சீனா சிறிலங்காவில் கொண்டுள்ள ஆதிக்கத்தை கருத்தில் கொண்டு, இந்தியா தமது பாதுகாப்பு தொடர்பான வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
பாரிய இராணுவ உதவிகளை வழங்கி சீனா சிறிலங்காவில் தமது ஆதிக்கத்தை நிலைபெற செய்துள்ளது.
இது தொடர்பில் இந்தியா சிறிலங்காவிடம் எச்சத்திருந்தாலும், அந்த எச்சரிப்பு கருத்தில் கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
சிறிலங்காவின் இராணுவ பலத்தை அதிகரிக்கும் வகையிலான பாரிய உதவிகளை இந்தியா வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான தன்மூப்பான செயல் இது.இந்தியாவோடு ஒரு மாநிலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் 7 கோடி தமிழர்களுக்கு எதிரான தமிழின எதிர்ப்பின் உச்சக் கட்டம் இது.இதையும் கேட்டுக் கொண்டு அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வழக்கம் போல கத்திக் கொண்டுதான் இருப்பார்கள்.செயலில் இறங்க மாட்டார்கள்.சரித்திரம் கண்ட உண்மை இது.எப்படியிருந்தாலும் அந்த இரண்டு நாடுகளிடமிருந்து ஈழத் தமிழர்களுக்கு எதிரான இராணுவ தளவாடங்களை பெற்றுக்கொள்வதில் அந்தக் குட்டித் தீவின் நரித்தனம் வெற்றிப் பெற்றுள்ளது.இந்தியாவின் வெளிவிவகார ஆலோசகன் கேணத்தனமான,ஆபத்தான யோசனைகளை இந்திய நடுவண் அரசுக்கு ஆலாபனை செய்து கொண்டிருக்கிறான் போல் தெரிகிறது.இது இந்தியாவின் எதிர்கால பாதுகாப்புக்கு அச்சுறுத்தலே.ஈழம் என்றொரு நாட்டை உருவாக்கி அதனோடு ஒத்துழைத்து போகுதல் ஒன்றே எதிர்கால இந்தியாவின் தென் பகுதி பாதுகாப்புக்கு உத்திரவாதமாக அமையும்.அதை தவிர மற்ற யோசனைகள் அனைத்தும் இந்தியாவுக்கு ஆப்புதான்.
கத்தி திரைப்படத்துக்கு காட்டு கத்து கத்தும் இவர்கள் , இந்திய அரசு தமிழர் இனத்துக்கு செய்யும் துரோகத்துக்கு ஒரு காட்டு காட்டலாமே ?
இந்தியா கையால் ஆகாத கபோதி நாடு. சிங்கப்பூரின் திறமைகூட கிடையாது. பேருக்குத்தான் 1.2 பில்லியன் மக்கள் தொகை.