பீர் விழாக்களில் கலந்துகொண்டு “அழிவுக்கு” ஆதரவுகொடுக்கும் அரசியல் தலைவர்களை பெர்லிஸ் முன்னாள் முப்தி முகம்மட் அஸ்ரி சைனுல் அபிடின் சாடினார்.
ஒரு நல்ல தலைவர் “அழிவுக்கு” ஆதரவுதேட மாட்டார் என முகம்மட் அஸ்ரி கூறினார்.
“இந்நாட்டில் அரசியல் தலைவர்கள் பீர் விழாக்களை ஊக்குவிக்க இயக்கம் நடத்துகிறார்களே, எப்படி? எந்தக் கலாச்சாரத்தின், எந்த நியாயத்தின் அடிப்படையில் அவ்வாறு செய்கிறார்கள்?”, என்றவர் வினவினார்.
இம்மாதத் தொடக்கத்தில் பக்கத்தான் தலைவர்கள் பலர் சர்ச்சைக்குரிய அக்டோபர்பெஸ்ட் பீர் குடிக்கும் விழாக்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பல எம்பிகளும் சட்டமன்ற உருப்பினர்களும் பீர் விழாக்களில் நேரடியாகக் கலந்துகொண்டு அவ்விழா ஏற்பாட்டாளர்களுக்கு “ஆதரவையும் காண்பித்து”க் கொண்டார்கள்.
ஊக்குவிக்க மாட்டார்கள். குடிக்க மட்டும் தான் செய்வார்கள்!
இவர் சொல்லுவதில் உண்மைகள் இருக்கின்றன இன்று பாருங்கள் பிரிக்பில்டிலும் மற்ற இடங்களிளும் மது கடைகள் பெருகி கொண்டே போகிறது .இந்த் மூத்திரத்தை வாங்கி வந்து நாடு சாலையில் உட்காந்து குடிகாரர்கள். இடை பார்பதற்கு எனக்கே வெட்கமாக இருக்கிறது
இந்நாட்டில் அரசியல் தலைவர்கள் குறிப்பாக அம்னோ தலைவர்கள் மதுவை ஊக்குவிக்க மாட்டார்கள் ஆனால் மாதுவை ஊக்கு வைக்க தவற மாட்டார்கள் என்பதுதான் உலகத்துக்கே தெரியுமே.
“மது ஒழிக
இன்றைய ஸ்டார் பத்திரிகையில் ஒரு விளம்பரம் பார்த்தேன். முன்று இளைஞர்கள் கையில் மது பாட்டிலுடன்.வாழ்க எதிர்கால சமுதாயம்.
நல்லதைச் சொன்னால் யாரும் கேட்பதில்லை. அதில் இதுவும் ஒன்று.
நான் உள்துறை அமைச்சராக இருப்பேனேயானால், ஒரு சட்டம் கொண்டு வர முயற்சிப்பேன். குடித்துவிட்டு, சாலைகளில் யாராவது தடுமாறியவண்ணம் நடந்து செல்வாரேயானால், அவரை சுட்டுத் தள்ளிவிடுங்கள், என போலீசாருக்கு உத்தரவிடுவேன். இப்படி செய்வதினால், அதாவது ஒரு இரண்டு பேரை சுட்டுத் தள்ளினால், அதற்கப்புறம் எவனும் குடித்துவிட்டு தெருவுக்கு வரமாட்டான். அதுமட்டுமல்ல, நம் நாட்டில் மதுவே இருக்காது. ஏனென்றால், நமக்கு பிடிக்காதவர்களை போல்லீசாரிடம் லஞ்சம் கொடுத்து தீர்த்து கட்டச் சொல்வோம். நமது போலீஸ்தான் இதில் கைதேர்ந்தவர்கள் ஆயிற்றே. ஒரு சில நல்லவர்களும் பலியாவதை நாம் பார்க்க சகிக்காமல், ஒட்டுமொத்த மதுவிற்கே ஆப்பு வைப்போம். எப்படி ஐடியா?
இதைப்பற்றி பேசும் முகமட் அஸ்ரி ஏன் ISIS பற்றி பேசவில்லை? குடிகாரர்கள் தங்களையும் தங்களை சார்ந்தவர்களக்கும் கேடு விளைவித்து கொள்கின்றனர் ஆனால் ISIS ?
ஒரு பொதுத்தேர்தலின்போது, முன்னாள் துணையமைச்சர் தேவமணியை எதிர்த்து கேமரன் மலை சிம்மாதிரி போட்டியிடுகிறார். நண்பர் சிம்மாதிரிக்கு ஆதரவாக, அவருடன் சேர்ந்து, காப்பிக் கடைகளில் ஒட்டு வேட்டையாடிக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு பத்து சீனர்கள் மேசையில் அமர்ந்தவாறு மது அருந்திக் கொண்டிருந்தனர். அருகே சென்று, தனக்கு ஆதரவு கொடுக்குமாறு நண்பர் கேட்டுக் கொண்டார். அதற்கு அவர்கள், தங்களோடு உட்கார்ந்து சிறிது ‘தண்ணி’ போட்டுவிட்டு செல்லுமாறு கூறினார். நண்பரோ, தனக்கு குடி பழக்கம் இல்லை, மன்னியுங்கள், என்றார். அதற்கு அவர்கள் ஒட்டுமொத்தமாக, ‘ஆ,…..குடிக்க மாட்டாயா? ‘tak bolih pakai , pergi ‘, எத்தனை முறை போட்டியிட்டாலும், உன்னால் ஜெயிக்க முடியாது, போ…’ என கூறி விரட்டிவிட்டனர். குடி, குடியை என்பார்கள்.ஆனால் இங்கே…..குடி இல்லையெனில், தேர்தலில் நிற்க கூட தகுதி இல்லை.
அட போங்கப்பா !!! ISIS போராட்டவாதிகளாம் !!!
அவர்களுக்கு மதுவை இனாமாக அனுப்பி வைப்பது முன்னாள் பிரதமர் ஒருவருடைய மகனின் நிறுவனமாம்.
அவர்களுக்கு மாதுவை இனாமாக அனுப்பி வைப்பது முன்னாள் மலாக்கா மாநில முதலமைச்சர் ஒருவருடைய நிறுவனமாம்.
அவர்களுக்கு ஆயுதங்கள் விநியோகம் செய்வது எந்த நிறுவனம் யாருக்கு சொந்தமானது ??????????
நல்ல தலைவர்கள் மதுவை ஊக்குவிக்க மாட்டார்கள் !!! ஓ அப்படியா ?
நல்ல தலைவராக இருந்தால் ஊக்குவிப்பதை தவிர்த்து மது தயாரிக்கும் நிறுவனங்களை மூட சொல்ல வேண்டும் .அதுதான் தலைவனுக்கு அழகு .
சிங்கம் அவர்களின் ஐடியா சூப்பர். இரும்படிக்கின்ற இடத்தில் ஈயிக்கு என்ன வேலை என்பது போல குடிப்பவர்கள் மத்தியில் குடிக்காதவர்கள். இருப்பது அவமரியாதையைத் தேடித் தரும்.