட்டிஷ் காலனிய நிர்வாகத்தில் உருவான தாய்மொழிப் பள்ளிகள் இனி நாட்டுக்குத் தேவையற்றவை”, என்றாரவர்.
இதை மற்ற இனத்தாரின் தாய்மொழிகளைக் “கொல்லும்” முயற்சி எனக் கருதக்கூடாது. அம்மொழிகளைத் தேசிய பள்ளிகளிலேயே கற்றுக்கொடுக்கலாம் என்றார்.
1946-இல் அம்னோ தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து எல்லா இனங்களும் அமைதியாக வாழ்வதை உறுதிப்படுத்தவே அது போராடி வந்துள்ளது.
“எல்லா இனங்களின் நலனையும் கருத்தில்கொண்ட அம்னோ எந்த இனத்தையும் ஒதுக்கிவைத்ததில்லை”, என சைட் அலி கூறினார்.
ஒரேவகைப் பள்ளிகளைக் கொண்டிருப்பது மற்ற இனங்களை ஒடுக்குவதாகாது என்ற அவர், கல்விமுறையின் மூலமாகத்தான் தேசிய ஒற்றுமையை அடைய முடியும் என அம்னோ நம்புவதாகக் குறிப்பிட்டார்.
இது என்ன புது விளக்கம்? தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டுவது என்பது அம்னோவின் குறிக்கோள் (Ultimate Objective).
உலகம் பல மொழிகளை கற்க அலையுது. இது என்னமோ வேற மொழி வேண்டாம் எங்குது! அவனுக்கு இங்கிலிஸ்சாவது தெரியுமா? உலக ஊமையன் மொழிய கத்துகிட்டா நீதி மன்றதில் தப்பிக்கலாம். கை சாடையில் தண்டனையும் வழங்கலாம். பல்லின மொழிதான் இந்நாட்டின் அழகு. அதை வேண்டாம் என்பவன். ஒரங் அஸ்லி கம்பத்துல உடும்பு பிடிக்கலாம்.
தொடக்கக் கல்வியானது ஒரு குழந்தையின் முதல் மொழியில் அமைந்திருப்பதே சிறப்பு. கல்வி மாணவரை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். ஆசிரியரையோ கல்வித்திட்டத்தையோ மையமாகக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. இதைத்தான் ஐ.நா.வின் யுனெஸ்கோ சொல்கிறது. இதுவே 21ஆம் நூற்றாண்டின் தேவையும் ஆகும். தமிழ் கற்போம்; தமிழில் கற்போம்.
தாய்மொழிப்பள்ளிகள் தரமானக் கல்வியைக் கொடுக்கின்றன. தேசிய மொழிப்பள்ளிகள் ஒரு தரமற்றக் கல்வியைக் கொடுக்கின்றன என்பது ஊரறிந்த விஷயம். அந்தக் கேவலத்தை மறைப்பதற்கு இப்படியெல்லாம் உங்களைப் பேச வைக்கிறது!
இவர் கூற்று தவறானது தாய் மொழி பள்ளிகள் சகோதரத்துவத்தை உருவாகுகிறது .ஆதலால் தாய் மொழி பள்ளிகள் வேண்டும்.
உம்நோகரனுக்கு புத்தி பேதலித்து மங்கி மூளையே வேலை செய்யாமல் ஏதோ ஏதோ உளறிக்கிட்டு இருக்கானுங்க இதுலே இந்த mic கொட்டையே இல்லாத கட்சி இவனுக்கு ஆதரவா கையையும் முத்தமிட்டு முடிந்தால் உருவி விடுவானுங்க…………………….
இந்த மாமிச உண்ணி சைட் அலி என்பவன் உண்மையில் ஒரு அரை வேக்காடு.பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் உருவாக்கப் பட்ட தாய் மொழிப் பள்ளிகள் அகற்றப்பட வேண்டும் என்று சொல்லும் இந்த மாதரியான மர மண்டைகள் பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப் பட்ட ‘தேச நிந்தனை சட்டத்தை’ மட்டும் ஏன் அகற்றக்கூடாது என்று அடம் பிடிக்கின்றன.சுதந்திரத்துக்குப் பின்னரும் தாய் மொழிப் பள்ளிகளின் போதனைகளை மலேசிய அரசியலமைப்பு சட்டம் அறுதியிட்டு கூறுகிறது.அப்படியிருக்க தேச நிந்தனை சட்டம் இவன் மேலேயும் பாய வேண்டும்.அதுதான் நியாயம்.
