பிரதமர் துறைக்கு முன் எப்போதையும்விட அதிக ஒதுக்கீடு

pmdபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  நிர்வாகத்தில்  பிரதமர்துறைக்கான  செலவினம்  பல்கிப்  பெருகியுள்ளது. டாக்டர்  மகாதிர்  முகம்மட்  காலத்தில்  செலவிடப்பட்டதைவிட   இப்போது  அதற்கு  அதிகம்  செலவிடப்படுகிறது.

2003-இல் அதற்கு  ரிம3.6 பில்லியன்  ஒதுக்கப்பட்டது. 2015  பட்ஜெட்டில்  அதைவிட  நான்கு  மடங்கு.

கருவூலத்தின்  மதிப்பீட்டின்படி,  2015-இல்  பிரதமர்துறைக்கு  ரிம19.1 பில்லியன்  செலவிடப்படலாம்  எனத் தெரிகிறது. இவ்வாண்டில்  அதற்குச்  செலவிடப்பட்ட  தொகை  ரிம16.5 பில்லியன்.