அம்னோ தலைவர் ஒருவர், எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவான ‘Rakyat Hakim Negara’ இயக்கத்துக்கு எதிராக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
குதப்புணர்ச்சி வழக்குமீதான அன்வாரின் மேல்முறையீடு அக்டோபர் 28, 29 ஆகிய நாள்களில் கூட்டரசு நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வருவதையொட்டி அவ்வியக்கத்தை பிகேஆர் இளைஞர் பகுதி ஏற்பாடு செய்துள்ளது.
அன்வார் “தனிப்பட்ட உரிமை கொண்டவரல்ல” என செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சையட் அலி அல்ஹப்ஷி கூறினார்.
“பிகேஆர் இளைஞர் பகுதியின் இயக்கம் நீதித்துறையைச் சிறுமைப்படுத்துகிறது. அதற்கெதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்னைப் பொருத்தவரை நாட்டில் சட்ட அமைப்பு நியாயமாகவே உள்ளது.
“நீதித் துறையின் நேர்மை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. எல்லாத் தரப்பினரும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டாக வேண்டும்”, என்றவர் தம் வலைப்பதிவில் கூறினார்.
இவன் எவ்வளவு வாங்கினான் என்று தெரியவில்லை!
மறுபடுயும்?????
ஒட்டு வாங்கும் பொழுது குனிவான் பாருங்க.
நீதி மன்ற திர்ப்பு எல்லோரும் கேக்கணும் இவர் சொல்லித்தான் இப்ப என்னக்கு தெரியுது.இவர் ரொம்ப ரொம்ப அறிவாளி.நீதி மன்ற திர்ப்பை காவல் துறையே கேக்கவில்லை.
ஆமாம். ‘இது’ சொல்வது ரொம்பச் சரி, அப்படியே எதிர்க்கட்சிகளையும் ஒடுக்கி விடுங்கள். அப்புறம் உங்க பாடு ஒரே ஜோர். ஒரே கொண்டாட்டம்தான் போங்க, மொட்டை போஸ்..!
மலேசியன் சரியான உதாரணம்,வாழ்க நாராயண நாமம்.
இவர் முகத்தில் பயம் வந்து விட்டது.
இவன் உத்தமன் குதர்புனர்ச்சியின் பொது பக்கத்தில் நின்று விளக்கு பிடித்தவன் .
உங்களைப் பொருத்தவரை நாட்டில் சட்ட அமைப்பு நியாயமாகவே இருக்கட்டும்! மற்றவர்களுக்கும் நியாயம் வேண்டும் அல்லவா!
நீதி நியாயத்தின் அர்த்தத்தினை அறியாமல் நியாயமென்று பேச வந்துவிட்டான். அம்னோ பேரவை நெருங்கி வருகிறதல்லவா!!! ஊமைகூட பேச முயற்சிப்பான்.