இந்நாட்டின் இன ஒற்றுமைக்கு தடையாக இருப்பதே அம்னோத்தான், அதனை முதலில் தடைச்செய்ய வேண்டும்.
ரொம்ப நல்ல யோசனைதான் ! அப்போ ஜவாக்காரன் – ஜாவி எழுதும் போயிடும் ! வெள்ளைக்காரன் எழுதும் போயிட்டா எந்த எழுத்த வச்சிகிட்டு பாடம் நடத்த போறீங்க ?
சொந்த புத்தியும் கிடையாது,சொல் புத்தியும் கிடையாது , சொந்த எழுத்தும் கிடையாது, போங்கடா , வேற வேல இருந்த போய் பாருடா !!!
இந்த அம்னோகாரன் கருத்துக்கு ! mic ,ppp ,ipf ,நல்லா கட்சி ,தனேந்திரன் கட்சிகள் பலத்த ஜால்ரா தட்டும் என்று எதிர்பார்க்கலாம் ! இந்த நாட்டு மக்களின் ஒற்றுமையை கெடுத்ததே இந்த அம்னோதான் ! குறிப்பாக மகாதிமிர் மகாதிர் ! வாய் திறக்கும் நேரம் எல்லாம் ”கவோம் பெண்டாதாங்” சொல்லியே பிரித்தான் !
முட்டாள் ங்க கிட்ட எவ்வளவுதான் பேசினாலும் நாம் தான் மாயர்கள் சொல்லுவானுங்க…..உண்மையில் சொல்ல போனா அம்னோ தான் இனம் பிரச்சனையை தூண்டுகிறது ..இது உலகம் அறிந்த உண்மை…….
தேசிய மொழி மலேசிய மொழியாகவே இருக்கட்டும். ஆனால், பள்ளிகளில் ஒரே மொழிக் கொள்கை என வரும்போது, நாட்டின் முக்கிய மூன்று மொழிகளான மலாய், சீனம், தமிழ் ஆகிய மொழிகளை பள்ளிகளில் கட்டாய பாடமாக்கிவிட்டு, உலக மொழியான ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து, அனைத்து பள்ளிகளையும் ஆங்கிலப் பள்ளியாக மாற்றுவதே சிறந்த வழி.
தெரியாமல்தான் கேட்கிறேன், அராபிய மொழிக்கு இங்கு என்ன வேலை? பங்களாதேஷ் மொழியும் நம் நாட்டில் பெரும்பாலான இடங்களில் காலூன்றிவிட்டது.
ஒரே மொழி பள்ளிக்கு போவதற்கு முன்..! சத்து மலேசியா என்று அரசாங்கம் சொல்கிறது இங்கே மூன்று இனமும் பாகுப்பாடு இன்றி எல்லா சலுகைகளையும் பெறுகிறதா…? நீ எல்லாம் ஆலோசனை சொல்ல வந்துட்டே..?
நம்மை எல்லாம் மடையர்களாக்கி இந்தொநேசியாவைப்போல் ஆட்சி புரியவே எல்லாம். நம்மை எப்படி எல்லாம் மட்டம் தட்ட முடியுமோ அதற்க்கு மேலும் நடக்கும்.
இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தாமல் தடுப்பது பல்லின பள்ளிகள் அல்ல ; இந்நாட்டு அரசியல் தீவிரவாதிகளே. அரசியல்வாதிகள் வாக்குகளுக்காகத் தங்களின் இனத்தின் அரசியல் பலம் குறைவதை மனதில் கொண்டு மீடியாக்கள் மூலமாக வெளிப்படுத்தும் இனவாதமே பிற இனத்தவர்களின் வெறுப்பிற்குக் காரணியாக விளங்குகிறது.
மொழியை அழித்துவிட்டால் அந்த இனத்தை இலகுவாக அழித்துவிடலாம் என்பது ஹிட்லரின் வாதம். ஹிட்லரையும் ஹிட்லரின் இனவழிப்பு சித்தாந்தத்தையும் மிஸ்டர் சைட் அலி அல்ஹாப்ஷி விரும்பி வரவேற்கிறாரா?
பிற தாய்மொழிப் பள்ளிகளை ஒழித்துவிட்டு , அம்மொழிப் பாடங்களைத் தேசியப் பள்ளியிலேயே கற்பிக்கலாம் என்று ஆலோசனையை முன் வைப்பவரின் உள்நோக்கத்தை அறியா முட்டாள்கள் அல்லர் நாங்கள்.
இதே எண்ணத்தைத்தான் மகாதீர் காலத்தில் வேறுவிதமாகச் சொன்னார்கள். அதாவது ஒரே வளாகத்தில் மூவ்வினத் தாய்மொழிப் பள்ளிகளும் இயங்கும் திட்டம். இந்தத் திட்டத்தின்வழி மற்ற தாய்மொழிப் பள்ளிகளின் வளர்ச்சியை மெல்ல மெல்ல துடைத்தொழித்து நாளடைவில் இல்லாமலாக்குவது என்பதாகும். இந்த சதியைப் புரிந்துகொள்ள முடியாத டத்தோஶ்ரீ சாமிவேலு இந்தத் திட்டத்தை ஆதரித்ததற்குச் சொன்ன காரணம் இந்தத் கூட்டு வளாகப் பள்ளிகளின் திட்டத்தின் வாயிலாகத் தமிழ்ப்பள்ளிகள் அதிக பலனடையும் என்று சொன்னார். நல்லப் பள்ளிச் சூழல், நல்ல விளையாட்டு மைதானம், பாட உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், இன ஒற்றுமை போன்ற சாதக பலன்களைக் காணலாம் என்று சொன்னார். நல்ல வேளையாக அந்தத் திட்டம் சீனர்களின் ஆதரவின்மையினால் செயல்படுத்த முடியாமல் போனது.
பல வகையிலிலும் தாய்மொழிப் பள்ளிகளை ஒழிக்கவே அம்னோ அரசு முயன்று வருகிறது. அதற்காகப் புது புது திட்டங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ளலாம். அவற்றை எல்லாம் வெற்றி கொள்ளத் தாய்மொழிப் பற்றுள்ளவர்களாகவும் கல்வி விசயத்தில் சீனர்களோடு ஒன்றிணையக்கூடியவர்களாகவும் நம்மவர்கள் இருக்க வேண்டும். முன் யோசனையும் விழிப்புணர்வுமற்ற இனம் மலேசியா போன்ற நாட்டில் தன் முகவரியை இழந்துவிடும் வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளதை அறிந்து ,உணர்ந்து ,விவேகமாக நடந்துகொள்ள வேண்டும்.
இவன் மட்டும் சொல்லவில்லை ஈ.வெ.ர.நாய்கண் கூட சொன்னான் தமிழ்மொழி காட்டுமிறான்டி மொழி,இது தேவை இல்லை போன்று.மீடியாக்களை வரவழைத்து அறிவிப்பும் கொடுத்தானே பேஷா.அதே அவன் தாய் மொழியை இழிந்து பேசியிறுப்பின் உயிரோடு கொழுத்தியிறுப்பான்.நாரயண நாராயண.
ஒரு உண்மையை மறைக்க இன்னொரு பொய் கூறும் இந்த அம்னோ தறுதலைகள் கண் குருடா, காது செவிடா?. அரசாங்கத்தின் இன பாகுபாடே மலேசியர்களின் ஒற்றுமைக் குறைவிற்கு காரணம் என்று நாங்கள் சொல்லும் உண்மையை மறைக்க தாய் மொழி பள்ளிகளின் மீது பழியைப் போடுவது கண் இருந்தும் குருடனாகவும், காதிருந்தும் செவிடனான குருமூட்டைப் போல உள்ளது.
ஒரே மதம், ஒரே இனம், பேசுவதும் ஒரே மொழிதான். அப்படியிருந்தும் ஏன் கிளந்தானில் பாஸ் ஆட்சி. சிலாங்கூரில் பி.கெ.ஆர் ஆட்சி. இந்நாட்டில் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்தார்கள். இத்தனைக்கும் மலாய் மொழியை முறையாக பேசவே தெரியாது. ஆனால், மலாய்க்காரர்களை சகோதரர்களாக மதித்த இனம் எம் இனம். இன்று மலாய் நன்றாகப் பேசுகிறோம், படிக்கிறோம். ஆனால், ஒற்றுமை இல்லை. ஏன்? ஏன்? ஏன்? இதை மேலே பலர் சொல்லியுள்ளார்கள்.
அம்னோ காரணை ஏன் நாம் குறைசொல்கிறோம் தெரியுமா,காரணம் நமக்கு வும்ணோ போன்று ஓர் இன பாதுகாவலன் கிடையாது என்பதே,நாராயண நாராயண.
காயீ… நீ அடங்கவே மாட்டாய்… திமிரும், சண்டித்தனமும், அறிவின்மையும், அடுத்தவனை இழிவுபடுத்துஙதும், தேவையே இல்லாமல் பெரியாரை இழுப்பதும் உன்னுடைய சின்னப் புத்தியைக் காட்டுகிறது. உன் இந்து மத நூல்கள் என்ன தமிழ் மொழியை புகழ்ந்துள்ளதா? உன் சாஸ்திரங்களில் தமிழ் மொழியை நீச பாஷை என்று எழுதவில்லையா? தமிழனை இழித்தும் பழித்தும் எழுதவில்லையா? இதைப் பற்றி எழுதாமல், பேசாமல் ஒரு பெட்டையைப்போல் இருக்கும் காயீ நீயெல்லாம் ஒரு நடுநிலை பதிவாளனா? உனக்கு மானம், ரோசம் இருந்தால் இதற்கு பதில் எழுது. ஆரிய அடிவருடியே… தமிழ் மொழி நீச பாஷையா? இல்லையா? தமிழ் மொழியை தாஸனின் பாஷை என்று உன் ஹிந்து சாஸ்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா இல்லையா? பதில் எழுதிவிட்டு மற்றதைப் பேசு.
நமது யு.ஐ.டி.எம். பல்கலைக்கழகமும் ஒரே இன மாணாக்கர்களைக் கொண்டு செயல்படுவதால் அது இந்நாட்டு இன ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் அதனால் அதனை மூடி விடலாம் என்றால் இந்த உம்னோ அறிவிலி ஏற்றுக் கொள்வானா?.
காயீ… நீ ஆரியன், பார்பனியன் . தமிழன் எனும் வட்டத்திற்குள் தனே புகுந்துகொண்டு குள்ளநரி வேலையைக் காட்டாதே. நாம் என்று உன்னையும் தமிழனைப்போல் காட்டிக்கொள்ள முயற்சிக்காதே. போதும் உன் ஆரிக்கூத்து!
ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு என்று சொன்னது இதுதானோ?.
ஒற்றுமை தாய் மொழி பள்ளிகளால் கெடவில்லை. கூறு கேட்ட இன வெறி, மத வெறி பிடித்த அரசு கொள்கைகளால் தான் உருவாகிறது. இது போன்ற காரியத்தில் இப்போ இந்த கூற்றை சொன்னவன் மிக புகழ் பெற்றவன். இதையெல்லாம் நான் “ஒற்றுமை” என்னும் ஆயுதம் கொண்டே தகர்க்க இயலும்.
சொல்வது வேறு. அதன் உள்நோக்கமும் தூரநோக்கும் வேறு. இதை நம் நன்கு புரிந்து கொண்டு , ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்… இல்லையெனில்….
நீங்க ஏம்ப அடிச்சிக்கிறீங்க, நல்ல படம் போட்டிருக்காங்க, கன்னத்தில் கைவைச்சிறக்கிற சின்ன பையன் ” ஐயோக்-ஐயோ இந்த மாதிரி முட்டாப்பசங்களுக்கு ஆட்சி செய்யற” இடத்திலே பொறந்திடேனேனு சளிச்சிகிற மாதிரி.
தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி சீனா மொழி பள்ளிகளை குறி வைத்து பேசுவது போல இருக்கு அதே சாக்கில் தமிழ் பள்ளிகளையும் எடுத்து விட்டால் இவனுக்கு பிடித்த ஜாவி ,அரபிக் ,பங்களா என்று அவனுக்கு பிடித்த பாஷை நம் மிது திணித்து அதில் இந்திய மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுக்க முடியாமல் திக்கி திணறுவார்கள் அதைவைத்து பல்கலை கழகத்தில் இடம் தர வேண்டி இருக்காது என்று தப்பான எண்ணத்தோடு இது போன்ற சர்ச்சைகளை கிளப்பி விடுவதே அம்னோ கரனின் வேலை . தமிழர்கள் விட்டு கொடுத்தாலும் சீனர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் .